வனிதா தான் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.
இந்நிலையில், வனிதா தான் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, சின்னத்திரை பிரபலமான பிரஜின் நடிக்கும் படத்தில் தான் நடிக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
#newyear #newbeginnings #Directorzionnext
MABINS Production 's #ProductionNo1
Welcome on board @actorprajin1
Directed by @DirectorZion 🎬
Produced by 💰
Salon Symon@PROSakthiSaran new film shoot Film shoot begins #godbless pic.twitter.com/NmahsIk8Kz— Vanitha Vijaykumar (@vanithavijayku1) January 3, 2022