Categories
சினிமா

கிடைச்சதெல்லாம் விட்டுட்டேன்… இனிமே விடமாட்டேன்…. அடுத்த ரவுண்டுக்கு தயாரான வனிதா…!!!

நடிகை வனிதா விஜயகுமார், கிடைத்த வாய்ப்பை விட்டுவிட்டதாகவும், விட்டதை பிடிக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான வனிதா விஜயகுமார் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை விட்டு குழந்தைகளை கவனிப்பதில் பிஸியானார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

இந்த முறை கதாநாயகியாக இல்லாமல், வில்லி மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில்  நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில், “தில்லு இருந்தா போராடு” என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வனிதா விஜயகுமார் பேசியதாவது, “திரையுலகில் எனக்காக கிடைத்த இடத்தை விட்டுவிட்டேன்.

முட்டாள்தனமாக இருந்து விட்டேன். அதை தாமதமாக உணர்ந்திருக்கிறேன். விட்ட இடத்தை பிடிப்பேன். இத்திரைப்படத்தில், பஞ்சாயத்து பரமேஸ்வரி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். வில்லியாக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. தொடர்ந்து வில்லியாக நடிக்க தீர்மானித்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |