தன்னை அவதூறாக பேசியதாக குற்றம் சுமத்தி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் 1.25 கோடி ரூபாய் நஷ்டஈடாக கேட்டுள்ளார்.
சமூக வலைத்தள நேரலை விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஒருமையில் தரக்குறைவாக பேசியதாக கூறி நடிகை வனிதாவிடம் ரூ.1.25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தது சர்ச்சை ஆனதை தொடர்ந்து அது குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்தார். இதனையடுத்து வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
லட்சுமி ராமகிருஷ்ணனை விவாத நிகழ்ச்சி ஒன்றில் வனிதா ஒருமையில் அவதூறாக பேசினார். இந்தநிலையில் வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சமூகவலைதளத்தில் அதனை பகிர்ந்த வனிதா தனது குடும்ப விவகாரத்தில் தலையிட லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு உரிமை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.