வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை மையம் வடக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை தொடரும் எனவும் கூறியுள்ளது. கேரளா, கர்நாடகாவில் மிக கனமழையும், ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதீத மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கோவா மற்றும் மத்திய பிரதேசத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நீலகிரியில் அதி கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.