Categories
கிரிக்கெட் விளையாட்டு

வான்கடே மைதானத்தில் கட்டுப்பாடுகளுடன் …ஐபில் போட்டிகளை நடத்த …அனுமதியளித்த மகாராஷ்டிரா அரசு …!!!

மகாராஷ்டிராவின் ஊரடங்கு விதிகள் நடைமுறையில் உள்ளதால் , மும்பையில் நடைபெறும்  ஐபிஎல் போட்டிக்கு தடை இருக்காது, என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸின்  இரண்டாவது அலை கடந்த சில நாட்களாகவே வேகம் எடுக்க தொடங்கியது. இதனால் அம்மாநிலத்தில் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த ஊரடங்கானது  இரவு 8 மணிக்கு  தொடங்கி மறுநாள் காலை 7 மணி வரையும் ,வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்காக ஏப்ரல் 30ம் தேதி வரை  அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் 14வது ஐபிஎல் போட்டி 6 நகரங்களில் உள்ள மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 6 நகரங்களில் ஒன்றான மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த மைதானத்தில் வரும்  10ம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை 10 ஐபிஎல்  போட்டிகள் நடத்த பட  உள்ளது .

ஆனால் தற்போது அம்மாநிலத்தில் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டதால், ஐபிஎல் போட்டி நடத்துவதில் சிக்கல்  ஏற்படுமோ  என்ற அச்சம் காணப்பட்டது. இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில மந்திரியான நவாப் மாலிக் கூறும்போது, மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு, எந்த ஒரு தடையும் மாநில அரசு விதிக்கப்படாது. எனவே ஐபிஎல் போட்டிகள்  நடத்துவதற்கு அம்மாநில அரசு அனுமதி அளித்தது. ஐபிஎல் போட்டிகள் கொரோனா  கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்றும் , போட்டியில் பங்குபெறும் வீரர்கள் கொரோனா  பாதுகாப்பு வளையத்திற்குள் ,கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Categories

Tech |