Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வங்கி கடன் இவ்வளவு ரூபாய்…? சிறந்த மாவட்டம் ஆகனும்…. கலெக்டரின் தகவல்…..!!

திருப்பத்தூரில் 4,214.91 கோடி ரூபாய் வங்கி கடன் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்தியன் வங்கி, மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் சிவன் அருள் வெளியிட இந்தியன் வங்கியின் துணை பொது மேலாளர் கிருஷ்ணராஜ் அதை பெற்றுக் கொண்டார். இதுகுறித்து கலெக்டர் சிவன் அருள் கூறியபோது  வங்கியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக கடன் வழங்க முன்வரவேண்டும் என்றும் முதன்மை மாவட்டமாக விளங்க வங்கியாளர்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் விவசாய கடனாக 2,663.89 கோடி ரூபாயும் ,  500.72 கோடி ரூபாய் சிறு மற்றும் குறு தொழில் போன்றவற்றிற்கு கடனாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இதர முன்னுரிமை கடனாக 1,050.30 கோடி ரூபாய் என மொத்தம் 4,214.91 கோடி ரூபாய் இலக்காக கலெக்டர் சிவன் அருளால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கடன் தொகையை குறித்த காலத்திற்குள் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |