Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு வரவே இல்லை” விவசாயிகள் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…‌.!!

பாரத பிரதமரின் விவசாய நிவாரண தொகை வராத காரணத்தினால் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாரதப் பிரதமரின் விவசாய நிவாரண தொகையான 2000 ரூபாயை இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் 50-க்கும் அதிகமான விவசாயிகளுக்கு தனியார் வங்கியில் தங்கள் கணக்கில் இரண்டு தவணைகளும் பிரதமர் விவசாய நிதி வரவில்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வங்கி மேலாளரிடம் பேசி விவசாயிகள் கணக்கிற்கு பணம் விரைவில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். எனவே விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |