2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வங்கி ஊழியர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழையகாயல் செபஸ்தியார் தெருவில் ஆனந்தராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏரல் அருகில் இருக்கும் ஆறுமுகமங்கலம் கூட்டுறவு வங்கியில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தராமன் ஏரலில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு தனது மனைவி அந்தோணியம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும் போது எதிரே காளிமுத்து என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் தம்பதிகள் மீது மோதி விட்டது.
இந்த விபத்தில் ஆனந்தராமனுக்கு கால், மூக்கு மற்றும் தோள்பட்டை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.