Categories
மாநில செய்திகள்

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் ….!!

வங்கி ஊழியர்கள் வருகையை 50 சதவீதமாக குறைத்து திருத்தப்பட்டு வங்கி செயல்பாட்டு வழிமுறை வெளியிடப்பட்டதை தொடர்ந்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வெளியிட்டது. அதில் வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மாநில வங்கியாளர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இதர வங்கி நிர்வாக அதிகாரிகளுடன் தொழிலாளர் நலத்துணை ஆணையர் ஆகஸ்ட் 11-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் திருத்தப்பட்ட வழிமுறையை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிமுறை வெளியிடப்பட்டது. அதில் ஊழியர்கள் 100% வேலைக்கு வரவேண்டும் என்ற வழிமுறை மாற்றப்பட்டு, 50 சதவீத ஊழியர்கள் மாற்று முறையில் வருகை தரவேண்டும். மீதமுள்ள அனைத்து வழிமுறைகளும் தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |