Categories
உலக செய்திகள்

முன்னாள் அதிபர் கைது…. வன்முறையில் ஆதரவாளர்கள்…. ஆலோசனையில் தலைவர்கள்…!!

ஜேக்கப் ஜுமா கைதானதால் அவரின் ஆதரவாளர்கள் வன்முறை  சம்பங்களில் ஈடுபட்டுள்ளதை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தற்போதைய ஜனாதிபதி இராணுவத்தினரை இறக்கியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா அவரின் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் பற்றி பேச மறுத்ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  கைதானார். இதனைத் தொடர்ந்து நீதிபதி அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விடுத்துள்ளார். இதன் விளைவாக இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து ஜேக்கப் ஜூமாவின் ஆதரவாளர்கள் வன்முறை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு 72 பேரை கொன்றும் 800 கடைகளை சூறையாடியும் உள்ளனர். அதிலும் முக்கியமாக Johannesburg மற்றும் KwaZulu-Natal நகரங்கள் வன்முறையாளர்களினால் அதிகமாக சூறையாடப்பட்டன.

இதனால் அத்தியாவசிய பொருட்கள், உணவுக் கிடங்குகள் போன்றவற்றில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பங்களில் 1200 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சுழலை கட்டுப்படுத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதி Cyril Ramaphosa  போலீசார்களுக்கு உதவியாக 25000 ராணுவத்தினரை இறக்கியுள்ளார். மேலும் அவர் முக்கிய தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் நல்ல சுமூகமான முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |