Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திரும்பவும் வேண்டும்…. வன்னியர் சங்கத்தினர் சாலை மறியல்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

வன்னியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் வன்னியர்களுக்கு கல்வியில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை திரும்பவும் அமல்படுத்த வேண்டும் என கூறியும், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் காந்தி சிலை அருகாமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது.

இதற்கு நகரச் செயலாளரான ஞானசேகரன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் நகரத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து இந்த போராட்டத்தில் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி உள்ளனர்.

Categories

Tech |