வாந்தி, தலைசுற்றல்,கடுமையான பித்தம், மயக்கம் போன்ற பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய இஞ்சி லேகியம் தயாரிக்கும் முறைப்பற்றி பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்:
இஞ்சி -100 கிராம் தோல் நீக்கி துருவியது
பனைவெல்லம் தூள் -150 கிராம்
ஏலக்காய் தூள் -3 கிராம்
நெய் – தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் இஞ்சி துருவலை போட்டு நன்றாக கிளற வேண்டும். அதனுடன் பனைவெல்லம் சேர்த்து கிளறவும். பின்பு ஏலக்காய்த்தூள் போட்டுக் கிளறவேண்டும். இதைச் செய்யும்போது மிதமான தீயில் வைத்துக் கிளறி லேகிய பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். லேகியமாக மாறிவிட்டதும், இறக்கி ஆறவைத்து கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இரவில் படுக்க செல்லும் முன்பு ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்து வெந்நீர் குடித்து வந்தால் தலை சுற்றல், வாந்தி, பித்தத்தால் ஏற்படும் மயக்கம் போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விடும்.