Categories
மாநில செய்திகள்

வந்துட்டேன் …மீண்டும் வந்துட்டேன்னு சொல்லு… அரசியலில் கலக்கும் மன்சூரலிகான்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்த மன்சூரலிகான் மீண்டும் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது அதனால்  அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த தொகுதியின் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செய்து தருவோம் என்று வாக்குறுதி அளித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் கோவையில் உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே நாம் தமிழர் கட்சியில்  உறுப்பினராக இருந்து    அதன்பிறகு  விலகி விட்டார் .

அதன்பிறகு அவர் தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியை தொடங்கினார் .  தற்போது நடை பெற இருக்கும்  சட்டமன்றத் தேர்தலில் அவர்  கோவையில் உள்ள தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் .இந்நிலையில்  நேற்று அவர்  திடீரென்று  தேர்தலிருந்து   விலகுவதாக   ஆடியோ ஒன்றை வெளியிட்டார் . அதில் அவர் இந்தத் தேர்தலில் போட்டியிட பாய் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்றும் ஓட்டை பிரிக்க தான் நிக்கிறீங்க என்று ம் வாடகைக்கு வீடு கொடுக்க மாட்டேன் என்று  என்னிடமே வந்து பத்துல 8 பேர் கேட்கிறார்கள். அதனால் எனக்கு மிகவும் வருத்தமாக  உள்ளது .

அதனால்  தேர்தலில்  நான் போட்டியிடவில்லை சென்னைக்கு செல்கிறேன் என்று அவர் கூறியுள்ளார் . ஆனால்  மீண்டும் தான் தொண்டாமுத்தூர்தொகுதியில்   போட்டியிடுகிறேன் என்று கூறி சின்னம் ஒதுக்குவது  பற்றி வட்டாட்சியர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை  நடத்தியுள்ளார்.இதையடுத்து  அவருக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது . மேலும் அவர் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்று கபாலி படத்தின் பஞ்ச் வசனத்தை பேசி என்னை சோர்வடைய செய்ய நினைப்பவற்கு மத்தியில் நான் ஜெயித்துக் காட்டுவேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இது என் சொந்த ஊரு என் சொந்த மண்ணில் நிற்காமல் வேறு எங்கு நான் நிற்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார் .

Categories

Tech |