Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”வராஹா கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு” பாதுகாப்புதுறை அமைச்சர் அர்ப்பணித்தார்…!!

முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஐ.சி.ஜி.எஸ் வராஹா என்ற கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

முழுக்க முழுக்க மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கப்பலை சென்னை துறைமுகத்தில் நாட்டுக்கு அர்ப்பணித்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் , மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.இந்த கப்பல் சுமார் 26 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டதாகும் ,  எல்லா ரோந்து கப்பலை போல் ரேடார் மற்றும் தொலைத்தொடர்பு வசதி இதிலும் உள்ளது.

மேலும் இதில் ஒரு ஹெலிகாப்டர் மற்றும் நான்கு அதிவேகமாகச் செல்லக்கூடிய ,  மீட்பு பணியின் போது பயன்படுத்தக்கூடிய படகுகளும் அடங்கியுள்ளது. வராஹா கப்பலில் இதில் இருக்கக்கூடிய  ஹெலிகாப்டர் இரவிலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மேலும் இதில் 30mm துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு மணி நேரத்தில் 50 கிலோ மீட்டரை கடக்கும் வேகம் கொண்டுள்ளது.

Categories

Tech |