நாசா தயாரித்த புதிய மென்பொருளின் மூலம் 2020 முதல் 2150 ஆம் ஆண்டு வரை கடல் மட்டத்தில் ஏற்படும் உயர்வு மாற்றங்களை தெளிவாக காட்டும் படியான வரைபடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
நாசா உருவாக்கிய புதிய மென்பொருளின் மூலம் 2020 முதல் 2150 ஆம் ஆண்டு வரை கடலில் ஏற்படும் உயர்வு மாற்றங்கள் குறித்து தெளிவாக விவரிக்கும் படியான interactive என்னும் வரைபடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வரைபடத்தின் படி வருகின்ற 2030ஆம் ஆண்டுக்குள் லண்டனிலுள்ள சில பகுதிகள் நிரந்தரமாகவே கடலுக்கடியில் மூழ்குவதற்கு வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள்.
மேலும் இந்த வரைபடம் கடல் நீரோட்டங்களின் சுழற்சி மற்றும் பனி உருகுவது போன்ற முக்கிய தகவல்களை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியதாவது, பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் புவி வெப்பம் இயற்கை சீற்றங்களை உருவாக்குவதற்கு காரணமாக அமைகிறது என்று கூறியுள்ளார்கள்.