Categories
தேசிய செய்திகள்

வரைவுஅறிக்கை நடவடிக்கைக்கு தடைவிதிக்க உயர்நிதிமன்றம் மறுப்பு …!!

சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு வரைவு அறிக்கையை  தடை கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020ஐ வெளியீட்டு இருக்கும் மத்திய அரசு, அது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் கே.ஆர் செல்வராஜ்குமார், தியாகராஜன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு வரைவு அறிக்கையின் மொழிபெயர்ப்பை பிராந்திய மொழிகளில் வெளியிடாமல் வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வரைவறிக்கை மீதான மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு நேற்று நீதிபதிகள் MM.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் வரைவறிக்கை நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். வழக்கு விசாரணையை நாளைக்கு (இன்று) ஒத்திவைத்து மத்திய அரசு பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Categories

Tech |