Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 10…!!

செப்டம்பர் 10  கிரிகோரியன் ஆண்டு 253 ஆம் நாள்.

நெட்டாண்டு 254 ஆம் நாள்.

ஆண்டு முடிவு மேலும் 112 நாள்.

இன்றைய தின நிகழ்வுகள்

1419 – பர்கண்டி கோமகன் ஜான் பின்னாளில் பிரான்சின் மன்னராகப் பதவியேற்ற ஏழாம் சார்லசினால் கொல்லப்பட்டார்.

1509 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், 109 பள்ளிவாசல்கள் அழிந்தன. 10,000 பேர் வரை இறந்தனர்.

1515 – தாமஸ் வோல்சி கருதினாலாக நியமிக்கப்பட்டார்.

1570 – எசுப்பானிய இயேசு சபை மதகுருக்கள் அமெரிக்காவின் இன்றைய வர்ஜீனியாவில் தரையிறங்கினர்.

1759 – பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.

1780 – இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்: திப்பு சுல்தானின் படைகளுக்கும், பிரித்தானிய கிழக்கிந்தியப் படைகளுக்கும் இடையே காஞ்சிபுரம் அடுத்துள்ள பொள்ளிலூரில் நடந்த போரில் பிரித்தானிய படை பேரிழப்புகளை சந்தித்தது.

1798 – சென். ஜோர்ஜெசு கேய் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரித்தானிய ஒண்டுராசு எசுப்பானியாவைத் தோற்கடித்தது.

1823 – சிமோன் பொலிவார் பெருவின் அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.

1846 – எலியாஸ் ஓவே தையல் இயந்திரத்துக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1858 – “55 பண்டோரா” என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1898 – ஆஸ்திரியாவின் அரசி பவேரியாவின் எலிசபெத் கொலை செய்யப்பட்டார்.

1918 – உருசிய உள்நாட்டுப் போர்: செஞ்சேனை கசான் நகரைக் கைப்பற்றியது.

1919 – போலந்து, அங்கேரி, செக்கோசிலோவாக்கியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகளின் விடுதலையை ஆஸ்திரியாவும் அதன் கூட்டு நாடுகளும் அங்கீகரித்தன.

1937 – நடுநிலக் கடலில் பன்னாட்டுக் கடற்கொள்ளை பற்றிய பிரச்சினையைத் தீர்க்க ஒன்பது நாடுகள் மாநாடு நடத்தின..

1939 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியாவின் ஒக்சுலி என்ற நீர்மூழ்கி தவறுதலாக பிரித்தானியாவின் டிரைட்டன் நீர்மூழ்கியினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

1939 – இரண்டாம் உலகப் போர்: கனடா செருமனி மீது போரை அறிவித்து, நேச நாடுகளான போலந்து, பிரான்சு, ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, ஆத்திரேலியா ஆகியவற்றுடன் இணைந்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய இராணுவம் மடகாசுகரில் தரையிறங்கி மடகாஸ்கர் சண்டையில் நேச நாடுகளின் தாக்குதல்களை மீள ஆரம்பித்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: ஆக்சே நடவடிக்கையின் போது, செருமனியப் படைகள் உரோமை மீதான ஆக்கிரமிப்பை ஆரம்பித்தது.

1960 – எத்தியோப்பியாவின் அபீபி பிக்கிலா உரோமில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மாரத்தான் ஓட்டப்போட்டியில் வெறுங்காலுடன் ஓடித் தங்கப் பதக்கம் பெற்றார்.

1965 – இந்தியா-பாகிஸ்தான் போர், 1965: அம்ரித்சர் நகரை பாக்கித்தான பீரங்கிப் படையினர் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

1967 – கிப்ரால்ட்டர் மக்கள் பிரித்தானியாவின் கீழ் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.

1974 – கினி-பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.

1976 – பிரித்தானிய விமானம் ஒன்று யுகோசுலாவியாவின் சாகிரேப் நகரில் வேறொரு விமானத்துடன் மோதியதில் 176 பேர் உயிரிழந்தனர்.

1977 – பிரான்சில் கடைசித் தடவையாக கழுத்து துண்டிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

2000 – சியேரா லியோனியில் இரண்டு கிழமைகளுக்கு மேலாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆறு பிரித்தானியப் போர்வீரர்களை பிரித்தானிய இராணுவம் நடத்திய பராசு நடவடிக்கையில் விடுவித்தனர். உள்நாட்டுப் போர் அங்கு முடிவுக்கு வந்தது.

2000 – இலங்கை, மட்டக்களப்பு நகர முன்னாள் முதல்வர் செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.

2002 – சுவிட்சர்லாந்து, ஐநாவில் முழு உறுப்பு நாடாக இணைந்தது.

2006 – ஈழப்போர்: முகமாலை முன்னரங்கப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 119 பேர் படுகாயம் அடைந்தனர்.

2007 – 1999 அக்டோபர் இராணுவப் புரட்சியை அடுத்து, ஏழாண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த பாக்கித்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார்.

2008 – வரலாற்றில் மிகப்பெரும் அறிவியல் கருவியான ஐரோப்பிய அணு ஆய்வு நிறுவனத்தின் பெரிய ஆட்ரான் மோதுவி ஜெனீவாவில் இயங்க ஆரம்பித்தது.

2017 – கரிபியன் தீவுகளில் தாக்கிய இர்மா சூறாவளியினால் 134 பேர் இறந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1487 – மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) (இ. 1555)

1857 – ஜேம்சு எட்வார்டு கீலர், அமெரிக்க வானியலாளர் (இ. 1900)

1862 – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், தமிழறிஞர், உரையாசிரியர், கவிஞர் (இ. 1914)

1887 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1961)

1892 – ஆர்தர் காம்ப்டன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1962)

1909 – வ. நல்லையா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1976)

1912 – பசப்பா தனப்பா ஜாட்டி, இந்தியாவின் 5வது குடியரசுத் துணைத் தலைவர் (இ. 2002)

1912 – மார்க் அந்தோனி பிரேசுகர்டில், பிரித்தானிய-ஆத்திரேலிய-இலங்கை மார்க்சியப் புரட்சியாளர் (இ. 1999)

1920 – சி. ஆர். ராவ், இந்திய-அமெரிக்க கணிதவியலாளர், புள்ளியியலாளர்

1929 – ஆர்னால்ட் பால்மர், அமெரிக்கக் குழிப்பந்தாட்ட வீரர், தொழிலதிபர் (இ. 2016)

1934 – பி. எம். சுந்தரம், தமிழக இசையியல் அறிஞர்

1937 – ஜேரட் டயமண்ட், அமெரிக்க உயிரியலாளர்

1957 – எஸ். கே. தேவமணி, மலேசிய அரசியல்வாதி

1957 – சுனந்தா முரளி மனோகர், இந்திய-பிரித்தானியத் திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 2017)

1958 – கிரிஷ் கொலம்பஸ், அமெரிக்க இயக்குநர்

1960 – கொலின் பிர்த், ஆங்கிலேய நடிகர்

1964 – ஜாக் மா, சீன தொழில் முனைவர்

1965 – அதுல் குல்கர்ணி, இந்தியத் திரைப்பட நடிகர்

1971 – மேஜர் காந்தரூபன், விடுதலைப் புலி உறுப்பினர் (இ. 1990)

1975 – விவேகா, தமிழகத் திரையிசைப் பாடலாசிரியர்

1978 – மஞ்சு வாரியர், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1980 – ஜெயம் ரவி, தமிழ்த் திரைப்பட நடிகர்

1984 – சின்மயி, தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி

இன்றைய தின இறப்புகள்

கிமு 210 – சின் சி ஹுவாங், சீனாவின் 1வது பேரரசர் (பி. கிமு 260)

1797 – மேரி உல்சுடன்கிராஃப்ட், ஆங்கிலேய மெய்யியலாளர், எழுத்தாளர் (பி. 1759)

1898 – பவேரியாவின் எலிசபெத் (பி. 1837)

1915 – பாகாஜதீன், இந்திய மெய்யியலாளர், எழுத்தாளர் (பி. 1879)

1920 – ஆலிவ் தோமசு, அமெரிக்க நடிகை (பி. 1894)

1925 – எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை, இந்திய அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர், வானியலாளர் (பி. 1865)

1983 – அ. க. செட்டியார், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1911)

1997 – பாக்கீர் மாக்கார், இலங்கை அரசியல்வாதி (பி. 1917)

2005 – எர்மன் போண்டி, ஆத்திரியக் கணிதவியலாளர், அண்டவியலாளர் (பி. 1919)

2008 – வி. கே. கானமூர்த்தி, இலங்கை நாதசுரக் கலைஞர் (பி. 1948)

இன்றைய தின சிறப்பு நாள்

அமெரிக்கப் பழங்குடியினர் மரபு நாள் (கயானா)

குழந்தைகள் நாள் (ஒண்டுராசு)

தேசிய நாள் (ஜிப்ரால்ட்டர்)

ஆசிரியர் நாள் (சீனா)

  • உலக தற்கொலைத் தவிர்ப்பு நாள்

Categories

Tech |