பிரபல நடிகை வரலட்சுமி டபுள் ஆக்ஷனில் கலக்கியுள்ள விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை வரலட்சுமி. சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் எப்படி பாதுகாப்பாக இருக்கிறதோ அதுபோன்று தடுப்பூசி கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்று அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார். பிரபல நடிகை வரலட்சுமி டபுள் ஆக்ஷனில் கலக்கியுள்ள இந்த விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இதேபோல் பல நடிகர், நடிகைகளும் தமிழக அரசும் தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/tv/CPr3ADoA7mT/?utm_medium=copy_link