தமிழகத்தில் கொரோனா காலத்திலும் வரலட்சுமி நோன்பு நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் வரலட்சுமி நோன்பு நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் வரலட்சுமி நோன்பு பெண்கள் விரதம் இருந்து பாலி பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதம் கொடுத்து மகிழ்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் எளிமையாக நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது. சென்னை அம்பத்தூரில் உள்ள ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி எஸ்ம் பாபு என்பவர் வீட்டில் வரலட்சுமி நோன்பு உற்சாகமாக கொண்டாடப்பட்டது காலை முதல் விரதமிருந்து பாட்டு பாடி சிறப்பு பூஜைகள் நடத்தி இதனை கொண்டாடினர். அதனை தொடர்ந்து பெண்களுக்கு மஞ்சள் கயிறு உள்ளிட்ட பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டன.