Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 18 ..!!

 இன்றைய நாள்               : பிப்ரவரி 18ம் நாள்

கிரிகோரியன் ஆண்டு : 49 -ஆம் நாளாகும்.

ஆண்டு முடிவிற்கு         :  316 நாட்கள் உள்ளன.

நெட்டாண்டு                      : 317 நாட்கள்

இன்றைய நிகழ்வுகள்:

1229 – 6வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக்கு குருதிய ஆட்சியாளர் அல்-காமிலுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டு எருசலேம், நாசரேத்து, பெத்லகேம் ஆகியவற்றை மீளப்பெற்றார்.

1332 – எத்தியோப்பியப் பேரரசர் அம்தா முதலாம் சேயோன் தெற்கு முசுலிம் மாகாணங்களில் தனது போர் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

1478 – இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னனுக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவரது மூத்த தமையன் கிளாரன்சு இளவரசர் ஜோர்ஜிற்கு இலண்டன் கோபுரத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

1637 – எண்பதாண்டுப் போர்: இங்கிலாந்தின் கோர்ன்வால் கரையில், எசுப்பானியக் கடற்படைக் கப்பல்கள் மிக முக்கியமான ஆங்கிலோ-டச்சு வணிகக் கப்பல்கள் 44 ஐ வழிமறித்துத் தாக்கி அவற்றில் இருபதைக் கைப்பற்றின. ஏனையவை அழிக்கப்பட்டன.

1745 – மத்திய சாவகத்தில் சுராகார்த்தா நகரம் உருவாக்கப்பட்டு, சுராகார்த்தா சுல்தானகத்தின் தலைநகராக்கப்பட்டது.

1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ரால்ஃப் அபகுரொம்பி தலைமையில் 18 பிரித்தானியக் கப்பல்கள் திரினிடாடை ஊடுருவின.

1832 – யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிவெள்ளி தோன்றியது.

1861 – இரண்டாம் விக்டர் இம்மானுவேல் இத்தாலியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1861 – மான்ட்கமரியில் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வில்லியம் சேர்மன் தலைமையிலான கூட்டுப் படைகள் தென் கரோலினாவின் மாநில அவையைத் தீயிட்டுக் கொழுத்தினர்.

1873 – பல்கேரியப் புரட்சித் தலைவர் வசீல் லெவ்சுக்கி சோஃபியா நகரில் உதுமானியர்களால் தூக்கிலிடப்பட்டார்.

1911 – முதலாவது அதிகாரபூர்வமான வான்வழி கடிதப் போக்குவரத்து இடம்பெற்றது. இந்தியாவின் அலகாபாத் நகரில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள நைனி நகருக்கு 6,500 கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டன.

1930 – சனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் கிளைட் டோம்பா புளூட்டோவைக் கண்டுபிடித்தார்.

1932 – சீனக் குடியரசிடம் இருந்து மஞ்சுகோவின் விடுதலையை சப்பான் மன்னர் அறிவித்தார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் யப்பானிய இராணுவம் சப்பானிய விரோத சீனர்களைத் தேடி அழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனிப் படையினர் வெள்ளை ரோசா இயக்கத்தினரைக் கைது செய்தனர்.

1946 – மும்பைத் துறைமுகத்தில் இடம்பெற்ற கடற்படை மாலுமிகளின் பம்பாய் கலகம் பிரித்தானிய இந்தியாவின் ஏனைய மாகாணங்களுக்கும் பரவியது.

1947 – பிரான்சியப் படையினர் அனோய் நகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். வியட் மின் படைகள் காட்டுக்குள் தப்பி ஓடினர்.

1957 – நியூசிலாந்தில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1957 – கென்யாவின் கிளர்ச்சித் தலைவர் தெதான் கிமாத்தி பிரித்தானியக் குடியேற்ற அரசினால் தூக்கிலிடப்பட்டார்.

1959 – நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1965 – காம்பியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1972 – கலிபோர்னியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருந்த அனைத்துக் கைதிகளினதும் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற அம்மாநிலத்தின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

1991 – இலண்டனில் ஐஆர்ஏ போராளிகள் படிங்டன், விக்டோரியா தொடருந்து நிலையங்களில் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

1992 – மகாமக குளம் நெரிசல்: கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மகாமக குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா கலந்துகொண்ட போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் வரை உயிரிழந்தனர்.

2001 – அமெரிக்கப் புலனாய்வாளர் ராபர்ட் ஆன்சென் சோவியத் ஒன்றியத்தின் உளவாளியாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். இவருக்குப் பின்னர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

2001 – இந்தோனேசியாவில் தயாக், மதுரா மக்களிடையே இனக்கலவரம் வெடித்தது. 500 பேர் வரையில் உயிரிழந்தனர். 100,000 மதுரா மக்கள் இடம்பெயர்ந்தனர்.

2003 – தென் கொரியாவில் சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.

2004 – ஈரான், நிசாப்பூர் நகரில் கந்தகம், பெட்ரோல், உரம் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று தீப்பிடித்து வெடித்ததில் 295 பேர் உயிரிழந்தனர்.

2007 – அரியானாவின் பானிப்பத் நகரில் விரைவுத் தொடருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

2010 – விக்கிலீக்ஸ் பிராட்லி மானிங் என்ற அமெரிக்க இராணுவ வீர்ர் ஒருவர் கொடுத்த இரகசிய ஆவணங்களின் முதல் தொகுதியை வெளியிட்டது.

2013 – பெல்சியத்தின் பிரசெல்சு வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற ஒரு கொள்ளைச் சம்பவத்தில் $50 மில்லியன் பெறுமதியான வைரங்கள் கொள்ளையிடப்பட்டன.

2014 – உக்ரைன் தலைநகர் கீவில் ஆர்பாட்டக்காரர்களுக்கும், காவல்துரையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 76 பேர் உயிரிழந்தனர்,

2014 – இராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.

2018 – ஈரானின் அசிமான் விமானம் 3704 சக்ரோசு மலைகளில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 65 பேரும் உயிரிழந்தனர்.

இன்றைய பிறப்புகள்:

கிமு 259 – சின் சி ஹுவாங், சீனப் பேரரசர் (இ. கிமு 210)

1201 – நசீருத்தீன் அத்-தூசீ, பாரசீக அறிவியலாளர் (இ. 1274)

1486 – சைதன்யர், இந்திய மதகுரு (இ. 1534)

1516 – இங்கிலாந்தின் முதலாம் மேரி (இ. 1558)

1745 – வோல்ட்டா, மின்கலத்தைக் கண்டுபிடித்த இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1827)

1836 – இராமகிருஷ்ணர், இந்திய ஆன்மிகத் தலைவர் (இ. 1886)

1838 – எர்ன்ஸ்ட் மாக், ஆத்திரிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ. 1916)

1860 – மா. சிங்காரவேலர், இந்தியப் பொதுவுடமைவாதி, தொழிற்சங்கவாதி, விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1946)

1877 – அலைசு கிரேசு குக், பிரித்தானிய வானியலாளர் (இ. 1958)1909 – சி. அருளம்பலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

1922 – அலெக்சாண்டர் செமியோனவ், உருசிய ஓவியர் (இ. 1984)

1925 – கிருஷ்ணா சோப்தி, இந்திய எழுத்தாளர் (இ. 2019)

1926 – வ. ஐ. சுப்பிரமணியம், தமிழக மொழியியல் அறிஞர் (இ. 2009)

1927 – அப்துல் ஹலீம் ஜாபர் கான், இந்திய சித்தார் கலைஞர் (இ. 2017)

1931 – டோனி மாரிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 2019)

1974 – ஜூலியா பட்டர்பிளை ஹில், அமெரிக்க சூழலியலாளர்

இன்றைய இறப்புகள்:

1294 – குப்லாய் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1215)

1405 – தைமூர், மங்கோலிய ஆட்சியாளர் (பி. 1336)

1546 – மார்ட்டின் லூதர், செருமானிய இறையியலாளர் (பி. 1483)

1564 – மைக்கலாஞ்சலோ, இத்தாலிய சிற்பி, ஓவியர் (பி. 1475)

1938 – மத்வேய் பெட்ரோவிச் பிரான்சுட்டீன், சோவியத் கோட்பாட்டு இயற்பியலாளர் (பி. 1906)

1967 – ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1904)

1990 – ரிச்சர்ட் டி சொய்சா, இலங்கை ஊடகவியலாளர் (பி. 1958)

2015 – டி. ராமா நாயுடு, தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1936)

இன்றைய சிறப்பு நாள்:

தேசிய சனநாயக நாள் (நேபாளம், 1951 ராணா வம்ச ஆட்சி ஒழிப்பு)

விடுதலை நாள் (காம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1965)

Categories

Tech |