வரலாற்றுச் சின்னங்களையும் கலைப்பொருட்களையும் மீட்டெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஈராக்கில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் மொசூல். இந்த நகரத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்த நகரை ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்பதற்காக போர் நடத்தப்பட்டது. அந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சின்னங்களும் கலைப்பொருட்களும் தீவிரவாதிகளால் அளிக்கப்பட்டன.
இதனை மீட்டெடுக்கும் முயற்சியாக யுனெஸ்கோவின் 75 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மீண்டும் சரி செய்யவும் மறு சீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.