ஆண்டு முடிவிற்கு மேலும் 343 (நெட்டாண்டுகளில் 344) நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
1506 – 150 சுவிட்சர்லாந்து பாதுகாப்புப் படைகளைக்கொண்ட முதற் தொகுதி வத்திக்கானை அடைந்தது.
1517 – முதலாம் செலீம் தலைமையில் உதுமானியர் மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து, இன்றைய எகிப்தைக் கைப்பற்றினர்.
1555 – ஆவா இராச்சியம் தவுங்கூ வம்சத்திடம் (இன்றைய மியான்மர்) தோற்றது.
1808 – பிரெஞ்சு இராணுவத்தினரின் முற்றுகையை அடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் போர்த்துகலில் இருந்து வெளியேறிய போர்த்துக்கீச அரச குடும்பத்தினர் பிரேசில் வந்து சேர்ந்தனர்.
1840 – பிரித்தானிய குடியேற்றவாதிகள் நியூசிலாந்தை அடைந்தனர்.
1849 – இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர்: பஞ்சாப், முல்தான் முற்றுகை ஒன்பது மாதங்களின் பின்னர் முடிவடைந்தது. கடைசி சீக்கியப் படை சரணடைந்தது.
1863 – உருசியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போலந்து, லித்துவேனியா, பெலரஸ் ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது.
1879 – ஆங்கில-சூலூ போர்: தென்னாபிரிக்காவின் சூலுப் படைகள் ஐசண்டல்வானாவில் வைத்து பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
1889 – கொலம்பியா கிராமபோன் வாசிங்டனில் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது.
1899 – ஆறு ஆத்திரேலியக் குடியேற்றப் பிராந்தியங்களின் தலைவர்கள் கூட்டமைப்பு பற்றி விவாதிக்க மெல்பேர்னில் கூடினர்.
1901 – 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி தனது 81வது அகவையில் காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்தானியாவின் மன்னரானார்.
1905 – இரத்த ஞாயிறு: சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உருசியப் பேரரசருக்கு எதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது. 200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1905 புரட்சி ஆரம்பமானது.
1906 – பிரிட்டிசு கொலம்பியாவின் வான்கூவர் தீவில் வலென்சியா என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் உயிரிழந்தனர்.
1915 – மெக்சிக்கோ, குவாதலஹாரா நகரில் தொடருந்து ஒன்று பள்லம் ஒன்றில் வீழ்ந்ததில், 600 பேர் உயிரிழந்தனர்.
1919 – உக்ரைன் மக்கள் குடியரசும், மேற்கு உக்ரைன் தேசிய குடியரசும் இணைந்தன.
1927 – உலகின் முதல் வானொலி வர்ணனை, ஹைபரியில் நடைபெற்ற ஆர்சனல்-செப்பீல்ட் யுனைடெட் கால்பந்து போட்டி ஒலிபரப்பாகியது
1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லிபியாவின் துப்ருக் நகரை நாட்சிப் படைகளிடம் இருந்து கைப்பற்றியது.
1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் சப்பானியரின் குண்டுவீச்சினால் பெரும் சேதமடைந்தது.
1945 – இலங்கையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதற்கான சோல்பரி ஆணைக்குழு முதன் முதலாக கொழும்பு நகர மண்டபத்தில் கூடியது.[1]
1957 – சினாய் தீபகற்பத்தில் இருந்து இசுரேல் வெளியேறியது.
1964 – கென்னத் கவுண்டா வடக்கு றொடீசியாவின் முதலாவது அரசுத்தலைவரானார்.
1968 – அப்பல்லோ 5 விண்கலம் முதலாவது நிலாக்கலத்தைத் தாங்கி விண்வெளிக்கு சென்றது.
1969 – சோவியத் தலைவர் லியோனீது பிரெசுனேவ் மீது மாஸ்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் அவர் காயமெதுவுமின்றித் தப்பினார்.
1973 – அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டது.
1973 – நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – நோபல் பரிசு பெற்ற சோவியத் இயற்பியலாளர் ஆந்திரே சாகரவ் மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
1987 – பிலிப்பீன்சு பாதுகாப்புப் படைகள் மணிலாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10,000–15,000 பேர் மீது சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
1992 – சாயீரின் தேசிய வானொலி நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அரசை பதவி விலகும்படி அறிவித்தனர்.
1999 – இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆத்திரேலிய கிறித்தவப் போதகர் கிரகாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
2003 – பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.
இன்றைய தின பிறப்புகள்
1561 – பிரான்சிஸ் பேக்கன், ஆங்கிலேய மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. 1626)
1573 – ஜான் டன்-கவிஞர், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1631)
1711 – யொகான் பிலிப் பப்ரிசியஸ், செருமனிய மதப் போதகர், தமிழறிஞர் (இ. 1791)
1788 – ஜார்ஜ் கோர்டன் பைரன், ஆங்கிலேயக் கவிஞர், நாடகாசிரியர் (இ. 1824)
1870 – சேசாத்திரி சுவாமிகள், தமிழகச் சித்தர் (இ. 1929)
1891 – அண்டோனியோ கிராம்ஷி, இத்தாலிய மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. 1937)
1898 – செர்கீ ஐசென்ஸ்டைன், உருசியத் திரைப்பட இயக்குநர் (இ. 1948)
1906 – ராபர்ட் ஈ. ஓவார்ட், அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. 1936)
1909 – ஊ தாண்ட், பர்மியக் கல்வியாளர், ஐநாவின் 3வது பொதுச் செயலர் (இ. 1974)
1926 – தி. வே. கோபாலையர், தமிழகத் தமிழறிஞர் (இ. 2007)
1976 – டி. எம். கிருஷ்ணா, தமிழகக் கருநாடக இசைப் பாடகர்
இன்றைய தின இறப்புகள்
1897 – ஐசக் பிட்மன், சுருக்கெழுத்து முறையைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (பி. 1813)
1901 – ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா (பி. 1819)
1922 – பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை) (பி. 1854)
1922 – சே. ப. நரசிம்மலு நாயுடு, தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர், பதிப்பாளர் (பி. 1854)
1947 – சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்துப் பன்மொழிப் புலவர் (பி. 1875)
1973 – லின்டன் பி. ஜான்சன், அமெரிக்காவின் 36-வது அரசுத்தலைவர் (பி. 1908)
2008 – ஹீத் லெட்ஜர், ஆத்திரேலிய நடிகர் (பி. 1979)
2014 – அ. நாகேஸ்வர ராவ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1924)
2018 – ஏ. ஈ. மனோகரன், ஈழத்துப் பொப் இசைப் பாடகர், நடிகர்
2018 – அர்சலா கே. லா குவின், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1929)