ஆண்டு முடிவிற்கு மேலும் 338 (நெட்டாண்டுகளில் 339) நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
1302 – கவிஞர் டான்டே அலிகியேரி புளோரன்சில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
1343 – திருத்தந்தை ஆறாம் கிளமெண்டு திருத்தந்தையின் அதிகாரத்தை நியாயப்படுத்தியும், பாவத்தண்டனைக் குறைப்பின் பயன்களை விளக்கியும் ஆணை ஓலையை வெளியிட்டார்.
1606 – வெடிமருந்து சதித்திட்டம்: கை பாக்சு மீது விசாரணைகள் ஆரம்பமாயின, சனவரி 31 இல் இவர் தூக்கிலிடப்பட்டார்.
1695 – உதுமானியப் பேரரசர் இரண்டாம் அகமது இறந்ததை அடுத்து இரண்டாம் முஸ்தபா பேரரசரானார்.
1785 – அமெரிக்காவின் முதலாவது பொதுப் பல்கலைக்கழகம் ஜோர்ஜியா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1820 – மிகைல் லசாரொவ் தலைமையிலான உருசியக் குழு அந்தாட்டிக்கா கண்டத்தைக் கண்டுபிடித்தது.
1825 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் இந்தியப் பிராந்தியத்தை (இன்றைய ஓக்லகோமா) அங்கீகரித்தது. இதன் மூலம் கிழக்கிந்தியர்களை கட்டாயமாக “கண்ணீர்த் தடங்களில்” இடம்பெயர வைக்க முடிந்தது.
1858 – இந்திய சிப்பாய்க் கிளர்ச்சி நிதிக்காக இலங்கையில் £2,771 நிதி சேகரிக்கப்பட்டது.[1]
1880 – தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.
1888 – தேசிய புவியியல் கழகம் வாசிங்டன், டி. சி.யில் அமைக்கப்பட்டது.
1915 – ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஹெயிட்டியை ஆக்கிரமித்தனர்.
1916 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சிய இராணுவத்திற்குக் கட்டாயமாக ஆள்சேர்க்கும் திட்டத்திற்கான சட்டமூலத்தை பிரித்தானிய அரசு நிறைவேற்றியது.
1918 – பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1924 – விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
1926 – ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.
1938 – நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகளின் 900-நாள் லெனின்கிராட் முற்றுகை முடிவுக்கு வந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.
1951 – அணுகுண்டு சோதனை நெவாடாவில் ஆரம்பமானது.
1962 – 1962 இலங்கை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: இலங்கையில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசுக்கு எதிராக இலங்கைப் படைத்துறையினர் சிலரால் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது.
1967 – பனிப்போர்: விண்வெளியில் அறுவாயுதத் தடை, நிலா மற்றும் ஏனைய வானியல்சார் பொருட்களை அமைதி வழிக்கும் பயன்படுத்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிவற்றுக்கிடையே வாசிங்டன், டி. சி.யில் கையெழுத்திடப்பட்டது.
1967 – எட்வேர்ட் வைட் உட்பட அப்பல்லோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தனர்.
1973 – வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது.
1996 – செருமனி முதல்தடவையாக பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாளை நினைவு கூர்ந்தது.
1996 – நைஜரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மஹமான் ஊஸ்மன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு இராணுவத் தளபதி இப்ராகிம் மயினாசரா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
2002 – நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இராணுவக் களஞ்சியமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 1,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
2011 – அரேபிய வசந்தம்: 2011 யெமனிய எதிர்ப்புப் போராட்டங்கள் சனாவில் ஆரம்பமாயின.
2013 – பிரேசிலின் சாண்டா மரியா நகரில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயினால் 242 பேர் உயிரிழந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1775 – பிரீடரிக் ஷெல்லிங், செருமானிய-சுவிட்சர்லாந்து மெய்யியலாளர் (இ. 1854)
1832 – லூயிஸ் கரோல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், நூலாசிரியர் (இ. 1898)
1859 – செருமனியின் இரண்டாம் வில்லியம் மி. 1941)
1890 – சுவாமி சகஜானந்தா, தமிழக ஆன்மிகவாதி, அரசியல்வாதி (இ. 1959)
1909 – ஜூலியன் ஆல்பிரட் ஸ்டியர்மார்க், அமெரிக்க தாவரவியலாளர் (இ. 1988)
1934 – எடித் கிரசான், பிரான்சின் 160வது பிரதமர்
1935 – கோமல் சுவாமிநாதன், தமிழக எழுத்தாளர், திரைப்பட இயக்குனர், இதழாளர் (இ. 1995)
1941 – பியேத்ரிசு தின்சுலே, நியூசிலாந்து வானியலாளர் (இ. 1981)
1942 – தசுக்கு ஓஞ்சோ, நோபல் பரிசு பெற்ற சப்பானிய மருத்துவர்
1945 – நெல்லைக் கண்ணன், தமிழகப் பேச்சாளர், பட்டிமன்ற நடுவர்
1946 – விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், தமிழக நாட்டுபுறவியலாளர், கிராமிய இசைக் கலைஞர், கல்வியாளர்
1956 – மிமி ரோகேர்ஸ், அமெரிக்க நடிகை
1956 – அமர் சிங், உத்தரப் பிரதேச அரசியல்வாதி
1965 – ஆலன் கம்மிங், ஈசுக்கொட்டிய-அமெரிக்க நடிகை
1974 – சமிந்த வாஸ், இலங்கைத் துடுப்பாளர்
1976 – சிரேயசு தள்பதே, மராத்தி, இந்திய நடிகர்
1979 – டேனியல் வெட்டோரி, நியூசிலாந்து துடுப்பாளர்
இன்றைய தின இறப்புகள்
1596 – பிரான்சிஸ் டிரேக், ஆங்கிலேய நாடுகாண் கடற்படைத் தலைவர் (பி. 1540)
1814 – யோகான் பிக்டே, செருமானிய மெய்யியலாளர் (பி. 1762)
1851 – ஜான் ஜேம்ஸ் அடுபன், பிரான்சிய-அமெரிக்க பறவையியல் வல்லுநர், ஓவியர் (பி. 1789)
1893 – மகா வைத்தியநாத ஐயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1844)
1901 – ஜூசெப்பே வேர்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1813)
1922 – நெல்லி பிளை, அமெரிக்க ஊடகவியலாளர் (பி. 1864)
1965 – விருகம்பாக்கம் அரங்கநாதன், இந்தி எதிப்புப் போராட்டத்தில் தீக்குளித்து உயிர்நீத்த போராளி (பி. 1913)
1967 – எட்வேர்ட் வைட், அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1930)
1979 – விக்டோரியா ஒகாம்போ, ஆர்ச்செந்தீனிய இலக்கியவாதி, எழுத்தாளர் (பி. 1890)
1983 – லூயிசு டி புனெசு, பிரெஞ்சு நடிகர் (பி. 1914)
2008 – சுகார்த்தோ, இந்தோனேசியாவின் 2வது அரசுத்தலைவர் (பி. 1921)
2009 – ரா. வெங்கட்ராமன், இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர் (பி. 1910)
2010 – ஜே. டி. சாலிஞ்சர், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1919)
2010 – ஓவர்ட் சின், அமெரிக்க எழுத்தாளர், வரலாற்றாசிரியர் (பி. 1922)
2014 – பீட் சீகர், அமெரிக்கப் பாடகர் (பி. 1919)
2014 – இரா. அ. பத்மநாபன், தமிழக ஊடகவியலாளர்
2015 – சார்லஸ். எச். டவ்ன்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1915)
2018 – இங்வர் காம்பரத், ஐ.கே.இ.ஏ நிறுவனர் (பி. 1926)
2020 – மல்லிகை சி. குமார், இலங்கை மலையக எழுத்தாளர், ஓவியர் (பி. 1944)