இன்றைய தின நிகழ்வுகள்
960 – சீனாவில் சொங் ஆட்சி ஆரம்பமானது. இவ்வாட்சி அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நீடித்தது.
1169 – சிசிலியை நிலநடுக்கம் தாக்கியதில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தோ அல்லது இறந்தோ போயினர்.
1488 – பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவுக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் முதலாவது ஐரோப்பியக் கடற்பயணத்தை ஆரம்பித்தார்.
1555 – ஜான் ரொஜர்சு தீயிட்டுக் கொல்லப்பட்டார். இவரே இங்கிலாந்தின் முதலாம் மேரியின் கீழ் முதலாவது சீர்திருத்தத் திருச்சபை ஆங்கிலேயத் தியாகியானவர்.
1703 – தோக்கியோவில் 46 சாமுராய்கள் தமது தலைவரின் இறப்பை ஈடு செய்யும் பொருட்டு சடங்குத் தற்கொலை செய்து கொண்டனர்.
1783 – ஐக்கிய அமெரிக்கா மீது தனது அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்தது.
1789 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுத்தலைவராக ஜார்ஜ் வாஷிங்டன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
1794 – முதல் பிரெஞ்சுக் குடியரசு முழுவதும் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஆனாலும் 1802 இல் பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகளில் aடிமை முறை மீண்டும் கொண்டுவரப்பட்டது.
1797 – எக்குவதோரில் நில நடுக்கம் ஏற்பட்டதில் 40,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1810 – கரிபியன் தீவுகளான குவாதலூப்பு பிரித்தானிய அரச கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
1834 – இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை சிலோன் ஒப்சேர்வர் முதன் முதலாக கொழும்பு ஒப்சேர்வர் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.[1]
1859 – கிரேக்க பைபிளின் 4ம் நூற்றாண்டுக் கையெழுத்துப்படி ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மான்ட்கமரியில், பிரிந்து சென்ற ஆறு அமெரிக்க மாநிலங்கள் இணைந்து அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பை உருவாக்கின.
1899 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர் மணிலா சமருடன் ஆரம்பமாகியது.
1932 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: கார்பின், மஞ்சூரியா, சப்பானிடம் வீழ்ந்தன.
1936 – முதற்தடவையாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்கத் தனிமம் உருவாக்கப்பட்டது.
1938 – இட்லர் தன்னை செருமனியின் இராணுவ உயர் தளபதியாக அறிவித்தார்.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் முடிவுக்கு வந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: “மூன்று பெரும் தலைவர்கள்” (சர்ச்சில், ரூசவெல்ட், ஸ்டாலின்) உக்ரேனில் கிரிமியாவில் நடந்த யால்ட்டா மாநாட்டில் சந்தித்தனர்.
1948 – இலங்கை பிரித்தானியப் பொதுநலவாயத்தின் கீழ் இலங்கை மேலாட்சி என்ற பெயரில் விடுதலை அடைந்தது.
1957 – இலங்கை விடுதலை நாளை திருகோணமலையில் துக்க நாளாக அனுட்டித்த தமிழ் மக்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் திருமலை நடராசன் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.[2]
1961 – அங்கோலா விடுதலைப் போர் ஆரம்பமானது.
1966 – நிப்போன் ஏர்வேய்சு விமானம் டோக்கியோ வளைகுடாவில் வீழ்ந்ததில் 133 பேர் உயிரிழந்தனர்.
1969 – பாலத்தீன விடுதலை இயக்கத் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்றார்.
1974 – ஐரியக் குடியரசுப் படை போராளிகள் இங்கிலாந்து யோர்க்சயர் நகரில் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றைக் குண்டு வைத்துத் தகர்த்ததில் ஒன்பது இராணுவத்தினரும் 3 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
1975 – சீனாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,041 பேர் உயிரிழந்தனர்.
1976 – குவாத்தமாலா மற்றும் ஒண்டுராசு நிலநடுக்கத்தில் 22,000 பேர் இறந்தனர்.
1977 – சிகாகோவில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் 11 பேர் உயிரிழந்தனர், 180 பேர் காயமடைந்தனர்.
1978 – இலங்கையின் முதலாவது நிறைவேற்று அரசுத்தலைவராக ஜே. ஆர். ஜெயவர்த்தனா பதவியேற்றார்.
1992 – ஊகோ சாவெசு தலைமையில் வெனிசுவேலாவில் அரசுத்தலைவர் கார்லோசு பேரெசுக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
1997 – இசுரேலில் இரண்டு உலங்குவானூர்திகள் வானில் மோதியதில் 73 பேர் உயிரிழந்தனர்.
1998 – ஆப்கானித்தானில் இடம்பெற்ற 5.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2,323 பேர் உயிரிழந்தனர்.
2003 – யுகோசுலாவியா அதிகாரபூர்வமாக செர்பியாவும் மொண்டெனேகுரோவும் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
2004 – மார்க் சக்கர்பெர்க் முகநூல் என்ற சமூக வலைத்தளத்தை ஆரம்பித்தார்.
2007 – ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் உருசிய-இந்திய “பிரமாசு” ஏவுகணை ஒரிசா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
2007 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற உலகின் மிகப் பெரிய கூட்டுப் பிரார்த்தனையில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
2015 – டிரான்சுஆசியா ஏர்வேசு விமானம் தாய்வான் தலைநகர் தாய்பெய்யில் கீலுங் ஆற்றில் விழுந்ததில் 43 பேர் உயிரிழந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1875 – லுட்விக் பிராண்டில், செருமானிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1953)
1891 – மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர், இந்திய அரசியல்வாதி, 2வது இந்திய மக்களவைத் தலைவர் (இ. 1978)
1893 – ரேமாண்ட் டார்ட், ஆத்திரேலியத் தொல்லியலாளர். புதை படிவ ஆய்வாளர், உடற்கூறியலாளர் (இ. 1988)
1895 – பி. ஏ. சுப்பையா பிள்ளை, தமிழக நாடக, திரைப்பட நடிகர்
1906 – கிளைட் டோம்பா, புளூட்டோவைக் கண்டுபிடித்த அமெரிக்க வானியலாளர் (இ. 1997)
1913 – றோசா பாக்ஸ், அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர் (இ. 2005)
1921 – பெட்டி ஃப்ரீடன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2006)
1922 – பீம்சென் ஜோஷி, இந்துஸ்தானி இசைப் பாடகர் (இ. 2011)
1943 – பத்மா சுப்ரமணியம், தமிழக பரத நாட்டியக் கலைஞர்
1943 – கென் தாம்ப்சன், பி நிரலாக்க மொழியைக் கண்டுபிடித்த அமெரிக்கர்
1948 – ராம் பரன் யாதவ், நேபாளத்தின் 1வது குடியரசுத் தலைவர்
1962 – ராஜசேகர், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1971 – ரோப் கோர்ட்றி, அமெரிக்க நடிகர்
1974 – ஊர்மிளா மடோண்த்கர், இந்திய நடிகை
இன்றைய தின இறப்புகள்
1747 – வீரமாமுனிவர், இத்தாலியத் தமிழறிஞர், கிறித்தவ மதப் பரப்புனர் (பி. 1680)
1817 – இமாம் ஷாமில், செச்சினிய முஸ்லிம் அரசியல், சமயத் தலைவர் (பி. 1797)
1894 – அடோல்ப் சக்ஸ், சாக்சபோனைக் கண்டுபிடித்த பெல்ஜியர் (பி. 1814)
1928 – என்ட்ரிக் லொரன்சு, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. 1853)
1934 – மதுசூதன் தாசு, ஒடிசா கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1848)
1946 – எர்பெர்ட்டு பேக்கர், தென்னாப்பிரிக்க கட்டிடக் கலைஞர் (பி. 1862)
1957 – பெரி. சுந்தரம், இலங்கை மலையக அரசியல்வாதி, கல்வியாளர், தொழிற்சங்கத் தலைவர் (பி. 1890)
1974 – சத்தியேந்திர நாத் போசு, இந்திய இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1894)
1985 – மே. வீ. வேணுகோபாலன், தமிழகப் பதிப்பாசிரியர், நூலாசிரியர் (பி. 1896)
1987 – கார்ல் ரோஜர்ஸ், அமெரிக்க உளவியலாளர் (பி. 1902)
2006 – பெட்டி ஃப்ரீடன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1921)
2007 – புளியங்குடி க. பழனிச்சாமி, தமிழக அரசியல்வாதி, பேச்சாளர் (பி. 1938)
2014 – அனிருத் லால் நகர், இந்திய பொருளியலாளர் (பி. 1930)
2015 – சின்னமணி, ஈழத்து வில்லிசைக் கலைஞர் (பி. 1936)
இன்றைய தின சிறப்பு நாள்
உலகப் புற்றுநோய் நாள்
ஆயுதப் போராட்ட நாள் (அங்கோலா)