Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 11…!!

பெப்ரவரி 11  கிரிகோரியன் ஆண்டின் 42 ஆம் நாளாகும்.

ஆண்டு முடிவிற்கு மேலும் 323 (நெட்டாண்டுகளில் 324) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 660 – யப்பான் நாடு பேரரசர் ஜிம்முவால் நிறுவப்பட்ட பாரம்பரியமான நாள்.

55 – உரோம் நகரில் உரோமைப் பேரரசின் முடிக்குரிய பிரித்தானிக்கசு இளவரசர் மர்மமான முறையில் இறந்தமை, நீரோ பேரரசராக வருவதற்கு வழிவகுத்தது.

244 – சிப்பாய்களின் கிளர்ச்சியை அடுத்து மெசொப்பொத்தேமியாவில் பேரரசர் மூன்றாம் கோர்டியன் கொல்லப்பட்டார்.

1534 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் இங்கிலாந்து திருச்சபையின் உயர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார்.

1626 – எத்தியோப்பியத் திருச்சபையின் தலைமைப் பீடமாக உரோமைத் திரு ஆட்சிப்பீடத்தை பேரரசர் முதலாம் செசேனியசு அறிவித்து, கத்தோலிக்கத்தை எத்தியோப்பியாவின் அரச சமயமாக்கினார்.

1640 – இலங்கையின் காலி நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர்.[1]

1659 – கோபனாவன் மீது சுவீடன் படைகள் நடத்திய தாக்குதல் பெரும் இழப்புடன் முறியடிக்கப்பட்டது.

1790 – அடிமை முறையை ஒழிக்குமாறு நண்பர்களின் சமய சமூகம் அமெரிக்கக் காங்கிரசில் முறையிட்டது.

1794 – அமெரிக்க மேலவையின் முதலாவது அமர்வு பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.

1802 – சின்ன மருது மகன் துரைச்சாமி உட்பட 73 பேர் மலாயாவின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய பினாங்கு) நாடு கடத்தப்பட்டனர்.

1823 – மால்டாவில் வல்லெட்டா நகரில் கிறித்தவக் கோவில் ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட விழா நெரிசலில் 110 மாணவர்கள் உயிரிழந்தனர்.

1826 – இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி இலண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

1855 – காசா ஐலு எத்தியோப்பியாவின் பேரரசராக மூன்றாம் தெவோதிரசு என்ற பெயரில் முடிசூடினார்.

1856 – அவத் இராச்சியத்தை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கைப்பற்றியது. அவத் மன்னர் வாஜித் அலி சா கைது செய்யப்பட்டு பின்னர் கொல்கத்தாவிற்கு நாடுகடத்தப்பட்டார்.

1858 – பெர்னதெத் சுபீரு லூர்து அன்னையை முதற்தடவையாகக் கண்ணுற்ற நிகழ்வு பிரான்சின் லூர்து நகரில் இடம்பெற்றது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அடிமைகள் விவகாரத்தில் எந்தவொரு மாநிலத்திலும் நேரடியாகத் தலையிடுவதில்லை என அமெரிக்கக் கீழவை ஏகமனதாக முடிவு செய்தது.

1873 – எசுப்பானிய மன்னர் முதலாம் அமேதியோ முடி துறந்தார்.

1929 – வத்திக்கான் நகர் உருவாக்குவதற்கான உடன்பாட்டை இத்தாலியும் திரு ஆட்சிப்பீடமும் எட்டின.

1933 – மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.

1938 – பிபிசி தொலைக்காட்சி தனது முதலாவது அறிபுனை தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் ஐரோப்பாவில் நேச நாடுகளின் இராணுவத்திற்கு தலைமை தாங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1953 – சோவியத் ஒன்றியம் இசுரேல் உடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது.

1959 – தெற்கு அரபு அமீரகத்தின் கூட்டமைப்பு (பின்னர் தெற்கு யேமன்) ஐக்கிய இராச்சியத்தின் காப்பு நாடாக உருவாக்கப்பட்டது.

1960 – சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1964 – கிரேக்கரும் துருக்கியரும் சைப்பிரசின் லிமாசோல் நகரில் போரிட்டனர்.

1971 – பனிப்போர்: பன்னாட்டுக் கடற்பரப்பில் அணுக்கரு ஆயுதங்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் கையெழுத்திட்டன.

1973 – வியட்நாம் போர்: வியட்நாமில் இருந்து முதல் தொகுதி அமெரிக்கப் போர்க் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

1978 – அரிசுட்டாட்டில், வில்லியம் சேக்சுபியர், சார்லஸ் டிக்கின்ஸ் ஆகியோரின் ஆக்கங்களுக்கான தடையை சீனா தளர்த்தியது.

1979 – அயத்தொல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானியப் புரட்சி வெற்றி பெற்றது.

1990 – 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் நெல்சன் மண்டேலா கேப் டவுன் விக்டர் வெர்ஸ்டர் சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்றார்.

1996 – குமாரபுரம் படுகொலைகள்: இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.

1997 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைப் பழுது பார்க்கும் டிஸ்கவரி விண்ணோடம் புறப்பட்டது.

1999 – புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்தை தாண்டிச் சென்றது. இவ்வாறான நிகழ்வு மீண்டும் 228 ஆண்டுகளின் பின்னரே நிகழும் என எதிர்வு கூறப்படுகிறது.

2008 – கிழக்குத் திமோர் கிளர்ச்சிப் படைகளின் தாக்குதலில் அரசுத்தலைவர் ஒசே ரமோசு-ஓர்ட்டா படுகாயமடைந்தார். கிளர்ச்சித் தலைவர் அல்பிரடோ ரெய்னார்டோ கொல்லப்பட்டார்.

2011 – அரேபிய வசந்தம்: ஒசுனி முபாரக்கைப் பதவி விலகக் கோரி எகிப்தியப் புரட்சி ஆரம்பமானது.

2013 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மூப்பு காரணமாக 2013 பெப்ரவரி 28 இல் பணி துறப்பார் என வத்திக்கான் அறிவித்தது.

2014 – அல்சீரியாவின் கிழக்கே சரக்கு விமானம் ஒன்று மலைப்பகுதி ஒன்றில் வீழ்ந்ததில் 77 பேர் உயிரிழந்தனர்.

2017 – வட கொரியா யப்பான் கடல் மேலாக ஏவுகணையை ஏவிப் பரிசோதித்தது.

2018 – சரதோவ் எயர்லைன்சு விமானம் 703 மாஸ்கோ அருகே வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 71 பேரும் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1847 – தாமசு ஆல்வா எடிசன், ஒளிக்குமிழ், கிராமபோன் ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1931)

1865 – எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை, இந்திய அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர், வானியலாளர் (இ. 1925)

1904 – எஸ். நடேசன், இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி, மேலவை உறுப்பினர் (இ. 1986)

1909 – ஜோசப் எல் மேங்கியூவிஸ், அமெரிக்கத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1993)

1911 – வ. சுப்பையா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இ. 1993)

1917 – சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)

1921 – அந்தோனி படியாரா, இந்தியக் கத்தோலிக்க திருச்சபைக் கர்தினால் (இ. 2000)

1924 – வி. வி. வைரமுத்து, நடிகமணி, ஈழத்தின் கூத்து நடிகர் (இ. 1989)

1947 – யுகியோ அட்டொயாமா, சப்பானின் 60வது பிரதமர்

1964 – சேரா பேலின், அமெரிக்க அரசியல்வாதி, அலெஸ்காவின் 9வது ஆளுநர்

1969 – ஜெனிபர் அனிஸ்டன், அமெரிக்க நடிகை

1982 – நடாலி டோர்மர், ஆங்கிலேய நடிகை

1992 – டெய்லர் லாட்னர், அமெரிக்க நடிகர், தற்காப்புக் கலைஞர்

இன்றைய தின இறப்புகள்

824 – முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை)

1358 – அலாவுதின் பாமன் சா, தக்காணப் பீடபூமியின் 1வது பாமினி சுல்தான்

1650 – ரெனே டேக்கார்ட், பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1596)

1693 – ஜான் டி பிரிட்டோ, இயேசு திருச்சபை மதப்போதகர் (பி. 1647)

1755 – பிரான்செஸ்கோ சிப்பியோன் மாஃபி, இத்தாலிய தொல்லியலாளர் (பி. 1675)

1942 – ஜம்னாலால் பஜாஜ், இந்தியத் தொழிலதிபர் (பி. 1884)

1946 – மா. சிங்காரவேலர், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1860)

1948 – செர்கீ ஐசென்ஸ்டைன், உருசியத் திரைப்பட இயக்குநர் (பி. 1898)

1956 – செர்கேய் பிளாசுக்கோ, சோவியத், உருசிய வானியலாளர் (பி. 1870)

1963 – கே. ராஜலிங்கம், இலங்கையின் மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத்தலைவர் (பி. 1909)

1963 – சில்வியா பிளாத், அமெரிக்கக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1932)

1968 – தீனதயாள் உபாத்தியாயா, இந்திய ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1916)

1974 – கண்டசாலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1922)

1977 – பக்ருதின் அலி அகமது, இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவர் (பி. 1905)

1978 – ஹரி மார்ட்டின்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1904)

1979 – மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை, கருநாடக வயலின் இசைக் கலைஞர் (பி: 1912)

1980 – ரமேஷ் சந்திர மஜும்தார், இந்திய வரலாற்றாளர் (பி. 1888)

1985 – செ. சுந்தரலிங்கம், இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் (பி. 1895)

1986 – பிராங்க் எர்பெர்ட், அமெரிக்க ஊடகவியலாளர், நூலாசிரியர் (பி. 1920)

1994 – வின்சென்ட் விகில்சுவொர்த், ஆங்கிலேய உயிரியலாளர், பூச்சியியலாளர் (பி. 1899)

2001 – ஜெய்கணேஷ், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1946)

2006 – பெக்கி கிரிப்ஸ் அப்பையா, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1921)

2008 – பாட்சி ஓ’கானெல் செர்மன், அமெரிக்க வேதியியலாளர் (பி. 1930)

2010 – ஷாஹித் அஸ்மி, இந்திய வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர் (பி. 1977)

2010 – உ. ரா. வரதராசன், இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி (பி. 1945)

2012 – விட்னி ஊசுட்டன், அமெரிக்கப் பாடகி, நடிகை (பி. 1963)

2016 – பூ. ம. செல்லத்துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1936)

2018 – அஸ்மா ஜெகாங்கீர், பாக்கித்தானிய மனித உரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1952)

இன்றைய தின சிறப்பு நாள்

உலக நோயாளர் நாள் (கத்தோலிக்க திருச்சபை)

கண்டுபிடிப்பாளர் நாள் (ஐக்கிய அமெரிக்கா)

தேசிய நிறுவன நாள் (யப்பான்)

இளைஞர் நாள் (கமரூன்)

அறிவியலில் பெண்கள், மற்றும் சிறுமிகளுக்கான பன்னாட்டு நாள்

Categories

Tech |