Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 3…!!

மார்ச் 3  கிரிகோரியன் ஆண்டின் 62 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 63 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 303 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

 473 – கிளிசேரியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார்.

724 – யப்பானியப் பேரரசி கென்சோ முடிதுறந்தார். ஷோமு புதிய பேரரசராகப் பதவியேற்றார்.

1284 – வேல்சு இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டது.

1575 – இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார்.

1585 – அந்திரேயா பலாடியோ வடிவமைத்த ஒலிம்பிக் நாடக அரங்கு விசென்சா நகரில் திறக்கப்பட்டது.

1833 – அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.

1845 – புளோரிடா அமெரிக்காவின் 27வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

1857 – இரண்டாவது அபினிப் போர்: பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன.

1859 – ஐக்கிய அமெரிக்காவில் மாபெரும் இரண்டு-நாள் அடிமை ஏலம் நிறைவடைந்தது.

1861 – உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் பண்ணையடிமைகளை விடுவித்தார்.

1873 – அஞ்சல் மூலம் “ஆபாசமான, அல்லது கவர்ச்சியான” நூல்களை அனுப்புவது அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.

1878 – உதுமானியப் பேரரசிடம் இருந்து பல்கேரியா விடுதலை அடைந்தது. அடுத்த சில மாதங்களில் பெர்லினில் நடந்த ஆறு நாடுகளின் மாநாட்டில் இவ்வுரிமை மறுக்கப்பட்டு, பல்கேரியா உதுமானியப் பேரரசின் குத்தகை நாடு என அறிவிக்கப்பட்டது.

1904 – எடிசனின் போனோகிராமைக் கொண்டு முதன் முதலாக அரசியல் ஆவணம் ஒன்றின் ஒலிப்பதிவை இரண்டாம் வில்லியம் உருவாக்கினார்.

1905 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை ஏற்படுத்த இணங்கினார்.

1913 – பெண்களுக்கான வாக்குரிமை கோரி அமெரிக்காவில், வாசிங்டன் நகரில் பெண்களின் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்ரது.

1918 – முதலாம் உலகப் போரில் உருசியாவின் பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர செருமனி, ஆஸ்திரியா, உருசியா ஆகியன உடன்பாட்டிற்கு வந்தன.

1923 – டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.

1924 – உதுமானியப் பேரரசின் கலிபா இரண்டாம் அப்துல்மெசித் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து 14-ஆம் நூற்றாண்டின் பழமை வாய்ந்த இசுலாமியக் கலீபகம் முடிவுக்கு வந்தது.

1931 – ஐக்கிய அமெரிக்கா த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர் என்ற பாடலை தனது நாட்டுப்பண்ணாக ஏற்றுக் கொண்டது.

1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

1939 – மும்பாயில் மகாத்மா காந்தி பிரித்தானியருக்கு எதிராக உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.

1940 – சுவீடனில் இடதுசாரி கம்யூனிஸ்டுக் கட்சியின் செய்திப்பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஐவர் கொல்லப்பட்டனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் புரூம் என்ற நகரில் சப்பானின் பத்து போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனார்.

1943 – இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க, பிலிப்பீனியப் படையினர் மணிலாவை மீண்டும் கைப்பற்றினர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வான்படையினர் நெதர்லாந்தின் டென் ஹாக் நகர் மீது தவறுதலாகக் குண்டுகளை வீசியதில் 511 பேர் உயிரிழந்தனர்.

1953 – கனடிய பசிபிக் ஏர் லைன்சு விமானம் ஒன்று கராச்சியில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.

1958 – ஈராக்கின் பிரதமராக நூரி-அல்-சயீது எட்டாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1969 – நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது.

1974 – பாரிசு அருகில் துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 346 பேரும் உயிரிழந்தனர்.

1985 – சிலியில் வால்பரைசோ என்ற பகுதியில் 8.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 177 பேர் உயிரிழந்தனர்.

1986 – ஆத்திரேலியா ஐக்கிய இராச்சியத்தில் இருந்து முழுமையான விடுதலை பெற்றதற்கான “ஆத்திரேலியா சட்டம் 1986” நடைமுறைக்கு வந்தது.

1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக லாத்வியாவின் 74% மக்களும் எஸ்தோனியாவின் 83% மக்களும் வாக்களித்தனர்.

2005 – இசுட்டீவ் பொசெட் என்ற அமெரிக்கர் எரிபொருள் எதுவும் மீள நிரப்பாமல் தனியே விமானம் ஒன்றில் உலகைச் சுற்றி வலம் வந்து சாதனை படைத்தார்.

2013 – கராச்சியில் சியா முசுலிம்கள் வாழும் பகுதியில் குண்டு வெடித்ததில் 45 பேர் கொல்லப்பட்டனர், 180 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1790 – ஜான் ஆஸ்டின், ஆங்கிலேய சட்ட வல்லுநர், அரசியல் சிந்தனையாளர் (இ. 1859)

1839 – ஜம்சேத்ஜீ டாட்டா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1904)

1845 – கியார்கு கேன்ட்டர், உருசிய-செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1918)

1847 – அலெக்சாண்டர் கிரகாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்த இசுக்கொட்டிய-அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1922)

1882 – சார்லசு பொன்சி, இத்தாலியத் தொழிலதிபர் (இ. 1949)

1906 – யெவ்கேனி கிரினோவ், சோவியத்-உருசிய வானியலாளர், புவியியலாளர் (இ. 1984)

1924 – சி. சிவஞானசுந்தரம், ஈழத்து இதழியலாளர், எழுத்தாளர் (இ. 1996)

1931 – குலாம் முஸ்தபா கான், இந்திய இசையமைப்பாளர்

1943 – சங்கர் கணேஷ், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்

1944 – ஜெயச்சந்திரன், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்

1950 – திக்குவல்லை கமால், இலங்கை எழுத்தாளர்.

1955 – கணபதி கணேசன், தமிழ் இதழியலாளர் (இ. 2002)

1955 – தோர்ச்யீ காண்டு, இந்திய அரசியல்வாதி (இ. 2011)

1955 – ஜஸ்பால் பட்டி, இந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2012)

1958 – லதா ரஜினிகாந்த், இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகி

1970 – இன்சமாம் உல் ஹக், பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர்

1982 – ஜெசிக்கா பைல், அமெரிக்க நடிகை, பாடகி

1985 – வரலட்சுமி சரத்குமார், தமிழ்த் திரைப்பட நடிகை

இன்றைய தின இறப்புகள்

1644 – குரு அர்கோவிந்த், ஆறாவது சீக்கிய குரு (பி. 1595)

1703 – ராபர்ட் ஹூக், ஆங்கிலேய கட்டிடக் கலைஞர், மெய்யியலாளர் (பி. 1635)

1707 – ஔரங்கசீப், முகலாயப் பேரரசர் (பி. 1618)

1900 – பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ், பிரித்தானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1847)

1940 – கடம்பி மீனாட்சி, இந்திய வரலாற்றாய்வாளர் (பி. 1905)

1944 – குமாரதுங்க முனிதாச, சிங்களக் கவிஞர், பத்திரிகையாளர் (பி. 1887)

1985 – யோசிப் சுக்லோசுகி, சோவியத்-உக்கிரைனிய வானியலாளர் (பி. 1916)

1996 – சி. சிவஞானசுந்தரம், ஈழத்து இதழியலாளர், எழுத்தாளர் (பி. 1924)

2010 – குருவிக்கரம்பை வேலு, சுயமரியாதை இயக்கத் தலைவர் (பி. 1930)

2011 – வெ. இராதாகிருட்டிணன், விண்வெளி அறிவியலாளர் (பி. 1929)

2016 – பெர்த்தா காசிரீஸ், ஒந்துராசு சூழலியலாளர் (பி. 1973)

2016 – மார்ட்டின் குரோவ், நியூசிலாந்து துடுப்பாளர் (பி. 1962)

2018 – ரோஜர் பேனிஸ்டர், ஆங்கிலேய தடகள வீரர் (பி. 1929)

இன்றைய தின சிறப்பு நாள்

மாவீரர் நாள் (மலாவி)

உலகக் காட்டுயிர் நாள்

விடுதலை நாள் (பல்கேரியா)

அன்னையர் நாள் (ஜார்ஜியா)

Categories

Tech |