Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூன் 2…!!

சூன் 2  கிரிகோரியன் ஆண்டின் 153 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 154 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 212 நாட்கள் உள்ளன.

இன்றைய தின  நிகழ்வுகள்

455 – உரோமை நகரம் வன்முறையாளர்களால் இரண்டு வாரங்கள் முற்றுகையிடப்பட்டு சூறையாடப்பட்டது.

1098 – முதலாவது சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முதலாவது முற்றுகை முடிவுக்கு வந்தது. சிலுவைப் போராளிகள் நகரைக் கைப்பற்றினர்.

1615 – பிரெஞ்சு கத்தோலிக்க மதப்பரப்புனர்களின் முதற்தொகுதியினர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தனர்.

1805 – நெப்போலியப் போர்கள்: பிரெஞ்சு-எசுப்பானியக் கடற்படையினர் பிரித்தானியரிடம் இருந்து பிரான்சுக் கோட்டைக்குச் செல்லும் வழியில் டயமண்ட் குன்று என்ற ஆளில்லாத் தீவைக் கைப்பற்றினர்.

1835 – பி. டி. பர்னம் ஐக்கிய அமெரிக்காவிற்கான தனது முதலாவது வட்டரங்கு சுற்றை ஆரம்பித்தார்.

1896 – மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த கம்பியில்லாத் தந்திக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1919 – அமெரிக்காவின் எட்டு மாநிலங்களில் அரசுக் கிளர்ச்சியாளர்கள் குண்டுகளை வீசினர்.

1924 – ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த அனைத்துப் பழங்குடிகளுக்கும் அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டமூலத்தை அரசுத்தலைவர் கால்வின் கூலிஜ் அறிமுகப்படுத்தினார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படையினர் கொண்டொமாரி கிராமத்தில் கிரேக்கக் குடிமக்களைக் கொன்றனர்.

1946 – இத்தாலியில் முடியாட்சியைக் குடியரசாக மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் மூன்றாம் உம்பெர்த்தோ மன்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.

1953 – இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியத்தின் மகாராணியாக முடிசூடினார். தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட முதலாவது பெரிய பன்னாட்டு சர்வதேச நிகழ்வு இதுவாகும்.

1955 – சோவியத் ஒன்றியமும் யுகோசுலாவியாவும் பெல்கிறேட் உடன்பாட்டின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே 1948 இல் அறுந்து போன உறவைப் புதுப்பித்தன.

1962 – சிலி, இத்தாலி அணிகளுக்கு இடையே நடந்த 1962 உலகக்கோப்பை காற்பந்துப் போட்டி ஒன்றில் விளையாட்டு வீரர்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்புகளை அடக்கக் காவல்துறையினர் பல முறை அழைக்கப்பட்டனர்.

1964 – பலத்தீன விடுதலை இயக்கம் அமைக்கப்படட்து.

1965 – வியட்நாம் போர்: முதலாவது தொகுதி ஆத்திரேலியப் படைகள் தென் வியட்நாமை அடைந்தது.

1966 – நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.

1967 – மேற்கு செருமனியில் ஈரானின் அரசுத்தலைவரின் வருகைக்கு எதிராக வன்முறை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1979 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் போலந்துக்குப் பயணம் மேற்கொண்டார். பொதுவுடைமை நாடொன்றிற்குச் சென்ற முதலாவது திருத்தந்தை இவராவார்.

1983 – டெக்சசில் இருந்து மொண்ட்ரியால் நோக்கிச் சென்ற எயார் கனடா வானூர்தி விபத்துக்குள்ள்ளானதில் 23 பயணிகள் உயிரிழந்தனர்.

1999 – பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

2003 – வேறொரு கோளுக்கான (செவ்வாய்) மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற தனது முதலாவது விண்கலத்தை ஐரோப்பிய ஆய்வு மையம் ஈசா கசக்ஸ்தானில் பைக்கனூரில் இருந்து ஏவியது.

2012 – முன்னாள் எகிப்திய அரசுத்தலைவர் ஓசுனி முபாரக் 2011 எகிப்தியப் புரட்சியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவி விட்ட குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

2014 – தெலுங்கானா அதிகாரபூர்வமாக இந்தியாவின் 29-வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

இன்றைய தின பிறப்புகள்

1535 – பதினொன்றாம் லியோ (திருத்தந்தை) (இ. 1605)

1835 – பத்தாம் பயஸ் (திருத்தந்தை) (இ. 1914)

1840 – தாமஸ் ஹார்டி, ஆங்கிலேய புதின எழுத்தாளர், கவிஞர் (இ. 1928)

1923 – இலாயிடு சேப்ளி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கக் கணிதவியலாளர், பொருளியலாளர் (இ. 2016)

1942 – டென்மார்க் சண், ஈழத்து திரைப்பட இசையமைப்பாளர்

1943 – இளையராஜா, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்

1949 – கீத்தர் கூப்பர், ஆங்கிலேய வானியலாளர், இயற்பியலாளர்

1955 – நந்தன் நிலெக்கணி, இந்தியத் தொழிலதிபர்

1955 – மணிரத்னம், இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்

1965 – மார்க் வா ஆத்திரேலியத் துடுப்பாளர்

1965 – ஸ்டீவ் வா, ஆத்திரேலியத் துடுப்பாளர்

1972 – வெண்ட்வொர்த் மில்லர், அமெரிக்க நடிகர்

1978 – டோமினிக் கூப்பர், ஆங்கிலேய நடிகர்

1985 – ஜாக்குலின் பெர்னாண்டஸ், இலங்கை-இந்தியத் திரைப்பட நடிகை

1987 – அஞ்செலோ மத்தியூஸ், இலங்கைத் துடுப்பாளர்

1987 – சோனாக்சி சின்கா, இந்திய நடிகை

1988 – செர்கியோ அகுவேரோ, அர்செந்தீன காற்பந்தாட்ட வீரர்

1989 – ஸ்டீவ் சிமித், ஆத்திரேலியத் துடுப்பாளர்

இன்றைய தின இறப்புகள்

1842 – பி. கந்தப்பிள்ளை, யாழ்ப்பாணப் புலவர், வைத்தியர், நாவலரின் தந்தை. (பி. 1766)

1882 – கரிபால்டி, இத்தாலிய அரசியல்வாதி, இராணுவத் தளபதி (பி. 1807)

1981 – தாவீது அடிகள், ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1907)

1986 – டி. எஸ். துரைராஜ், தமிழக மேடை நாடக, திரைப்பட நகைச்சுவை நடிகர் (பி. 1910)

1988 – ராஜ் கபூர், இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1924)

2004 – தாம் மொரேசு, இந்திய ஆங்கிலக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1938)

2014 – துரைசாமி சைமன் லூர்துசாமி, இந்தியக் கத்தோலிக்க கர்தினால் (பி. 1924)

2015 – சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழறிஞர் (பி. 1941)

2017 – கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழகக் கவிஞர் (பி. 1937)

இன்றைய தின சிறப்பு நாள்

குழந்தைகள் நாள் (வடகொரியா)

பன்னாட்டு பாலியல் தொழிலாளர் நாள்

Categories

Tech |