இன்றைய தின நிகழ்வுகள்
1456 – ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவர் என அவர் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.
1534 – சாக் கார்ட்டியே கனடியப் பழங்குடியினருடன் தனது முதல் தொடர்பை ஏற்படுத்தினார்.
1543 – பிரெஞ்சுப் படையினர் லக்சம்பர்க்கை ஊடுருவினர்.
1575 – இங்கிலாந்துக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையே கடைசிப் பெரும் போர் ரீட்சுவயர் என்ற இடத்தில் இடம்பெற்றது.
1770 – உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையே லார்கா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
1799 – பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்கின் படையினர் லாகூரை அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.
1807 – பிரான்சு, புருசியா, உருசியா ஆகியவற்றிடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது. நான்காவது கூட்டமைப்புப் போர் முடிவுக்கு வந்தது.
1834 – நியூயார்க்கில் அடிமை முறைக்கு எதிரானவர்கள் மீதான நான்கு நாள் வன்முறைகள் ஆரம்பமானது.
1846 – அமெரிக்கப் படைகள் மான்டரே, யெர்பா புவெனா ஆகியவற்றைக் கைப்பற்றின. கலிபோர்னியாவைக் கைப்பற்றும் அமெரிக்கத் திட்டம் ஆரம்பமானது.
1865 – ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பான நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.
1896 – இந்தியாவில் முதற் தடவையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1898 – அமெரிக்கத் தலைவர் வில்லியம் மெக்கின்லி அவாயை அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.
1915 – 157 பயணிகளுடன் சென்ற திரொலி ஒன்ராறியோ குவீன்ஸ்டன் நகரில் விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.
1915 – 1915 சிங்களவர் முசுலிம்கள் கலவரம்: இலங்கையில் முசுலிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில் என்றி பெதிரிசு என்ற இராணுவ அலுவலர் கொழும்பில் தூக்கிலிடப்பட்டார்.
1928 – துண்டுகளாக்கப்பட்ட வெதுப்பிகள் முதல்தடவையாக மிசூரியில் விற்பனைக்கு வந்தது.
1937 – மார்க்கோ போலோ பாலச் சம்பவம் இரண்டாம் சீன-சப்பானியப் போர் ஆரம்பிக்கக் காரணமாக அமைந்தது.
1937 – பாலத்தீனத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் முதல்தடவையாகப் பரிந்துரைக்கப்பட்டது.
1941 – ஐசுலாந்தில் அமெரிக்கப் படைகள் தரையிறங்கின. பிரித்தானிய ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
1941 – இரண்டாம் உலகப் போர்: பெய்ரூத் பிரெஞ்சு, பிரித்தானியப் படைகள் வசம் வந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் யூ-701 நீர்மூழ்கிக்கப்பல் அழிக்கப்பட்டது.
1953 – சே குவேரா பொலிவியா, பெரு, எக்குவடோர், பனாமா, கோஸ்ட்டா ரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டுராஸ், எல் சால்வடோர் பயணங்களை ஆரம்பித்தார்.
1959 – வெள்ளிக் கோள் ரேகுளுஸ் விண்மீனை மறைத்தது. இந்நிகழ்வு வெள்ளியின் விட்டம் மற்றும் அதன் வளிமண்டலம் போன்றவற்றை அளக்க உதவியது.
1978 – சொலமன் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1980 – ஈரானில் இசுலாமியச் சட்ட முறைமை நடைமுறைக்கு வந்தது.
1980 – லெபனான் உள்நாட்டுப் போர்: 83 புலிப் போராளிகள் கொல்லப்பட்டனர்.
1983 – பனிப்போர்: சோவியத் தலைவர் யூரி அந்திரோப்போவின் அழைப்பின் பேரில் அமெரிக்க பாடசாலைச் சிறுமி சமந்தா சிமித் மாஸ்கோ சென்றார்.
1985 – பொறிஸ் பெக்கர் விம்பிள்டன் கோப்பையை வென்ற இளம் டென்னிசு வீரர் (அகவை 17) என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
1991 – சுலோவீனியாவில் 10-நாள் விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1997 – ஈராக்கிய-குருதிய உள்நாட்டுப் போரில் குர்திஸ்தான் சனநாயகக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட துருக்கியப் படைகள் வடக்கு ஈராக்கில் இருந்து வெளியேறின.
2003 – நாசாவின் ஆப்பர்சூனிட்டி தளவுளவி விண்ணுக்கு ஏவப்பட்டது.
2005 – இலண்டனில் இடம்பெற்ற நான்கு வெவ்வேறு தற்கொலைத் தாக்குதல்களில் 56 பேர் கொல்லப்பட்டனர். 700 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
2007 – புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தாஜ் மகால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
2008 – பிரசாத் பிரா விகார் என்ற கம்போடியாவின் 11ம் நூற்றாண்டு இந்துக் கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
2008 – காபூல் இந்தியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர்.
2012 – உருசியாவின் கிராசுனதாரில் வெள்ளப்பெருக்கின் காரணமாக 172 பேர் உயிரிழ்ந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1843 – கேமிலோ கொல்கி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய மருத்துவர் (இ. 1926)
1859 – இரட்டைமலை சீனிவாசன், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டளர், அரசியல்வாதி (இ. 1945)
1860 – குஸ்தாவ் மாலர், ஆத்திரிய இசையமைப்பாளர் (இ. 1911)
1861 – நெட்டி இசுட்டீவன்சு, அமெரிக்க மரபியலாளர் (இ. 1912)
1882 – யங்கா குபாலா, பெலருசியக் கவிஞர் (இ. 1941)
1901 – சி. வி. வி. பந்துலு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1907 – ராபர்ட் ஏ. ஐன்லைன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1988)
1924 – அரு. ராமநாதன், தமிழக பத்திரிகையாளர், திரைவசன எழுத்தாளர் (இ. 1974)
1926 – நுவான் சியா, கம்போடியாவின் அரசியல்வாதி
1933 – டேவிட் மெக்காலோ, அமெரிக்க வரலாற்றாளர்
1942 – அ. பாலமனோகரன், ஈழத்து எழுத்தாளர்
1944 – சேசம்பட்டி சிவலிங்கம், தமிழக நாதசுவரக் கலைஞர்
1947 – ஞானேந்திரா, நேபாளத்தின் கடைசி மன்னர்
1962 – வடிவுக்கரசி, தமிழகத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகை
1964 – நபம் துக்கி, அருணாசலப் பிரதேசத்தின் 8வது முதலமைச்சர்
1973 – கைலாசு கேர், இந்தியப் பாடகர், இயக்குநர்
1981 – மகேந்திரசிங் தோனி, இந்தியத் துடுப்பாளர்
1984 – மொகமது அஷ்ரஃபுல், வங்காளதேசத் துடுப்பாளர்
இன்றைய தின இறப்புகள்
1758 – மார்த்தாண்ட வர்மர், திருவிதாங்கூர் மன்னர் (பி. 1706)[1]
1930 – ஆர்தர் கொனன் டொயில், பிரித்தானிய புனைகதை எழுத்தாளர் (பி. 1859)
1994 – கா. மு. ஷெரீப், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1914)
2006 – ஜி. வெங்கடசாமி, தமிழக கண் மருத்துவர், தொழிலதிபர் (பி. 1918)
2009 – கரோலின் அந்தோனிப்பிள்ளை, இலங்கை இடதுசாரித் தலைவர் (பி. 1908)
2014 – எதுவார்து செவர்துநாத்சே, சியார்ச்சியாவின் 2வது அரசுத்தலைவர் (பி. 1928)
இன்றைய தின சிறப்பு நாள்
விடுதலை நாள் (சொலமன் தீவுகள், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1978)