Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 7…!!

அக்டோபர் 7  கிரிகோரியன் ஆண்டு 280 ஆம் நாள்.

நெட்டாண்டு 281 ஆம் நாள்.

ஆண்டு முடிவு மேலும் 85 நாள்.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 3761 – எபிரேய நாட்காட்டியின் படி முதலாவது ஆண்டு.

1403 – வெனீசிய-செனோவப் போர்கள்: செனோவா கடற்படை பிரெஞ்சு அதிகாரியின் தலைமையில் வெனிசியப் படைகளைத் தோற்கடித்தன.

1477 – உப்சாலா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1513 – லா மொட்டா சமரில் எசுப்பானியா வெனிசை வென்றது.

1571 – லெப்பாண்டோ சமரில் திருத்தந்தை ஐந்தாம் பயசின் திருச்சபைப் படைகளிடம் உதுமானிய படைகள் முதலாவது தோல்வியைச் சந்தித்தன.

1763 – ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் வட அமெரிக்காவின் வடக்கு மற்றும் மேற்கு பழங்குடிகளின் பிரதேசங்களை வெள்ளையினக் குடியேற்றங்களுக்கு வழங்க உத்தரவிட்டார்.

1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியருக்கு எதிரான இரண்டாவது சரட்டோகா போரில் அமெரிக்கப் படைகள் வென்றன.

1806 – ஆங்கிலேயர் ரால்ஃப் வெட்ஜ்வூட் கரிமத்தாளுக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்

1826 – ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது தனியார் தொடருந்து சேவை “கிரனைட்டு இரயில்வே” தொடங்கப்பட்டது.

1840 – இரண்டாம் வில்லியம் நெதர்லாந்தின் மன்னராக முடிசூடினார்.

1858 – பிரித்தானிய அரசினால் கைது செய்யப்பட்ட கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் சா சஃபார் இரங்கூனிற்கு நாடு கடத்தப்பட்டார்.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: பிரேசிலின் கடற்பகுதியில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் அமெரிக்கக் கூட்டமைப்பின் கப்பல் ஒன்றைக் கைப்பற்றியது

1879 – செருமனியும், ஆத்திரியா-அங்கேரியும் கூட்டமைப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

1919 – நெதர்லாந்தின் கே.எல்.எம் விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது.

1933 – ஏர் பிரான்சு நிறுவனம் ஆரம்பபிக்கப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: மெக்கலம் குறிப்பு சப்பானியரை அமெரிக்கா மீது தாக்குதலை நடத்தத் தூண்டுவதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவை ஐரோப்பாவில் போரில் ஈடுபடுத்த முன்மொழிந்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: அவுசுவிட்சு வதை முகாமில் இடம்பெற்ற கிளர்ச்சியில் யூதக் கைதிகள் அங்கிருந்த சவக்காலையைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

1949 – கம்யூனிச செருமன் மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.

1950 – அன்னை தெரேசா பிறரன்பின் பணியாளர்கள் சபையை நிறுவினார்.

1950 – சீனா திபெத்து மீதான தாக்குதலை ஆரம்பித்தது.

1958 – பாக்கித்தான் அரசுத்தலைவர் இசுக்காண்டர் மிர்சா நாட்டின் அரசியலமைப்பைக் கலைத்து இராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

1959 – சோவியத் விண்கலம் லூனா 3 சந்திரனின் அதி தூரத்தியப் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.

1977 – நான்காவது சோவியத் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

1985 – புவேர்ட்டோ ரிக்கோவில் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 200 பேர் வரை உயிரிழந்தனர்.

1987 – சீக்கிய தேசியவாதிகள் இந்தியாவில் இருந்து காலித்தானின் விடுதலையை அறிவித்தனர். ஆனாலும், எந்நாடுகளும் இதனை அங்கீகரிக்கவில்லை.

2000 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: ஹிஸ்புல்லா போராளிகள் மூன்று இசுரேலியப் பாதுகாப்புப் படையினரை கைப்பற்றினர்.

2001 – ஆப்கானித்தான் மீது அமெரிக்கா மூன்று முறை விமானத்தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளின் உதவியுடன் ஆரம்பமாகியது.

2004 – கம்போடிய மன்னர் நொரடோம் சீயனூக் பதவியில் இருந்து விலகினார்.

2007 – கொழும்பில் முதல் நாள் கடத்தப்பட்ட யாழ் பல்கலைக்கழக கணிதப் பேராசிரியர் பொ. மகினனின் சிதைந்த உடல் வெள்ளவத்தையில் கண்டுபிடிக்கப்பட்டது.

2008 – சிறுகோள் 2008 டிசி3 சூடானுக்கு மேலாக 37 கிமீ உயரத்தில் வெடித்தது.

2016 – மேத்யூ சூறாவளியின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்தது.

இன்றைய தின பிறப்புகள்

1885 – நீல்சு போர், நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு இயற்பியலாளர் (இ. 1962)

1900 – ஐன்ரிக் இம்லர், செருமானிய இராணுவத் தளபதி, அரசியல்வாதி (இ. 1945)

1906 – மு. செல்லையா, ஈழத்துக் கவிஞர் (இ. 1966)

1906 – கோ. சுப்பிரமணியன், தமிழகத் தமிழறிஞர், பேராசிரியர், வழக்கறிஞர் (இ. 1971)

1914 – பேகம் அக்தர், இந்தியப் பாடகி, நடிகை (இ. 1974)

1920 – முடியரசன், தமிழகக் கவிஞர் (இ. 1998)

1931 – டெசுமான்ட் டுட்டு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க ஆயர்

1935 – தாமஸ் கெநீலி, ஆத்திரேலிய எழுத்தாளர்

1937 – அ. தட்சிணாமூர்த்தி, தமிழறிஞர், நூலாசிரியர்

1938 – ஞானக்கூத்தன், தமிழகக் கவிஞர் (இ. 2016)

1938 – புளியங்குடி க.பழனிச்சாமி, தமிழக அரசியல்வாதி (இ. 2007)

1945 – நிக்கோலாய் சக்கூரா, உருசிய வானியற்பியலாளர்

1952 – விளாதிமிர் பூட்டின், உருசியாவின் 4வது அரசுத்தலைவர்

1978 – ஜாகிர் கான், இந்தியத் துடுப்பாளர்

1979 – சான் ஆஷ்மோர், கனடிய நடிகர்

1979 – நரேன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1981 – வைக்கம் விஜயலட்சுமி, தென்னிந்திய வீணைக் கலைஞர், பின்னணிப் பாடகி

1983 – பூஜா காந்தி, தென்னிந்திய நடிகை

1984 – சல்மான் பட், பாக்கித்தானியத் துடுப்பாளர்

இன்றைய தின  இறப்புகள்

336 – மாற்கு (திருத்தந்தை)

1708 – குரு கோவிந்த் சிங், 10வது சீக்கிய குரு (பி. 1666)

1813 – பீட்டர் சாக்கப் இச்செலம், சுவீடிய வேதியியலாளர் (பி. 1746)

1849 – எட்கர் ஆலன் போ, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1809)

1919 – ஆல்பிரெட் டிக்கன், ஆத்திரேலியாவின் 2வது பிரதமர் (பி. 1856)

1984 – அப்துல் காதர் லெப்பை, இலங்கைக் கவிஞர் (பி. 1913)

2006 – அன்னா பலிட்கோவ்ஸ்கயா, அமெரிக்க-உருசிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1958)

2010 – அ. வெங்கடாசலம், தமிழக அரசியல்வாதி (பி. 1955)

2012 – ஏ. ஜெகந்நாதன், இந்திய இயக்குநர்

2014 – சீக்பிரீட் லென்சு, போலந்து-செருமானிய எழுத்தாளர், நாடகாசிரியர் (பி. 1926)

இன்றைய தின சிறப்பு நாள்

செபமாலை அன்னை விழா

ஆசிரியர் நாள் (லாவோஸ்)

Categories

Tech |