Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூலை 11…!!

சூலை 11  கிரிகோரியன் ஆண்டின் 192 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 193 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 173 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

472 – உரோம் நகரில் தனது சொந்த இராணுவத் தளபதிகளால் முற்றுகையிடப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு உரோமைப் பேரரசர், அந்தெமியசு சென் பீட்டர்சு தேவாலயத்தில் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டார்.

813 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் மைக்கேல், சதி முயற்சியை அடுத்து, தனது தளபதி ஐந்ர்தாம் லியோவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, அத்தனாசியசு என்ற பெயரில் துறவறம் பூண்டார்.

1174 – எருசலேமின் மன்னராக 13 அகவை கொண்ட நான்காம் பால்ட்வின் முடிசூடினான்.

1346 – லக்சம்பர்க்கின் நான்காம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.

1405 – மிங் சீனத் தளபதி செங் ஹே தனது முதலாவது நாடுகாண் பயணத்தை ஆரம்பித்தார்.

1576 – மார்ட்டின் புரோபிசர் கிறீன்லாந்தைக் கண்டுபிடித்தார்.

1735 – குறுங்கோள் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்தினுள் இந்நாளில் வந்ததாகக் கணிப்புகள் தெரிவித்தன. இது பின்னர் 1979 இல் மீண்டும் நிகழ்ந்தது.

1796 – மிச்சிகனின் தலைநகர் டிட்ராயிட் நகரை பிரித்தானியாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா “ஜே உடன்படிக்கை”யின் படி பெற்றுக் கொண்டது.

1801 – பிரெஞ்சு வானியலாளர் சான் பொன்சு தனது முதலாவது வால்வெள்ளிக் கண்டுபிடிப்பை அறிவித்தார். அடுத்த 27 ஆண்டுகளில் இவர் மேலும் 36 வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்தார்.

1804 – ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர் ஆரன் பர், முன்னாள் அமெரிக்க நிதியமைச்சர் அலெக்சாண்டர் ஆமில்டன் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற இரட்டையர் சண்டையில் ஆமில்ட்டன் படுகாயமடைந்தார்.

1811 – வளிமங்களின் மூலக்கூறுகள் பற்றிய தமது குறிப்புகளை இத்தாலிய அறிவியலாளர் அவகாதரோ வெளியிட்டார்.

1833 – மேற்கு ஆஸ்திரேலியாவில் வெள்ளையினக் குடியேறிகளைக் கொலை செய்ததாகத் தேடப்பட்டு வந்த நூங்கார் ஆத்திரேலியப் பழங்குடி வீரர் யாகன் கொல்லப்பட்டார்.

1882 – பிரித்தானிய மத்தியதரைக் கடற்படையினர் எகிப்தின் அலெக்சாந்திரியா நகர் மீது குண்டுத் தாக்குதலை ஆரம்பித்தனர்.

1893 – முதன் முறையாக சப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தினார்.

1893 – நிக்கராகுவாவில் இராணுவப் புரட்சியை அடுத்து ஒசே சாண்டோசு செலாயா ஆட்சியைக் கைப்பற்றினார்.

1895 – லூமியேர் சகோதரர்கள் அறிவியலாளர்களுக்கு திரைப்படத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினர்.

1897 – சாலொமொன் அந்திரே வடதுருவத்தை ஊதுபை மூலம் அடைய நோர்வேயின் இசுப்பிட்சுபெர்கன் நகரில் இருந்து புறப்பட்டார். இவரது ஊதுபை வீழ்ந்ததில் அவர் இறந்தார்.

1919 – நெதர்லாந்தில் எட்டு-மணி நேர வேலையும், ஞாயிறு விடுமுறையும் சட்டபூர்வமாக்கப்பட்டது.

1921 – செஞ்சேனைப் படையினர் மங்கோலியாவை வெள்ளை இராணுவத்திடம் இருந்து கைப்பற்றி, மங்கோலிய மக்கள் குடியரசை அமைத்தனர்.

1943 – போலந்தில் வொல்ஹீனியா என்ற இடத்தில் உக்ரைனியத் தீவிரவாத இராணுவத்தினரால் ஆயிரத்துக்கும் அதிகமான போலந்து மக்கள் கொல்லப்பட்டனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு: செருமனிய, இத்தாலியப் படையினர் நேச நாட்டுப் படைகள் மீது சிசிலியில் தாக்குதலைத் தொடுத்தனர்.

1950 – பாக்கித்தான் அனைத்துலக நாணய நிதியத்தில் இணைந்தது.

1951 – 1939 செப்டம்பர் முதல் நடைமுறையில் இருந்த செருமனி மீதான போர் அறிவிப்பை இலங்கை அரசு திரும்பப் பெற்றது.[1]

1960 – தகோமி (பின்னர் பெனின்), மேல் வோல்ட்டா (பின்னர் புர்க்கினா), நைஜர் ஆகிய நாடுகளுக்கான விடுதலைக்கு ஆதரவாக பிரான்சு வாக்களித்தது.

1962 – முதலாவது அத்திலாந்திக்கிடையேயான செய்மதித் தொலைக்காட்சி ஒளிபரப்பானது.

1971 – சிலியில் செப்புச் சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டன.

1973 – பிரேசில் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 134 பேரில் 123 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தை அடுத்து விமானங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டது.

1978 – எசுப்பானியாவில் எரிவாயுவை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று தீப்பிடித்ததில் 216 உல்லாசப் பயணிகள் உயிரிழந்தனர்.

1979 – அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் ஸ்கைலேப் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து அழிந்தது.

1982 – இத்தாலி மேற்கு செருமனியை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து காற்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது.

1983 – எக்குவாடோரில் போயிங் 737 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 119 பேரும் உயிரிழந்தனர்.[2]

1990 – கொக்காவில் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டது.

1991 – ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற நைஜீரிய விமானம் சவூதி அரேபியா, ஜித்தாவில் விபத்துக்குள்ளாகியதில் 261 பேர் உயிரிழந்தனர்.

1995 – வியட்நாமிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முழுமையான தூதரக உறவுகள் ஆரம்பமாயின.

1995 – செர்பிய இராணுவம் பொசுனிய நகரான சிரெப்ரென்னிக்காவைத் தாக்கியதில் 8,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். படுகொலைகள் சூலை 22 வரை தொடர்ந்தது.

2006 – மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்: மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 209 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சியடைந்தது.

2010 – உகாண்டாவின் கம்பாலா நகரில் இடம்பெற்ற இரட்டைத் தற்கொலைத் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1274 – இராபர்ட்டு புரூசு, இசுக்கொட்டிய மன்னர் (இ. 1329)

1732 – ஜெரோம் இலாலண்டே, பிரான்சிய வானியலாளர் (இ. 1807)

1767 – ஜான் குவின்சி ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் 6வது அரசுத்தலைவர் (இ. 1848)

1857 – சி. சங்கரன் நாயர், இந்திய அரசியல்வாதி (இ. 1934)

1881 – இசபெல் மார்ட்டின் இலெவிசு, அமெரிக்க வானியலாளர் (இ. 1966)

1916 – கஃப் விட்லம், ஆத்திரேலியாவின் 21வது பிரதமர் (இ. 2014)

1920 – வி. ஆர். நெடுஞ்செழியன், தமிழக அரசியல்வாதி (இ. 2000)

1921 – பா. ராமச்சந்திரன், தமிழக அரசியல்வாதி (இ. 2001)

1925 – குன்றக்குடி அடிகள், தமிழக சமய, இலக்கியவாதி (இ. 1995)

1925 – கா. மீனாட்சிசுந்தரம், தமிழகத் தமிழறிஞர் (இ. 2015)

1927 – தியோடோர் மைமான், அமெரிக்க-கனடிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 2007)

1947 – மதன், தமிழக இதழாளர், கேலிச்சித்திர ஓவியர்

1951 – சிறீதரன் ஜெகநாதன், இலங்கைத் துடுப்பாட்டக்காரர் (இ. 1996)

1953 – சுரேஷ் பிரபு, இந்திய அரசியல்வாதி

1956 – அமிதவ் கோசு, இந்திய-அமெரிக்க எழுத்தாளர்

1966 – பாலா, தமிழ் திரைப்பட இயக்குனர்

1967 – ஜும்ப்பா லாஹிரி, ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர்

1989 – டேவிட் ஹென்றி, அமெரிக்க நடிகர்

1990 – கரோலின் வோஸ்னியாக்கி, டென்மார்க்கு டென்னிசு வீராங்கனை

இன்றைய தின இறப்புகள்

1882 – பீட்டர் பெர்சிவல், பிரித்தானிய நற்செய்தி அறிவிப்பாளர், யாழ்ப்பாணத்தில் பணியாற்றியவர் (பி. 1803)

1909 – சைமன் நியூகோம்பு, கனடிய-அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1835)

1912 – பெர்டினாண்ட் மோனயர், பிரான்சிய கண்சிகிச்சை நிபுணர், டையாப்ட்டர் அலகை அறிமுகம் செய்தவர் (பி. 1836)

1946 – இரா. இராகவையங்கார், தமிழக நூலாசிரியர், உரையாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1870)

1956 – அ. வரதநஞ்சைய பிள்ளை, தமிழறிஞர் (பி. 1877)

1962 – பல்லடம் சஞ்சீவ ராவ் தமிழக புல்லாங்குழல் கலைஞர் (பி.1882)

2003 – பீசம் சானி, இந்தி எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் (பி. 1915)

2009 – ஜி சியான்லின், சீன மொழியியலாளர் (பி. 1911)

2015 – பூ. செந்தூர் பாண்டியன், தமிழக அரசியல்வாதி (பி. 1951)

இன்றைய தின சிறப்பு நாள்

உலக மக்கள் தொகை நாள்

Categories

Tech |