இன்றைய தின நிகழ்வுகள்
811 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டார்.
1309 – ஏழாம் என்றி உரோமர்களின் மன்னராக ஐந்தாம் கிளெம்ண்ட் திருத்தந்தையால் ஏற்கப்பட்டார்.
1509 – கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசராக முடிசூடினார்.
1745 – ஆவணப்படுத்தப்பட்ட முதலாவது பெண்கள் துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்து, கில்ட்ஃபோர்டு நகரில் இடம்பெற்றது.
1758 – புனித லாரன்சு வளைகுடாவை பிரித்தானியப் படையினர் பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.
1788 – நியூயோர்க் ஐக்கிய அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது.
1803 – உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.
1814 – சுவீடன்–நோர்வே போர் ஆரம்பமானது.
1847 – லைபீரியா ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1848 – மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக வீரபுரன் அப்பு தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. வீரபுரன் அப்பு கைது செய்யப்பட்டு ஆகத்து 8 இல் தூக்கிலிடப்பட்டான்.
1848 – கொழும்பு, பொரளையில் வரி விதிப்புக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை அடக்க இராணுவம் வரவழைக்கப்பட்டது.[1]
1891 – தாகித்தி பிரான்சுடன் இணைந்தது.
1892 – பிரித்தானியாவின் முதலாவது இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தாதாபாய் நௌரோஜி தேர்தெடுக்கப்பட்டார்.[2]
1897 – பசுத்தூன் பக்கிரி சைதுல்லா தலைமையில் 10,000 வீரரகள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் பிரித்தானியப் படைகளுக்கு எதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1899 – டொமினிக்கன் குடியரசின் 27-வது அரசுத்தலைவர் யூலிசசு இயூரோ படுகொலை செய்யப்பட்டார்.
1936 – செருமனியும் இத்தாலியும் பிரான்சிஸ்கோ பிராங்கோவிற்கு ஆதரவாக எசுப்பானிய உள்நாட்டுப் போரில் தலையிட முடிவு செய்தன.
1941 – இரண்டாம் உலகப் போர்: பிரெஞ்சு இந்தோசீனாவை சப்பானியர் ஆக்கிரமித்ததை அடுத்து, அமெரிக்கா, பிரித்தானியா, நெதர்லாந்து ஆகியன சப்பானியரின் அனைத்து சொத்துகளையும் முடக்கினர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: செஞ்சேனைப் படைகள் மேற்கு உக்ரைனின் லிவீவ் நகரில் நுழைந்து அதனை நாட்சிகளிடம் இருந்து கைப்பற்றின. நகரின் 160.000 யூதர்களில் 300 பேர் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தனர்.
1945 – ஐக்கிய இராச்சியத்தில் நடந்த பொதுத்தேர்தல்களில் தொழிற் கட்சி பெரும் வெற்றி பெற்றது. வின்ஸ்டன் சர்ச்சில் பதவி இழந்தார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினரைச் சரணடையக் கோரும் உடன்படிக்கையில் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகியன செருமனியில் பொட்சுடாம் நகரில் கையெழுத்திடப்பட்டன.
1945 – இரண்டாம் உலகப் போர்: இரோசிமாவில் போடப்படவிருந்த லிட்டில் பாய் அணுகுண்டைத் தாங்கியவண்ணம் இண்டியானாபொலிசு என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தினியான் தீவை அடைந்தது.
1947 – பனிப்போர்: நடுவண் ஒற்று முகமையை அமைக்கும் சட்டமூலத்தில் அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் கையெழுத்திட்டார்.
1952 – எகிப்தில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் மன்னர் பாரூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது ஆறு மாதங்கள் அகவையுடைய மகன் புவாத் மன்னன் ஆக்கப்பட்டான்.
1953 – பனிப்போர்: கியூபாவில் மொன்காடா இராணுவத் தளம் மீது பிடெல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது. கியூபப் புரட்சி ஆரம்பமானது.
1956 – சூயெசு நெருக்கடி: அஸ்வான் அணைக்கு உலக வங்கி நிதி உதவி வழங்க மறுத்ததை அடுத்து சூயஸ் கால்வாயை எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசர் அரசுடமை ஆக்கினார்.
1957 – குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொசு அர்மாசு கொல்லப்பட்டார்.
1957 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது..
1963 – உலகின் முதலாவது புவி நிலைத் துணைக்கோள் சின்கோம் 2 அமெரிக்காவில் ஏவப்பட்டது.
1963 – யுகோசுலாவியாவில் ஸ்கோப்ஜே நகரில் (இன்றைய மாக்கடோனியக் குடியரசு) நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,100 பேர் உயிரிழந்தனர்.
1965 – மாலைதீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முழுமையாக விடுதலை பெற்றது.
1971 – அப்பல்லோ திட்டம்: அப்பல்லோ 15 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
1974 – ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.
1977 – கனடா, கியூபெக் மாநிலத்தில் பிரெஞ்சு மொழி அதிகாரபூர்வ மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1993 – தென் கொரியாவில் மொக்போ வானூர்தி நிலையத்தில் தரையிறங்க முயன்ற ஏசியானா ஏர்லைன்சு விமானம் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த 116 பேரில் 68 பேர் உயிரிழந்தனர்.
1994 – எஸ்தோனியாவில் இருந்து உருசியப் ப் படைகளை வெளியேற்ற அரசுத்தலைவர் பொரிஸ் யெல்ட்சின் முடிவெடுத்தார்.
1999 – கார்கில் போர் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.
2005 – டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.
2005 – மும்பையில் 24 மணி நேரத்தில் பெய்த பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5,000 பேர் வரை உயிரிழந்தனர்.
2008 – இந்தியாவின் அகமதாபாத் நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 56 பேர் உயிரிழந்தனர், 200 பேர் வரை காயமடைந்தனர்.
2016 – சூரிய ஆற்றலில் இயங்கும் சோலார் இம்பல்சு-2 வானூர்தி புவியைச் சுற்றி வந்தது.
இன்றைய தின பிறப்புகள்
1842 – ஆல்பிரடு மார்ஷல், ஆங்கிலேய பொருளியலாளர் (இ. 1924)
1856 – ஜார்ஜ் பெர்னாட் ஷா, நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர் (இ. 1950)
1875 – கார்ல் யுங்கு, சுவிட்சர்லாந்து உளவியலாளர், மருத்துவர் (இ. 1961)
1878 – மு. இராகவையங்கார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1960)
1911 – பி. ஆர். பந்துலு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் (இ. 1974)
1919 – ஜேம்ஸ் லவ்லாக், ஆங்கிலேய உயிரியலாளர், வேதியியலாளர்
1925 – சக்தி அ. பாலஐயா, இலங்கையின் மலையக எழுத்தாளர் (இ. 2013)
1928 – இஸ்டான்லி குப்ரிக்கு, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1999)
1933 – எட்மண்ட் ஃவெல்ப்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
1933 – மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (இ. 2008)
1939 – ஜோன் ஹவார்ட், ஆத்திரேலியாவின் 25வது பிரதமர்
1941 – வாஸந்தி, தமிழக எழுத்தாளர்
1955 – ஆசிஃப் அலி சர்தாரி, பாக்கித்தானின் 11வது அரசுத்தலைவர்
1960 – சின்னி ஜெயந்த், தமிழ் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர்
1964 – சாண்ட்ரா புல்லக், அமெரிக்க நடிகை
1967 – ஜேசன் ஸ்டேதம், ஆங்கிலேய நடிகர்
1968 – ஒலிவியா வில்லியம்ஸ், ஆங்கிலேய நடிகை
1971 – மேரி ஆன் மோகன்ராஜ், இலங்கை-அமெரிக்க எழுத்தாளர்
1973 – கேட் பெக்கின்சேல், ஆங்கிலேய நடிகை
1983 – அபிராமி, இந்திய திரைப்பட நடிகை
1989 – இவியான் சார்கோசு, வெனிசுவேலாவின் உலக அழகி
1993 – எலிசபெத் கில்லீஸ், அமெரிக்க நடிகை
இன்றைய தின இறப்புகள்
1684 – எலினா கார்னரோ பிசுகோபியா, இத்தாலியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1646)
1934 – வின்சர் மெக்கே, அமெரிக்கத் தயாரிப்பாளர் (பி. 1871)
1937 – கேர்டா டேரோ, செருமானிய புகைப்படக் கலைஞர் (பி. 1910)
1952 – இவா பெரோன், அர்ச்செந்தீன நடிகை, அரசியல்வாதி (பி. 1919)
1982 – க. சொர்ணலிங்கம், கலையரசு, ஈழத்தின் நாடகக் கலைஞர் (பி. 1889)
2000 – யூ. ஆர். ஜீவரத்தினம், தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி (பி. 1927)
இன்றைய தின சிறப்பு நாள்
விடுதலை நாள் (லைபீரியா, 1847)
விடுதலை நாள் (மாலைத்தீவுகள், 1965)
கார்கில் போர் வெற்றி நாள் (இந்தியா)