Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 15…!!

செப்டம்பர் 15  கிரிகோரியன் ஆண்டின் 258 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 259 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 107 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

668 – கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்சுடன்சு இத்தாலியில் அவரது குளியலறியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்.

994 – பாத்திம கலீபகம் பைசாந்தியப் பேரரசுக்கு எதிரான முக்கிய வெற்றியைப் பெற்றது.

1556 – முன்னாள் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு எசுப்பானியா திரும்பினார்.

1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: நியூயார்க் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரித்தானியப் படைகள் கிப்சு குடாவில் தரையிறங்கின.

1794 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஆர்தர் வெலசுலி (பின்னாளில் வெலிங்டன் கோமகன்) தனது முதலாவது சமரை பாக்சுடெல் என்ற இடத்தில் நடத்தினார்.

1795 – பிரித்தானியா ஆப்பிரிக்காவின் தெற்கே இடச்சு கேப் குடியேற்றத்தைக் கைப்பற்றியது.

1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அரிசன் கோட்டையை மீட்க சென்ற ஆயுதங்கள் அடங்கிய தொடருந்து தாக்குதலுக்குள்ளானது.

1812 – பிரெஞ்சு இராணுவம் நெப்போலியனின் தலைமையில் மாஸ்கோவின் கிரெம்ளினை அடைந்தது.

1821 – எசுப்பானியாவிடம் இருந்து குவாத்தமாலா விடுதலையை அறிவித்தது.

1830 – லிவர்பூல் முதல் மான்செஸ்டர் வரையான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்ட இதே நாளில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் அசுக்கிசன் உயிரிழந்தார். இவரே வரலாற்றில் தொடருந்து விபத்தில் இறந்த முதலாவது நபராக அறியப்படுகிறார்.

1835 – சார்லசு டார்வின் பீகில் கப்பலில் காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் வர்ஜீனியாவின் ஆர்ப்பர்சு துறையைக் கைப்பற்றினர்.

1869 – கர்னாட்டிக் என்ற பிரித்தானிய நீராவிக் கப்பல் இலண்டனில் இருந்து பம்பாய் செல்லும் வழியில் செங்கடலில் பவளப் பாறையில் மோதி மூழ்கியது. 26 பேர் உயிரிழந்தனர்.[1]

1873 – பிரெஞ்சு-புரூசியப் போர்: கடைசி செருமானியப் படையினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.

1894 – முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): சப்பான் பியொங்யாங் சமரில் சிங் சீனாவை வென்றது.

1915 – ஆத்திரேலியாவில் முதலாவது திரையரங்கு “நியூ எம்பயர் சினிமா” நியூ சவுத் வேல்சு, பௌரல் என்ற இடத்தில் அமைக்கப்பட்டது.

1916 – முதலாம் உலகப் போர்: சோம் என்ற இடத்தில் முதற்தடவையாக பீரங்கி வண்டிகள் போரில் ஈடுபடுத்தப்பட்டன.

1935 – செருமனியில் யூதர்களுக்கு குடியுரிமை சட்டபூர்வமாக மறுக்கப்பட்டது.

1935 – நாட்சி ஜெர்மனி சுவசுத்திக்காவுடன் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தியது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் சண்டையில் பெரும் எண்ணிக்கையான லூப்டுவாபே வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

1942 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கக் கடற்படை வானூர்தி தாங்கிக் கப்பல் வாசுப் சப்பானியர்களினால் மூழ்கடிக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: போர் தொடர்பான நிலப்பாட்டை எடுப்பதற்காக பிராங்க்ளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் இரண்டாம் தடவையாக கியூபெக் நகரில் சந்தித்தனர்.

1945 – தெற்கு புளோரிடாவிலும் பகாமாசிலும் சூறாவளி காரணமாக 366 விமானங்கள் சேதமடைந்தன.

1947 – காத்லீன் சூறாவளி சப்பானைத் தாக்கியதில் 1,077 பேர் உயிரிழந்தனர்.

1948 – போலோ நடவடிக்கை: இந்தியத் தரைப்படை மகாராட்டிராவின் யால்னா, லாத்தூர், மொமினாபாது நகர்களைக் கைப்பற்றின.

1950 – கொரியப் போர்: அமெரிக்கப் படைகள் கொரியாவில் இஞ்சியோன் நகரில் தரையிறங்கின.

1952 – ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது.

1958 – நியூ ஜேர்சியில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 48 பேர் உயிரிழந்தனர்.

1959 – தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவை தில்லியில் ஆரம்பமானது.

1959 – நிக்கிட்டா குருசேவ் ஐக்கிய அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட முதல் சோவியத் தலைவர் ஆனார்.

1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: சோவியத் கப்பல் பொல்த்தாவா கியூபா நோக்கிச் சென்றது.

1963 – அமெரிக்காவின் பர்மிங்காம் நகரில் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 4 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

1968 – சோவியத்தின் சொண்ட் 5 விண்கலம் ஏவப்பட்டது. சந்திரனைச் சுற்றி வந்து பூமியின் காற்று மண்டலத்தினுள் நுழைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1971 – முதலாவது கிரீன்பீஸ் கப்பல் ஆம்சித்கா தீவில் அணுவாயுத சோதனை நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகப் புறப்பட்டது.

1972 – இசுகாண்டினேவிய வானூர்தி ஒன்று கோத்தன்பூர்கில் இருந்து ஸ்டாக்ஹோம் சென்று கொண்டிருந்த போது கட்டப்பட்டது.

1974 – வியட்நாம் வீமானம் ஒன்று கடத்தப்பட்டு, தரையிறங்குகையில் 75 பேருடன் தரையில் மோதியது.

1975 – பிரெஞ்சுப் பகுதியான “கோர்சிகா” தீவு இரண்டு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

1981 – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1983 – இசுரேல் பிரதமர் மெனசெம் பெகின் பதவி துறந்தார்.

1987 – இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் நல்லூரில் நீராகாரம் இன்றி உண்ணாநோன்பைத் தொடங்கினார்.

2000 – 27-வது ஒலிம்பிக் விளையாட்டுகள், சிட்னியில் ஆரம்பமாயின.

2017 – லண்டன், பார்சன்சு கிறீன் சுரங்கத் தொடருந்தில் குண்டு வெடித்ததில் 30 பேர் காயமடைந்தனர்.

2017 – சனிக் கோளை ஆய்வு செய்வதற்காக 1997 இல் ஏவப்பட்ட காசினி-ஐசென் விண்கலம் தன் பணிகளை முடித்துக்கொண்டு அழிந்தது.

இன்றைய தின பிறப்புகள்

601 – அலீ, முதலாவது சியா இமாம் (இ. 661)

1254 – மார்க்கோ போலோ, இத்தாலிய வணிகர், நாடுகாண் பயணி (இ. 1324)

1819 – பிரான்சிஸ் நேப்பியர், சென்னை மாகாண ஆளுநர் (இ. 1898)

1857 – வில்லியம் டாஃப்ட், அமெரிக்காவின் 27வது அரசுத்தலைவர் (இ. 1930)

1857 – அன்னா வின்லாக், அமெரிக்க வானியலாளர் (இ. 1904)

1858 – சார்லஸ் தெ ஃபூக்கோ, பிரான்சிய மதகுரு (இ. 1916)

1860 – மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, மைசூர் திவான், பொறியியலாளர் (இ. 1962)

1876 – சரத்சந்திர சட்டோபாத்யாயா, வங்காள எழுத்தாளர் (இ. 1938)

1890 – அகதா கிறிஸ்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1976)

1891 – செண்பகராமன் பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்டப் போராளி (இ. 1934)

1893 – சௌந்தரபாண்டியன், இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 1953)

1909 – கா. ந. அண்ணாதுரை, தமிழ்நாட்டின் 7வது முதலமைச்சர் (இ. 1969)

1912 – ஆர். கே. கரஞ்சியா, இந்திய எழுத்தாளர், இதழாளர் (இ. 2008)

1916 – கம்பதாசன் கவிஞர், எழுத்தாளர், தமிழ் திரைப்பட பாடலாசிரியர் (1973)

1918 – அமுது, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 2010)

1930 – பாட்சி ஓ’கானெல் செர்மன், அமெரிக்க வேதியியலாளர் (இ. 2008)

1938 – கொ. மா. கோதண்டம், தமிழறிஞர், எழுத்தாளர்

1939 – சுப்பிரமணியன் சுவாமி, இந்திய அரசியல்வாதி

1941 – எம். ஜோசப் மைக்கல் பெரேரா, இலங்கை அரசியல்வாதி

1948 – மண்டயம் வீரம்புடி சீனிவாசன், ஆத்திரேலிய உயிரியலாளர்

1952 – ரத்னஜீவன் ஹூல், இலங்கை மனித உரிமைச் செயற்பாட்டாளர், கல்வியாளர்

1954 – பி. வாசு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர்

1955 – அப்துல் காதிர், பாக்கித்தானியத் துடுப்பாளர் (இ. 2019)

1964 – இராபர்ட் பிகோ, சிலோவாக்கியாவின் 14வது பிரதமர்

1967 – ரம்யா கிருஷ்ணன், திரைப்பட நடிகை

1977 – சிமாமந்த நாகொசி அதிச்சி, நைஜீரிய புதின எழுத்தாளர்

1977 – டோம் ஹார்டி, ஆங்கிலேய நடிகர்

1984 – வேல்சு இளவரசர் ஹாரி

1989 – சாலோ அப்டெச்லாம், பெல்ஜிய-பிரான்சியக் குற்றவாளி

1992 – அதிபன் பாசுகரன், இந்திய சதுரங்க வீரர்

இன்றைய தின இறப்புகள்

1950 – மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர், (பி. 1876)

1967 – புர்குல ராமகிருஷ்ண ராவ், ஐதராபாது மாகாண முதலமைச்சர் (பி. 1899)

2005 – ரா. தாமரைக்கனி, தமிழக அரசியல்வாதி (பி. 1946)

1973 – விக்டர் அரா, சிலி நாட்டுப் பாடகர் (பி. 1932)

இன்றைய தின  சிறப்பு நாள்

பொறியியலாளர் நாள் (இந்தியா)

விடுதலை நாள், (குவாத்தமாலா, எல் சால்வடோர், ஹொண்டுராஸ், நிக்கராகுவா, கோஸ்ட்டா ரிக்கா, 1821)

அனைத்துலக மக்களாட்சி நாள்

Categories

Tech |