Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 24…!!

அக்டோபர் 24  கிரிகோரியன் ஆண்டின் 297 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 298 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 68 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

69 – வெசுப்பாசியானுக்கு விசுவாசமான படையினர் உரோமைப் பேரரசர் விட்டேலியசின் படைகளைத் தோற்கடித்தனர்.

1260 – சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது யுனெசுக்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1605– முகலாயப் பேரரசர் ஜகாங்கீரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது.

1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.

1795 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் கலைக்கப்பட்டு, அதனை ஆஸ்திரியா, புருசியா, மற்றும் உருசியா ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.

1801 – மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.

1851 – யுரேனசு கோளைச் சுற்றும் உம்பிரியல், ஏரியல் ஆகிய நிலாக்களை வில்லியம் இலாசல் கண்டுபிடித்தார்.

1857 – உலகின் முதலாவது காற்பந்தாட்ட அணி செபீல்டு இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1861 – ஐக்கிய அமெரிக்காவில் கண்டங்களுக்கிடையேயான முதலாவது தந்தித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

1871 – லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 20 வரையான சீனக் குடியேறிகள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

1902 – குவாத்தமாலாவின் சாண்டா மரியா எரிமலை வெடிக்க ஆரம்பித்தது. இது 20-ஆம் நூற்றாண்டின் மூன்றாவது மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஆகும்.

1911 – வட கரொலைனாவில் ரைட் சகோதரர்கள் தமது வானூர்தியில் வானில் 9 நிமிடங்கள் 45 செக்கன்கள் பறந்தார்கள்.

1912 – முதலாவது பால்கான் போர்: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற உதுமானியப் பேரரசுக்கு எதிரான போரில் செர்பியா வெற்றி பெற்றது.

1917 – முதலாம் உலகப் போர்: கப்பரெட்டோ சமரில் ஆத்திரியா-அங்கேரி, செருமனியப் படைகளிடம் இத்தாலி பெரும் தோல்வியடைந்தது.

1917 – போல்செவிக் செம்படையினர் உருசியாவில் அரசக் கட்டடங்களைக் கைப்பற்ற ஆரம்பித்தனர். அக்டோபர் புரட்சியின் முதல் நிகழ்வுகள் இவையாகும்.

1929 – கறுப்பு வியாழன்: நியூயார்க் பங்குச் சந்தையில் பங்குகள் சரிவு.

1930 – பிரேசிலில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் வாசிங்டன் லூயிசு பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1943 – நாடு கடந்த இந்திய அரசு முறைப்படி பிரித்தானியா மீதும் அமெரிக்கா மீதும் போரை அறிவித்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: முசாசி என்ற சப்பானியப் போர்க்கப்பலை அமெரிக்க விமானங்கள் தாக்கி மூழ்கடித்தன.

1945 – ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

1946 – வி-2 இல. 13 என்ற ஏவூர்தியில் பொருத்தப்பட்ட புகைப்படக் கருவி மூலம் முதன் முதலாக விண்ணில் இருந்து பூமியின் புகைப்படம் எடுக்கப்பட்டது.

1949 – ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.

1954 – டுவைட் டி. ஐசனாவர் தெற்கு வியட்நாமிற்கு ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவைத் தெரிவித்தார்.

1960 – சோவியத் ஒன்றியத்தின் பைக்கனூர் விண்தளத்தில் ஆர்-16 ஏவுகணை வெடித்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1964 – வடக்கு றொடீசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சாம்பியா என்னும் பெயரைப் பெற்றது.

1980 – போலந்து அரசு சொலிடாரிட்டி தொழிற்சங்கத்தை அங்கீகரித்தது.

1994 – கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசுத்தலைவர் வேட்பாளர் காமினி திசாநாயக்கா உட்பட 52 பேர் கொல்லப்பட்டனர்.

1998 – டீப் ஸ்பேஸ் 1 என்ற வால்வெள்ளி/சிறுகோள் திட்டம் ஆரம்பமானது.

2003 – கான்கோர்டு விமானம் தனது கடைசி வணிக-நோக்குப் பயணத்தை மேற்கொண்டது.

2007 – சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் ‘சாங்-ஒன்று’ தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

2008 – இரத்த வெள்ளி அன்று உலகின் பெரும்பாலான பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டன.

இன்றைய தின பிறப்புகள்

1632 – ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு உயிரியலாளர் (இ. 1723)

1775 – பகதூர் சா சஃபார், இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசர் (இ. 1862)

1804 – வில்கெம் எடுவர்டு வெபர், செருமானிய இயற்பியலாளர் (இ. 1891)

1827 – ரிப்பன் பிரபு, பிரித்தானிய அரசியல்வாதி, இந்திய வைசிராய் (இ. 1909)

1890 – சிசிர் குமார் மித்ரா, இந்திய இயற்பியலாளர் (இ. 1963)

1914 – இலட்சுமி சாகல், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இந்தியத் தேசிய இராணுவப் போராளி (இ. 2012)

1915 – பாப் கார்னே, அமெரிக்க எழுத்தாளர் (இ. 1998)

1921 – ஆர். கே. லட்சுமண், இந்திய ஓவியர் (இ. 2015)

1921 – ஏ. கே. வேலன், தமிழக எழுத்தாளர்

1924 – சி. கதிரவேலுப்பிள்ளை, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1981)

1932 – இசுடீபன் கோவே, அமெரிக்க எழுத்தாளர், கல்வியாளர் (இ. 2012)

1940 – கி. கஸ்தூரிரங்கன், இந்திய விண்வெளி அறிவியலாளர்

1954 – மால்கம் டேர்ன்புல், ஆத்திரேலியாவின் 29வது பிரதமர்

1957 – இ. ஜெயராஜ், இலங்கை கம்பன் கழக அமைப்பாளர்

1971 – மல்லிகா செராவத், இந்திய நடிகை

1980 – லைலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1983 – தீபச்செல்வன், ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்

1992 – துளசி தருமலிங்கம், இலங்கை-செருமனிய குத்துச்சண்டை வீரர்

இன்றைய தின இறப்புகள்

1601 – டைக்கோ பிராகி, டென்மார்க் வானியலாளர் (பி. 1546)

1801 – மருது பாண்டியர், இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள்

1869 – ஜோசப் ஜாக்சன் லிஸ்டர், பிரித்தானிய இயற்பியலாளர் (பி. 1786)

1870 – அந்தோனி மரிய கிளாரட், எசுப்பானிய, கத்தோலிக்க மறைபோதகர் (பி. 1807)

1953 – மு. கதிரேசச் செட்டியார், தமிழகத் தமிழறிஞர் (பி. 1881)

1956 – எச். என். ரிட்லி, பிரித்தானியத் தாவரவியலாளர், மலாயாவில் ரப்பர் மரங்களை அறிமுகப்படுத்தியவர் (பி. 1885)

1981 – எடித் எட், அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் (பி. 1897)

1991 – இசுமத் சுகதாய், இந்திய எழுத்தாளர் (பி. 1915)

1994 – காமினி திசாநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (பி. 1942)

2005 – றோசா பாக்ஸ், அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1913)

2006 – தரம்பால், இந்திய காந்தியவாதி, வரலாற்று ஆய்வாளர் (பி. 1922)

2011 – ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்கக் கணினி அறிவியலாளர், உணரறிவியலாளர் (பி. 1927)

2013 – மன்னா தே, இந்தியப் பாடகர் (பி. 1919)

2014 – தேனுகா, கலை, இலக்கிய விமரிசகர்

2014 – எஸ். எஸ். ராஜேந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1928)

இன்றைய தின சிறப்பு நாள்

அந்தோனி மரிய கிளாரட் திருவிழா

உலக இளம்பிள்ளை வாத நாள்

விடுதலை நாள் (சாம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1964)

ஐக்கிய நாடுகள் நாள்

Categories

Tech |