Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 19…!!

அக்டோபர் 19  கிரிகோரியன் ஆண்டு 292 ஆம் நாள்.

நெட்டாண்டு 293 ஆம் நாள்.

ஆண்டு முடிவு மேலும் 73 நாள்.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 202 – சாமா நகரப் போரில், உரோமைப் படையினர் கார்த்திச் நகரக் காவலர்களின் தலைவர் அனிபாலை வென்றனர்.

1216 – இங்கிலாந்தின் ஜான் மன்னர் இறக்க, அவரது ஒன்பது வயது மகன் மூன்றாம் என்றி ஆட்சிக்கு வந்தான்.

1453 – பிரான்சியர்கள் பொர்தோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1469 – அரகொன் நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி முதலாம் இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516 இல் எசுப்பானியா நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது.

1596 – சான் பிலிப் என்ற எசுப்பானியக் கப்பல் சப்பான் கரையில் மூழ்கியது.

1781 – வர்ஜீனியா, யோர்க்டவுன் நகரில் பிரித்தானியத் தளபதி கார்ன்வாலிசு பிரபுவின் பிரதிநிதிகள் சியார்ச் வாசிங்டனிடம் சரணடைந்தனர்.

1805 – நெப்போலியப் போர்கள்: ஊல்ம் நகர சமரில் ஆஸ்திரியாவின் தளபதி மாக்கின் இராணுவம் நெப்போலியன் பொனபார்ட்டிடம் சரணடைந்தது. 30,000 கைதிகள் கைப்பற்றப்பட்டனர், 10,000 இறந்தனர்.

1812 – பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் மாஸ்கோவில் இருந்து பின்வாங்கினான்.

1813 – செருமனியின் லைப்சிக் நகரில் நெப்போலியன் பொனபார்ட் பெரும் தோல்வியடைந்தான். ரைன் கூட்டமைப்பு முடிவுக்கு வந்தது.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் கனடாவில் இருந்து வேர்மொண்ட் மாநிலத்தின் சென் அல்பான்ஸ் நகரைத் தாக்கினர்.

1866 – ஆஸ்திரியா வெனிட்டோ, மாந்துவா ஆகியவற்றை பிரான்சிடம் கையளித்தது. பிரான்சு உடனடியாகவே அவற்றை இத்தாலியிடம் கொடுத்தது.

1900 – மேக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிரியல் விதியை (பிளாங்கின் விதி) கண்டுபிடித்தார்.

1912 – இத்தாலி திரிப்பொலி நகரை உதுமானியரிடம் இருந்து கைப்பற்றியது.

1921 – லிஸ்பன் நகரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து போர்த்துக்கல் பிரதமர் அந்தோனியோ கிராஞ்சோ உட்படப் பல அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்.

1935 – எதியோப்பியாவை இத்தாலி கைப்பற்றியதை அடுத்து உலக நாடுகளின் கூட்டணி இத்தாலி மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.

1943 – 2,098 இத்தாலிய போர்க் கைதிகளுடன் சென்ற சின்ஃபிரா என்ற சரக்குக் கப்பல் கிரீட் நகரில் சௌதா குடாவில் கூட்டுப் படையினரால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

1943 – காச நோய்க்கான இசுட்ரெப்டோமைசின் என்ற முதலாவது நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்து இரட்கர்சு பல்கலைக்கழகத்தில் பிரித்தெடுக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்சில் தரையிறங்கின.

1944 – குவாத்தமாலாவில் பத்தாண்டுகள் நீடித்த இராணுவப் புரட்சி ஆரம்பமானது.

1946 – இலங்கையில் யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த இரவுத் தொடருந்து அனுராதபுரத்திற்கு அருகாமையில் இரத்மலை என்ற இடத்தில் தடம் புரண்டதில் நால்வர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர்.[1]

1950 – சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தினர் திபெத்தின் காம்டோ நகரைக் கைப்பற்றினர்.

1950 – சீனா கொரியப் போரில் இணைந்தது. பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் ஐநா படைகளை எதிர்க்க யாலு ஆற்றைத் தாண்டினர்.

1954 – சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது.

1956 – சோவியத் ஒன்றியமும் யப்பானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் 1945 ஆகத்து முதல் இரு நாடுகளுக்குமிடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்தது.

1960 – பனிப்போர்: அமெரிக்கா கம்யூனிசக் கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்தது.

1974 – நியுவே நியூசிலாந்திடமிருந்து விடுதலைப் பெற்று சுயாட்சி மண்டலமாகியது.

1976 – சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது.

1983 – கிரெனாடாவில் அக்டோபர் 14 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் பிரதமர் மோரிஸ் பிசொப் படுகொலை செய்யப்பட்டார்.

1986 – மொசாம்பிக் அதிபர் சமோரா மேச்சல் உட்பட 33 பேர் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.

1987 – அமெரிக்கக் கடற்படை பாரசீக வளைகுடாவில் இரண்டு ஈரானிய எண்ணெய்க் குதங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

1988 – பிரித்தானிய அரசு சின் பெயின் மற்றும் அயர்லாந்து துணை இராணுவக் குழுக்கள் மீது வானொலி, தொலைக்காட்சித் தடை விதித்தது.

2000 – பிபிசியின் யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.

2001 – 400 அகதிகளை ஏற்றிச் சென்ற இந்தோனேசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிழ்ந்ததில் 146 சிறுவர்கள், 142 பெண்கள் உட்பட 353 பேர் உயிரிழந்தனர்.

2003 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அன்னை தெரேசாவை முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.

2005 – மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சதாம் உசைனுக்கு எதிரான வழக்கு பக்தாதில் தொடங்கியது.

2009 – தமிழ்நாதம், புதினம் ஆகிய ஈழச்சார்பு இணையத்தளங்கள் நிறுத்தப்பட்டன.

2013 – புவெனஸ் ஐரிஸ் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 105 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1862 – அகுஸ்தே லூமியேர், பிரான்சியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1954)

1888 – வெ. இராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் (இ. 1972)

1895 – லூயிசு மம்ஃபோர்டு, அமெரிக்க வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1990)

1910 – சுப்பிரமணியன் சந்திரசேகர், நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1995)

1913 – வினிசியசு டி மோரேசு, பிரேசில் கவிஞர் (இ. 1980)

1917 – சரத்சந்திர சங்கர் சிறீகாந்த், இந்தியக் கணிதவியலாளர்

1919 – மன்னை நாராயணசாமி, தமிழக அரசியல்வாதி

1924 – நரேந்திரநாத் சக்ரவர்த்தி, வங்காள மொழிக் கவிஞர் (இ. 2018)

1931 – ஜான் லே காரே, ஆங்கிலேய உளவுப்புனைவு எழுத்தாளர்

1942 – ஜிம் ரோஜர்ஸ், அமெரிக்கத் தொழிலதிபர், முதலீட்டாளர், நூலாசிரியர்

1945 – ஆங்கசு டீட்டன், நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய-அமெரிக்க பொருளியலாளர்

1946 – ரா. தாமரைக்கனி, தமிழக அரசியல்வாதி (இ. 2005)

1955 – ஜீன் கம்பாண்டா, ருவாண்டா அரசியல்வாதி, இனப்படுகொலைக் குற்றவாளி

1956 – கு. ஞானசம்பந்தன், தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், நடிகர்

1961 – சன்னி தியோல், இந்திய நடிகர்

1976 – கோ சன், தென் கொரிய விண்வெளி வீரர்

இன்றைய தின இறப்புகள்

1216 – ஜான், இங்கிலாந்து மன்னர் (பி. 1167)

1745 – ஜோனதன் ஸ்விப்ட், அயர்லாந்து எழுத்தாளர் (பி. 1667)

1867 – ஜேம்சு சவுத், பிரித்தானிய வானியலாளர் (பி. 1785)

1936 – லூ சுன், சீன எழுத்தாளர் (பி. 1881)

1937 – எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு, நோபல் பரிசு பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1871)

1950 – எட்னா செயிண்ட். வின்சென்ட் மில்லாய், அமெரிக்கக் கவிஞர் (பி. 1892)

2000 – நிமலராஜன், யாழ்ப்பாண பிபிசி செய்தியாளர்

2001 – தர்மா குமார், இந்திய பொருளியல் வரலாற்றாசிரியர், நூலாசிரியர் (பி. 1928)

2006 – ஸ்ரீவித்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி 1953)

2011 – காக்கநாடன், இந்திய எழுத்தாளர் (பி. 1935)

இன்றைய தின சிறப்பு நாள்

சிலுவையின் புனித பவுல் திருவிழா

அன்னை தெரேசா நாள் (அல்பேனியா

Categories

Tech |