Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 17…!!

நவம்பர் 17  கிரிகோரியன் ஆண்டின் 321 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 322 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 44 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1292 – ஜோன் பலியல் இசுக்காட்லாந்தின் மன்னனாக முடிசூடினார்.

1405 – சூலு சுல்தானகம் அமைக்கப்பட்டது.

1511 – எசுப்பானியா மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன.

1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார்.

1603 – ஆங்கிலேய நாடுகாண் பயணி, எழுத்தாளர் சர் வால்ட்டர் ரேலி தேசத்துரோகக் குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

1796 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன.

1800 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் தனது முதலாவது அமர்வை வாசிங்டன், டி. சி.யில் ஆரம்பித்தது.

1811 – ஒசே மிகுவேல் கரேரா சிலியின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.

1820 – கப்டன் நத்தானியல் பால்மர் அண்டார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். பால்மர் குடாநாடு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.

1831 – எக்குவாடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியன பாரிய கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.

1869 – எகிப்தில், நடுநிலக் கடலையும், செங்கடலையும் இணைக்கும் சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.

1873 – பெஸ்ட், பூடா, ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட புடாபெஸ்ட் நகரம் அங்கேரியின் தலைநகராக்கப்பட்டது.

1878 – இத்தாலி மன்னர் முதலாம் உம்பேர்ட்டோ மீதான முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது. மன்னர் சிறு காயங்களுடன் தப்பினார்.

1903 – உருசியாவின் சமூக சனநாயக தொழிற் கட்சி போல்செவிக் (பெரும்பான்மை), மேன்செவிக் (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவுண்டது.

1918 – யாழ்ப்பாணத்தில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிவாரண நிதியம் அமைக்கப்பட்டது.[1]

1922 – முன்னாள் உதுமானிய சுல்தான் ஆறாம் மெகெமெத் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டான்.

1933 – ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.

1939 – செக் நாட்டில் நாட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 9 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்நாளை நினைவுகூரும் முகமாக அனைத்துலக மாணவர் நாள் பல நாடுகளில் நினைவுகூரப்பட்டு வருகிறது.

1947 – அமெரிக்க அறிவியலாளர்கள் ஜான் பார்டீன், வால்டர் பிராட்டன் ஆகியோர் திரான்சிஸ்டரின் முக்கிய இயல்புகளைக் கண்டறிந்தனர். 20-ஆம் நூற்றாண்டின் மின்னணுவியல் புரட்சி ஆரம்பமானது.

1950 – லாமோ டோண்டிரப் டென்சின் கியாட்சோ என்ற பெயரில் திபெத்தின் 14வது தலாய் லாமாவாக முடிசூடினார்.

1953 – அயர்லாந்து, பிளாசுக்கெட் தீவுகளில் இருந்து அங்கு வாழ முடியாத சூழலில் எஞ்சிய குடிமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

1969 – பனிப்போர்: பேரழிவு ஆயுதங்களைக் குறைக்கும் முகமாக சோவியத், அமெரிக்க அதிகாரிகள் எல்சிங்கியில் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.

1970 – சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய தானியங்கி ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.

1983 – தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை மெக்சிக்கோவில் அமைக்கப்பட்டது.

1989 – பனிப்போர்: செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்பமாக அமைந்தது.

1993 – நைஜீரியாவில் இராணுவப் புரட்சி மூலம் அரசு கவிழ்க்கப்பட்டது.

1997 – எகிப்தில், அல்-உக்சுர் நகரில் இசுலாமியப் போராளிகளின் தாக்குதலில் 62 பேர் கொல்லப்பட்டனர்.

2000 – பெருவில் அரசுத்தலைவர் ஆல்பர்ட் புஜிமோரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

2012 – எகிப்தில் தொடருந்துக் கடவை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 50 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.

2013 – உருசியாவில் கசான் விமான நிலையத்தில் தத்தாரிஸ்தான் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 50 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

9 – வெசுப்பாசியான், உரோமைப் பேரரசர் (இ. 79)[2]

1865 – ஜான் சுடேன்லி பிளாசுகெட், கனடிய வானியலாளர் (இ. 1941)

1870 – வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார், தமிழகப் புரவலர், தமிழறிஞர் (இ. 1920)

1870 – செர்கேய் பிளாசுக்கோ, உருசிய வானியலாளர் (இ. 1956)

1885 – சார்லசு ரோஷர், அமெரிக்கத் திரைப்பட ஒளிப்பதிவாளர் (இ. 1974)

1887 – பெர்னார்ட் மோண்ட்கோமரி, ஆங்கிலேய படைத்துறை அதிகாரி (இ. 1976)

1896 – லெவ் வைகாட்ஸ்கி, பலருசிய-உருசிய மெய்யியலாளர், உளவியலாளர் (இ. 1934)

1904 – இசாமு நொகுச்சி, அமெரிக்க கட்டிடக்கலைஞர், சிற்பி (இ. 1988)

1906 – சோய்செரோ ஹோண்டா, ஹோண்டா நிறுவனத்தை ஆரம்பித்த சப்பானியப் பொறியியலாளர் (இ. 1991)

1909 – சி. இலக்குவனார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1973)

1917 – க. வேலாயுதம், ஈழத்து எழுத்தாளர் (இ. 2009)

1920 – ஜெமினி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர் (இ. 2002)

1922 – இசுட்டான்லி கோகென், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர்

1927 – கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (இ. 2009)

1929 – பி. சி. சேகர், மலேசியத் தமிழ் வேதியியலாளர், இரப்பர் தொழிலை நவீனமயப் படுத்தியவர் (இ. 2006)

1930 – பிரேம்ஜி ஞானசுந்தரம், இலங்கை எழுத்தாளர், பத்திரிகையாளர் (இ. 2014)

1942 – காயிங் கெக் இயேவ், கம்போடியக் குற்றவாளி

1942 – மார்ட்டின் ஸ்கோர்செசி, அமெரிக்க இயக்குநர், நடிகர்

1950 – கோகிலா மகேந்திரன், ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர், நாடகக் கலைஞர்

1951 – திருச்சி பிரேமானந்தா, இலங்கை-இந்தியத் துறவி (இ. 2011)

1952 – சிறில் ரமபோசா, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி

1972 – ரோஜா செல்வமணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1978 – கீர்த்தி ரெட்டி, தெனிந்தியத் திரைப்பட நடிகை

1982 – யூசுஃப் பதான், இந்தியத் துடுப்பாளர்

1983 – கிறிஸ்டோபர் பாலோனி, அமெரிக்க எழுத்தாளர்

இன்றைய தின இறப்புகள்

1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி (பி. 1516)

1796 – இரண்டாம் கத்தரீன், உருசியப் பேரரசி (பி. 1729)

1858 – இராபர்ட்டு ஓவன், உவெல்சு செயற்பாட்டாளர் (பி. 1771)

1917 – ஆகுஸ்ட் ரொடான், பிரான்சிய சிற்பி (பி. 1840)

1928 – லாலா லஜபதி ராய், இந்திய அரசியல்வாதி (பி. 1865)

1973 – மிரா அல்பாசா, பிரான்சிய-இந்திய ஆன்மீகத் தலைவர் (பி. 1878)

1989 – திருச்சி லோகநாதன், தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1924)

2000 – இலூயீ நீல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1904)

2010 – பி. விருத்தாசலம், தமிழகத் தமிழறிஞர் (பி. 1940)

2012 – பால் தாக்கரே, மகாராட்டிர-இந்திய அரசியல்வாதி (பி. 1926)

2013 – டோரிஸ் லெசிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1919)

2013 – பூரணி, தமிழக எழுத்தாளர் (பி. 1913)

2013 – திடீர் கண்ணையா, நகைச்சுவை நடிகர் (பி. 1937)

2015 – பித்துக்குளி முருகதாஸ், பக்திப் பாடகர் (பி. 1920)

இன்றைய தின சிறப்பு நாள்

அனைத்துலக மாணவர் நாள்

உலக குறைப்பிரசவ தினம்

Categories

Tech |