நெட்டாண்டுகளில் 364 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் இரு நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
1170 – கேன்டர்பரி ஆயர் தாமஸ் பெக்கெட் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றியின் ஆட்களால் கேன்டர்பரி ஆலயத்தினுள் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவர் பின்னர் ஆங்கிலக்க, கத்தோலிக்கப் புனிதராக ஏற்கப்பட்டார்..
1427 – மிங் சீன இராணுவம் அனோயில் இருந்து விலகியது.
1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: 3,500 பிரித்தானியப் போர்வீரர்கள் ஜோர்ஜியா மாநிலத்தின் சவான்னா நகரைக் கைப்பற்றினர்.
1835 – மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1845 – டெக்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது.
1851 – அமெரிக்காவின் முதலாவது இளைய கிறித்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பாஸ்டனில் அமைக்கப்பட்டது.
1874 – எசுப்பானியாவில் இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததை அடுத்து அங்கு மன்னராட்சி மீண்டும் கொண்டுவரப்பட்டது. பன்னிரண்டாம் அல்போன்சோ புதிய மன்னராக முடிசூடினார்.
1876 – ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் தொடருந்துப் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் உயிரிழந்தனர்.
1890 – வூண்டட் நீ படுகொலை: தென் டகோட்டாவில் அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 300 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.
1911 – மங்கோலியா சிங் சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றது. போகடு கான் மங்கோலியாவின் பேரரசரானார்.
1930 – அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.
1937 – ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: லண்டன் நகரின் மேல் நாட்சி ஜெர்மனியின் வான்படைகள் தீக்குண்டுகளை வீசியதில் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1972 – புளோரிடாவில் மயாமி விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 101 பேர் உயிரிழந்தனர்.
1975 – நியூயோர்க் நகர லாகோர்தியா விமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டு 74 பேர் காயமடைந்தனர்.
1987 – 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்.
1993 – உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஆங்காங்கில் அமைக்கப்பட்டது.
1996 – குவாத்தமாலாவில் அந்நாட்டு அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் 36-ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.
1997 – ஆங்காங்கில் கோழிகளுக்கு தொற்றுநோய் பரவியதை அடுத்து அங்கிருந்த அனைத்து 1.25 மில்லியன் கோழிகளும் கொல்லப்பட்டன.
1998 – கம்போடியாவில் 1970களில் ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூச் தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.
2001 – பெருவின் தலைநகர் லீமாவில் பெரும் தீ பரவியதில் 274 பேர் உயிரிழந்தனர்.
2011 – சமோவா, டோக்கெலாவ் ஆகிய நாடுகள் புதிய நாள்காட்டியை அறிமுகப்படுத்தின. இதன்படி, டிசம்பர் 29 இற்கு அடுத்தநாள் டிசம்பர் 31 ஆக அறிவித்தன.
2013 – உருசியா, வோல்கோகிராட் தொடருந்து நிலையம் ஒன்றில் தற்கொலைக் குண்டு வெடித்ததில் 18 பேர் கொல்லபட்டனர்.
இன்றைய தின பிறப்புகள்
1766 – சார்லசு மேகிண்டோச், இசுக்கொட்டிய வேதியியலாளர் (இ. 1843)
1809 – வில்லியம் கிளாட்ஸ்டோன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1898)
1844 – உமேஷ் சந்திர பானர்ஜி, இந்திய தேசிய காங்கிரசின் 1-வது தலைவர் (இ. 1906)
1893 – ராசிக் பரீத், இலங்கை அரசியல்வாதி (இ. 1984)
1904 – குவெம்பு, இந்தியக் கவிஞர் (இ. 1994)
1910 – ரொனால்ட் கோஸ், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2013)
1914 – பில்லி டிப்டன், அமெரிக்க பியானோ, சாக்சபோன் கலைஞர் (இ. 1989)
1930 – ரொபின் தம்பு, இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் (இ. 2000)
1937 – மாமூன் அப்துல் கயூம், மாலைதீவுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர்
1942 – ராஜேஷ் கன்னா, இந்திய நடிகர், தயாரிப்பாளர் (இ. 2012)
1945 – பிரேந்திரா, நேப்பாள மன்னர் (இ. 2001)
1953 – தாமசு பாக், பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 9வது தலைவர், செருமானியர்
1953 – ஆலன் ரஸ்பிரிட்சர், சாம்பியா-ஆங்கிலேய ஊடகவியலாளர்
1960 – டேவிட் பூன், ஆத்திரேலியத் துடுப்பாளர்
1974 – டுவிங்கிள் கன்னா, இந்திய நடிகை
இன்றைய தின இறப்புகள்
1720 – மரியா மார்கரெதா கிர்ச்சு, செருமனிய வானியலாளர் (பி. 1670)
1825 – ஜாக்-லூயி டேவிட், பிரான்சிய ஓவியர் (பி. 1748)
1834 – தோமஸ் மால்தஸ், ஆங்கிலேய பொருளாதார அறிஞர் (பி. 1766)
1890 – எகாக்கா கிளெசுக்கா, அமெரிக்கப் பழங்குடித் தலைவர் (பி. 1826)
1912 – இராபர்ட் புருசு ஃபூட், பிரித்தானிய நிலவியலாளர், தொல்பொருள் ஆய்வாளர் (பி. 1834)
1926 – ரெய்னர் மரியா ரில்கே, ஆத்திரியக் கவிஞர் (பி. 1875)
2009 – பழ. கோமதிநாயகம், தமிழகப் பாசனப் பொறியியல் வல்லுநர்
2012 – டோனி கிரெய்க், தென்னாப்பிரிக்க-ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர், ஊடகவியலாளர் (பி. 1946)
2015 – தமிழண்ணல், தமிழறிஞர் (பி. 1928)