ஆண்டு முடிவிற்கு மேலும் 348 (நெட்டாண்டுகளில் 349) நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
1287 – அரகொன் மன்னர் மூன்றாம் அல்பொன்சோ மெனோர்க்கா தீவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார்.
1362 – ஐரோப்பாவில் பிரித்தானியத் தீவுகள், நெதர்லாந்து, வடக்கு செருமனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கினால் 25,000 பேர் வரை உயிரிழந்தனர்.[1]
1377 – திருத்தந்தை பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை உரோமுக்கு மாற்றினார்.
1524 – இத்தாலிய நாடுகாண்பயணி ஜியோவன்னி டா வெரசானோ பசிபிக் பெருங்கடலுக்கான கடல் வழியைக் காணும் பொருட்டு மதீராவில் இருந்து மேற்குப் பக்கமாக பயணத்தை ஆரம்பித்தார்.
1595 – பிரான்சின் நான்காம் என்றி எசுப்பானியா மீது போரை அறிவித்தார்.
1608 – எத்தியோப்பியப் பேரரசர் முதலாம் சுசேனியோசு தலைமையிலான இராணுவம், ஒரோமோ படைகளைத் தோற்கடித்து 12,000 பேரைக் கொன்றது.
1648 – இங்கிலாந்தின் லோங் நாடாளுமன்றம் முதலாம் சார்லசுடனான தொடர்புகளை அறுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து உள்நாட்டுப் போர் இரண்டாம் கட்டத்தை அடைந்தது.
1773 – கப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக் வட்டத்தை அடைந்தார்.
1811 – மெக்சிக்கோ விடுதலைப் போர்: எசுப்பானியாவின் சுமார் 6,000 படை வீரர்கள் 100,000 மெக்சிக்கோ புரட்சியாளர்களைத் தோற்கடித்தனர்.
1819 – சைமன் பொலிவார் கொலம்பியக் குடியரசை அறிவித்தார்.
1852 – ஐக்கிய இராச்சியம் வால் ஆற்றுக்கு வடக்கே பூர்களை அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தை தென்னாபிரிக்கக் குடியரசுடன் செய்து கொண்டது.
1893 – அவாயில் அமெரிக்க கடற்படையின் தலையீட்டால் அரசி லில்லியுகலானியின் அரசு கவிழ்க்கப்பட்டது.
1899 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் வேக் தீவை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டது.
1912 – பிரித்தானிய நாடுகாண் பயணி கப்டன் இராபர்ட் பால்க்கன் இசுக்காட் தென் துருவத்தை அடைந்தார்.
1915 – முதலாம் உலகப் போர்: உருசியா உதுமானியத் துருக்கியை சரிக்காமிசு போரில் வென்றது.
1917 – கன்னித் தீவுகளுக்காக ஐக்கிய அமெரிக்கா $25 மில்லியனை டென்மார்க்கிற்குக் கொடுத்தது.
1920 – ஐக்கிய அமெரிக்காவில் மதுசாரத் தடை அமுலுக்கு வந்தது.[2]
1928 – லியோன் ட்ரொட்ஸ்கி மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: நேசநாட்டுப் படைகள் குளிர்காலக் கோட்டை ஊடறுத்து உரோமைக் கைப்பற்ற மோண்டி கசீனோ மீது முதலாவது தாக்குதலை மேற்கொண்டது. இச்சண்டைகளில் 105,000 நேசப் படையினர் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்தின் வார்சா நகரை நாட்சிகளிடம் இருந்து கைப்பற்றின.
1945 – சோவியத் படைகள் நெருங்கியதை அடுத்து அவுஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்து நாட்சிகள் வெளியேற ஆரம்பித்தனர்.
1946 – ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை முதலாவது கூட்டத்தை நடத்தியது.
1948 – தென்கிழக்கு ஆசியாவில் தனது குடியேற்றத்தை மீண்டும் ஆரம்பிக்க முயன்ற நெதர்லாந்துக்கும், இந்தோனேசியாவுக்கும் அரசியல் உடன்பாடு எட்டப்பட்டது.
1951 – சீன மற்றும் வட கொரியப் படையினர் சியோல் நகரைக் கைப்பற்றினர்.
1961 – கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் பத்திரிசு லுமும்பா இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
1981 – பிலிப்பீன்சில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமுலில் இருந்த இராணுவச் சட்டத்தை அரசுத்தலைவர் பேர்டினண்ட் மார்க்கோஸ் நீக்கினார்.
1991 – நோர்வே மன்னர் ஐந்தாம் ஓலவ் இறந்ததை அடுத்து அவரது மகன் ஐந்தாம் அரால்டு மன்னராக முடிசூடினார்.
1991 – வளைகுடாப் போர் ஆரம்பமானது.
1992 – இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்தியமைக்காக சப்பானியப் பிரதமர் கீச்சி மியாசாவா தென் கொரியாவில் வைத்து மன்னிப்புக் கேட்டார்.
1994 – லாசு ஏஞ்சலசில் 6/7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 57 பேர் உயிரிழந்தனர்.
1995 – சப்பானின் கோபே நகரில் இடம்பெற்ற 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 6,434 பேர் உயிரிழந்தனர்.
1998 – ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளின்டன் தன்னைப் பாலியல் வதைக்கு உட்படுத்தியதாக போலா ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.
2002 – காங்கோவில் நைராகொங்கோ எரிமலை வெடித்ததில் 400,000 பேர் இடம்பெயர்ந்தனர்.
2007 – வட கொரியா அணுவாயுதச் சோதனை நடத்தியதை அடுத்து ஊழிநாள் கடிகாரம் நள்ளிரவுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக மாற்றப்பட்டது.
2010 – நைஜீரியாவில் முசுலிம், கிறித்தவக் குழுக்களிடையே கலவரம் வெடித்ததில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1706 – பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 1790)
1899 – அல் கபோன், அமெரிகக்க் குற்றக் குழுத் தலைவர் (இ. 1947)
1905 – தத்தராய ராமச்சந்திர கப்ரேக்கர், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1986)
1917 – எம். ஜி. இராமச்சந்திரன், தமிழக நடிகர், இயக்குநர், தமிழ்நாட்டின் 5வது முதலமைச்சர் (இ. 1987)
1922 – தோன்சே ஆனந்த் பை, இந்திய அரசியல்வாதி, வங்கியாளர் (இ. 1981)
1936 – அ. தங்கத்துரை, இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் (இ. 1997)
1942 – முகம்மது அலி, அமெரிக்கக் குட்டுச்சண்டை வீரர் (இ. 2016)
1945 – ஜாவேத் அக்தர், இந்தியக் கவிஞர், இசையமைப்பாளர்
1962 – ஜிம் கேரி, கனடிய-அமெரிக்க நடிகர்
1964 – மிசெல் ஒபாமா, அமெரிக்க சட்டவறிஞர், செயற்பாட்டாளர், அமெரிக்காவின் 46வது முதல்பெண்மணி
1985 – சிமோன் சைமன்சு, இடச்சுப் பாடகர்
இன்றைய தின இறப்புகள்
1824 – தோமசு மெயிற்லண்ட், பிரித்தானிய இலங்கையின் 2-வது ஆளுநர் (பி. 1760)
1930 – கௌஹர் ஜான், இந்திய இசைக் கலைஞர் (பி. 1873)
1940 – செ. இராசநாயகம், இலங்கைத் தமிழ் வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. 1870)
1961 – சாமி சிதம்பரம், தமிழக இதழாளர், எழுத்தாளர், திராவிட இயக்க செயல்பாட்டாளர் (பி. 1900)
1961 – பத்திரிசு லுமும்பா, கொங்கோ சனநாயகக் குடியரசின் 1-வது பிரதமர் (பி. 1925)
1997 – கிளைட் டோம்பா, புளூட்டோவைக் கண்டுபிடித்த அமெரிக்க வானியலாளர் (பி. 1906)
2005 – மு. மு. இஸ்மாயில், தமிழக நீதியரசர், தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1921)
2007 – ஆர்ட் புச்வால்ட், அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1925)
2008 – பாபி ஃபிஷர், அமெரிக்க சதுரங்க வீரர் (பி. 1943)
2009 – கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (பி. 1927)
2010 – ஜோதி பாசு, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் (பி. 1914)
2010 – எரிக் செகல், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1937)
2012 – எம். எஸ். பொன்னுத்தாய், தமிழகப் பெண் நாதசுவரக் கலைஞர்
2014 – சுனந்தா புஷ்கர், இந்திய-கனடியத் தொழிலதிபர் (பி. 1962)
2014 – சுசித்ரா சென், வங்காளத் திரைப்பட நடிகை (பி. 1931)
2016 – பத்மினி பிரியதர்சினி, தென்னிந்திய பரத நாட்டியக் கலைஞர், திரைப்பட நடிகை (பி. 1944)
2016 – கரு. அழ. குணசேகரன், தமிழக எழுத்தாளர் (பி. 1955)