இன்றைய தின நிகழ்வுகள்
1622 – அமெரிக்காவின் வர்ஜினியா மாநிலத்தில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.
1739 – நாதிர் ஷா தில்லியைக் கைப்பற்றி நகரை சூறையாடி, மயிலாசனத்தின் நகைகளைக் கைப்பற்றினான்.
1765 – அமெரிக்கக் குடியேற்றங்களில் நேரடியாக வரிகளை அறவிடுவதற்கு ஏதுவான சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1784 – மரகத புத்தர் சிலை தாய்லாந்தில் இன்றைய இருப்பிடமான வாட் பிரசிறீ ரத்தின சசாதரத்திற்கு பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
1829 – கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்சு, உருசியா ஆகியன வரையறுத்தன.
1867 – இலங்கை தொடருந்து போக்குவரத்து வரலாற்றில் முதல் தடவையாக தொடருந்து இழுபொறி இலங்கையின் உயர் புள்ளிகளில் ஒன்றான கடுகண்ணாவையை அடைந்தது.[1]
1872 – அமெரிக்காவின் இலினொய் மாநிலம் பணிகளில் பாலினச் சமனிலை பேணப்படவேண்டும் என சட்டமியற்றியது.
1873 – புவேர்ட்டோ ரிக்கோவின் எசுப்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை ஒழிக்க சட்டமியற்றப்பட்டது.
1916 – சீனாவின் கடைசிப் பேரரசர் யுவான் சிக்காய் முடிதுறந்தார். சீனக் குடியரசு உருவானது.
1920 – அசெரி, துருக்கி இராணுவத்தினர் நகர்னோ-கரபாக் வாழ் ஆர்மீனியர்களைப் படுகொலை செய்தனர்.
1939 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.
1943 – இரண்டாம் உலகப் போர்: பெலருசின் காத்தின் கிராம மக்கள் அனைவரும் நாட்சிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
1945 – அரபு நாடுகள் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.
1960 – ஆர்தர் சாவ்லொவ், சார்லசு டவுன்சு ஆகியோர் சீரொளிக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.
1965 – இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.
1972 – கருத்தடைப் பொருட்களை மணமாகாதோர் வைத்திருப்பதற்கு உரிமை உண்டென ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1982 – நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.
1992 – அல்பேனியாவில் கம்யூனிசத்தின் வீழ்ச்சி: அல்பேனிய சனநாயகக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது.
1992 – யூஎஸ்ஏர் 405 விமானம் நியூரோர்க்கின் லாகோர்தியாவில் இருந்து கிளம்பி சில நேரத்தில் விபத்துக்குள்ளாகியதில் 27 பேர் உயிரிழந்தனர்.
1995 – சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.
1997 – ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது.
2004 – பாலத்தீனத்தின் சுன்னி இசுலாமிய அமாசு இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான அகமது யாசின் இசுரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
2006 – பக்தாதில் 118 நாட்களாக பணயக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டிருந்த கிறித்தவ அமைதிகாக்கும் அணியைச் சேர்ந்த மூவர் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டனர்.
2013 – தாய்லாந்தில் பர்மிய அகதி முகாம் ஒன்று தீப்பிடித்ததில் 37 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.
2016 – பிரசெல்சு, வானூர்தி நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
2017 – இலண்டனில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1799 – பிரீட்ரிக் வில்கெல்ம் அர்கெலாந்தர், செருமானிய வானியலாளர் (இ. 1879)
1868 – இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1953)
1869 – எமிலியோ அகுயினால்டோ, பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவர் (இ. 1964)
1873 – யூலியெத்தா லாந்தேரி, இத்தாலிய-அர்கெந்தீன மருத்துவர், பெண்ணியவாதி (இ. 1932)
1877 – தி. வே. சுந்தரம், தமிழகத் தொழிலதிபர் (இ. 1955)
1894 – சூரியா சென், இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளர் (இ. 1934)
1909 – நேதன் ரோசென், இசுரேலிய இயற்பியலாளர் (இ. 1995)
1938 – கோவை மகேசன், இலங்கை எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல்வாதி (இ. 1992)
1942 – ஷீலா, தென்னிந்திய நடிகை
1955 – சொ. கருப்பசாமி, தமிழக அரசியல்வாதி (இ. 2011)
1964 – உ. சகாயம், இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, செயற்பாட்டாளர்
1976 – ரீஸ் விதர்ஸ்பூன், அமெரிக்க நடிகை
இன்றைய தின இறப்புகள்
1832 – யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, செருமானிய புதின எழுத்தாளர் (பி. 1749)
1896 – தோமஸ் ஹியூக்ஸ், ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1822)
1952 – டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் 1வது பிரதமர் (பி. 1883)
1961 – தம்பையா ஏகாம்பரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1913)
1977 – ஏ. கே. கோபாலன், இந்தியக் கல்வியலாளர், அரசியல்வாதி (பி. 1904)
2004 – அகமது யாசின், பாலத்தீனத் தலைவர் (பி. 1937)
2005 – ஜெமினி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1920)
2007 – பார்துமான் சிங் பிரார், இந்தியத் தடகள விளையாட்டு வீரர் (பி. 1927)
2013 – சினுவா அச்சிபே, நைஜீரிய எழுத்தாளர், கவிஞர் (பி. 1930)
2016 – ராப் ஃபோர்ட், கனடிய அரசியல்வாதி (பி. 1969)
2020 – விசு, தமிழகத் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர் (பி. 1945)