Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 26…!!

மார்ச் 26  கிரிகோரியன் ஆண்டின் 85 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 86 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 280 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

590 – பேரரசர் மவுரிசு தனது மகன் தியோடோசியசை பைசாந்தியப் பேரரசின் இணைப் பேரரசராக அறிவித்தார்.1027 – இரண்டாம் கொன்ராட் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.

1169 – சலாகுத்தீன் எகிப்தின் தளபதியாக (அமீர்) நியமிக்கப்பட்டார்.

1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது.

1484 – வில்லியம் காக்ஸ்டன் ஈசாப்பின் நீதிக்கதைகள் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார்.

1552 – குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது குருவானார்.

1812 – வெனிசுவேலாவின் கரகஸ் நகர் 7.7 அளவு நிலநடுக்கத்தில் அழிந்தது.

1871 – இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.[1]

1872 – கலிபோர்னியாவில் லோன் பைன் என்ற இடத்தில் 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.

1913 – முதலாம் பால்கன் போர்: பல்கேரியப் படைகள் ஆட்ரியானாபோல் நகரைக் கைப்பற்றின.

1917 – முதலாம் உலகப் போர்: காசாப் பகுதியில் இடம்பெற்ற முதலாவது சமரில் பிரித்தானியப் படைகளின் முன்னேற்றம் சுமார் 17,000 துருக்கியர்களால் தடுக்கப்பட்டது.

1934 – ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுனர்களுக்கான சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது.

1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: தேசியவாதிகள் தமது இறுதித் தாக்குதலை ஆரம்பித்தனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் அவுசுவிட்சு வதை முகாமிற்கு முதற்தடவையாக பெண் சிறைக்கைதிகள் கொண்டு செல்லப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: யப்பானுடனான இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்ததாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது.

1954 – மார்சல் தீவுகளில் உள்ள பிக்கினி திட்டில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

1958 – ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர்.

1971 – கிழக்கு பாகிஸ்தான் பாக்கித்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காளதேச விடுதலைப் போர் ஆரம்பமானது.

1979 – அன்வர் சாதாத், மெனசெம் பெகின், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் வாசிங்டனில் எகிப்திய-இசுரேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

1991 – அர்கெந்தீனா, பிரேசில், உருகுவை, பரகுவை ஆகிய நாடுகள் தெற்கத்திய பொதுச் சந்தையை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1997 – சுவர்க்கத்தின் வாயில் என்ற மதக் குழுவில் தற்கொலை செய்துகொண்ட 39 பேரின் உடல்கள் கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்டன.

1998 – அல்ஜீரியாவில் 2 அகவைக்குட்பட்ட 32 குழந்தைகள் உட்பட 52 பேர் கத்திகளாலும் வாள்களாலும் வெட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

2000 – விளாடிமீர் பூட்டின் உருசியாவின் அரசுத்தலைவராகத் தெரிவானார்.

2005 – தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்.

2005 – சீனாவின் பிரிவினைக்கு எதிரான சட்டத்திற்கெதிராக 200,000 முதல் 300,000 வரையான தாய்வான் மக்கள் தாய்பெய் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2006 – மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.

2006 – முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.

2007 – கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

2010 – தென் கொரியாவின் கடற்படைப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. 46 மாலுமிகள் உயிரிழந்தனர்.

2015 – சவூதி அரேபியா யெமன் மீதான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. இந்நடவடிக்கையில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

இன்றைய தின பிறப்புகள்

1874 – இராபர்ட் புரொஸ்ட், அமெரிக்கக் கவிஞர் (இ. 1963)1907 – மகாதேவி வர்மா, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (இ. 1987)

1910 – கே. டபிள்யூ. தேவநாயகம், இலங்கை அரசியல்வாதி (இ. 2002)

1913 – பால் ஏர்டோசு, அங்கேரிய-போலந்து கணிதவியலாளர் (இ. 1996)

1926 – தா. சிவசிதம்பரம், இலங்கை அரசியல்வாதி (இ. 1992)

1933 – டின்டோ பிராஸ், இத்தாலிய இயக்குநர்

1940 – நான்சி பெலோசி, அமெரிக்க அரசியல்வாதி

1941 – விளாதிமிர் அலெக்சயெவிச் பெலின்சுகி, உருசியக் கோட்பாட்டு இயற்பியலாளர்

1941 – ரிச்சர்ட் டாக்கின்சு, கென்ய-ஆங்கிலேய உயிரியலாளர்

1953 – ஜான்சன், மலையாள இசையமைப்பாளர் (இ. 2011)

1959 – கா. சண்முகம், சிங்கப்பூர் அரசியல்வாதி

1965 – பிரகாஷ் ராஜ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர்

1973 – லாரி பேஜ், கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கர்

1979 – ஜெய் சான், ஆங்கிலேயப் பாடகர், தயாரிப்பாளர்

1985 – கீரா நைட்லி, ஆங்கிலேய நடிகை

இன்றைய தின இறப்புகள்

1326 – அலெசாந்திரா கிலியானி, இத்தாலிய உடலியலாளார், மனித உடற்கூற்றியலாளர் (பி. 1307)1797 – ஜேம்ஸ் கூட்டன், இசுக்கொட்டிய நிலவியலாளர், மருத்துவர் (பி. 1726)

1827 – லுடுவிக் ஃவான் பேத்தோவன், செருமானிய செவ்விசையமைப்பாளர் (பி. 1770)

1892 – வால்ட் விட்மன், அமெரிக்கக் கவிஞர், ஊடகவியலாளர் (பி. 1819)

1902 – செசில் ரோட்சு, ஆங்கிலேய-தென்னாப்பிரிக்க அரசியல்வாதி, கேப் குடியேற்றத்தின் 6வது பிரதமர் (பி. 1853)

1923 – சாரா பேர்ண்ஹார்ட், பிரான்சிய நடிகை (பி. 1844)

1960 – எமில் குருப்பே, அமெரிக்கக் கதிர் மருத்துவர் (பி. 1875)

1977 – டி. வி. தாமஸ், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1910)

1991 – ஆர். சுதர்சனம், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1914)

2006 – குஞ்சுண்ணி, மலையாளக் கவிஞர் (பி. 1927)

2013 – சுகுமாரி, தென்னிந்திய திரைப்பட நடிகை (பி. 1940)

2015 – தோமசு திரான்சிட்ரோமர், நோபல் பரிசு பெற்ற சுவீடியக் கவிஞர் (பி. 1931)

2020 – நீர்வை பொன்னையன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1930)

2020 – வி. சேதுராமன், தமிழகத் திரைப்பட நடிகர், மருத்துவர் (பி. 1982)

இன்றைய தின சிறப்பு நாள்

விடுதலை நாள் (பாக்கித்தானிடமிருந்து 1971)மாவீரர் நாள் (மாலி)

Categories

Tech |