Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 2…!!

மே 2  கிரிகோரியன் ஆண்டின் 122 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 123 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 243 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின், முறைபிறழ்புணர்ச்சி, தகாப் பாலுறவு, மாந்திரீகம், தேசத்துரோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டார்.

1568 – லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினார்.

1611 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் ஆதரவில் விவிலியம் இங்கிலாந்து திருச்சபைக்காக மொழிபெயர்க்கப்பட்டு இலண்டனில் வெளியிடப்பட்டது.

1670 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் வட அமெரிக்காவில் மென்மயிர் வணிகத்துக்கான உரிமையை அட்சன் விரிகுடா கம்பனிக்குத் தந்தார்.

1808 – மத்ரித் மக்கள் பிரான்சிய ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1814 – முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமசு கோக் மதப்பரப்புனராக கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரும் வழியில் காலமானார்.[1]

1851 – கொழும்பு நகரைச் சுற்றிய பகுதிகளில் பலத்த காற்று வீசியதில் பெரும் சேதம் ஏற்பட்டது.[2]

1889 – எத்தியோப்பியாவின் அரசர் இரண்டாம் மெனெலிக் இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின் படி எரித்திரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது.

1906 – இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுகளின் இறுதி நிகழ்வுகள் ஏதென்சில் இடம்பெற்றது.

1933 – இட்லர் தொழிற்சங்கங்களை தடை செய்தார்.

1941 – இவ்வாண்டின் ஆரம்பந்தில் இடம்பெற்ற ஈராக்குக்கு எதிரான இராணுவப் புரட்சியை அடுத்து பதவியை இழந்த இளவரசர் அப்துல்லாவை மீண்டும் பதவியில் இருத்த ஐக்கிய இராச்சியம் ஆங்கிலேய-ஈராக்கியப் போரை ஆரம்பித்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: பெர்லினைத் தாம் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. செருமனியப் படை இத்தாலியில் சரணடைந்தன.

1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் வான்படையினர் செருமனியில் வோபெலின் வதைமுகாமை விடுவித்தனர். இங்கு 1,000 கைதிகள் இறந்து காணப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: டேச்சு கைதிகள் முகாமில் இருந்து ஆஸ்திரியா நோக்கிச் சென்று கொண்டிருந்த கைதிகளை பவேரியாவில் வழிமறித்த அமெரிக்க இராணுவம் நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்தது.

1946 – இலங்கை, கேகாலையில் நேவ்சுமயர் தோட்டத்தில் இந்தியத் தமிழர் குடியிருந்த 400 ஏக்கர் காணிகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டன.[3][4]

1952 – உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, தனது முதல் பறப்பை லண்டனில் ஜொகான்னஸ்பேர்க் நகருக்கு மேற்கொண்டது.

1964 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கக் கப்பல் ஒன்று குண்டுவெடிப்பில் மூழ்கியது.

1964 – 8,027 மீட்டர் உயர சிசாபங்மா மலையின் உச்சியை சீனாவின் இரு மலையேறிகள் எட்டினர்.

1972 – அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் நிலத்தடி சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 91 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1982 – போக்லாந்து போர்: பிரித்தானியாவின் கொன்கரர் என்ற அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல் அர்கெந்தீனாவின் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

1986 – செர்னோபில் அணு உலை விபத்து நடந்த ஆறு நாட்களின் பின்னர் அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

1989 – பனிப்போர்: ஆஸ்திரியாவுடனான எல்லையை அங்கேரி திறந்து விட்டதில் பெருந்தொகையான கிழக்கு செருமனி மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.

1994 – போலந்து, கதான்ஸ்க் நகரில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 32 பேர் உயிரிழந்தனர்.

1998 – ஐரோப்பிய நடுவண் வங்கி பிரசெல்சு நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

2002 – கேரளாவில் பாலக்காடு நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 8 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.

2004 – நைஜீரியாவில் 630 முஸ்லிம்கள் கிறித்தவர்களால் கொல்லப்பட்டனர்.

2006 – குஜராத் மாவட்டத்தில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலகத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

2008 – சூறாவளி நர்கீஸ் மியன்மாரில் தரை தட்டியதில் 138,000 பேர் உயிரிழந்தனர்.

2011 – செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குக் காரணமானவரும், சிஐஏ இனால் தேடப்பட்டு வந்தவருமான உசாமா பின் லாதின் பாக்கித்தானில் ஆப்டாபாத் நகரில் அமெரிக்க சிறப்புப் படையினரால் கொல்லப்பட்டார்.

2011 – ஈ.கோலை தொற்றுநோய் ஐரோப்பாவை, முக்கியமாக செருமனியைத் தாக்கியதில் 30 பேர் வரை உயிரிழந்தனர்.

2012 – நோர்வே ஓவியர் எட்வர்ட் மண்ச் வரைந்த அலறல் என்ற ஓவியம் நியூயார்க்கில் இடம்பெற்ற ஏலத்தில் $120 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.

2014 – ஆப்கானித்தான் பாதக்சான் நகரில் இடம்பெற்ற மண்சரிவுகளில் சிக்கி 2,500 பேர் காணாமல் போயினர்.

2018 – பாஸ்கு விடுதலைக்கான தீவிரவாத அமைப்பு எட்டா முழுமையாகக் கலைந்தது.

இன்றைய தின பிறப்புகள்

1729 – உருசியாவின் இரண்டாம் கத்தரீன் (இ. 1796)

1806 – கத்தரீன் லபோரே, பிரான்சிய அருட்சகோதரி, புனிதர் (இ. 1876)

1843 – எலைஜா மெக்காய், கனடிய-அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1929)

1844 – எலைஜா மெக்காய், கனடிய-அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர் (இ. 1929)

1859 – செரோம் கே. செரோம், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1927)

1860 – தியோடோர் எர்ட்செல், ஆத்திரிய-அங்கேரிய சீயோனிய மெய்யியலாளர் (இ. 1904)

1881 – அலெக்சாண்டர் கெரென்சுகி, உருசியாவின் 10வது பிரதமர் (இ. 1970)

1921 – சத்யஜித் ராய், இந்திய இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1992)

1927 – ந. சஞ்சீவி, தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 1988)

1935 – கு. சின்னப்ப பாரதி, தமிழக புதின எழுத்தாளர், அரசியல்வாதி

1943 – கே. என். கோவிந்தாச்சார்யா, இந்திய அரசியல்வாதி, சமூக செயற்பாட்டாளர்

1969 – பிறயன் லாறா, திரினிதாது துடுப்பாளர்

1972 – டுவெயின் ஜான்சன், அமெரிக்க-கனடிய மற்போர் வீரர், நடிகர்

1975 – டேவிட் பெக்காம், ஆங்கிலேயக் காற்பந்து வீரர்

1982 – இசைப்பிரியா, தமிழீழ ஊடகவியலாளர் (இ. 2009)

2015 – சார்லட், கேம்பிரிட்ச் இளவரசி, ஐக்கிய இராச்சியத்தின் 4வது முடிக்குரியவர்

இன்றைய தின இறப்புகள்

373 – அலெக்சாந்திரியா நகர அத்தனாசியார், எகிப்திய ஆயர், புனிதர் (பி. 298)

1519 – லியொனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர், சிற்பி, கட்டிடக்கலைஞர் (பி. 1452)

1814 – தோமசு கோக், முதலாவது மெதடிச ஆயர் (பி. 1747)

1915 – கிளாரா இம்மெர்வார், செருமானிய வேதியியலாளர் (பி. 1870)

1979 – கியூலியோ நட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியியலாளர் (பி. 1903)

1997 – பாவ்லோ பிரையர், பிரேசில் மெய்யியலாளர் (பி. 1921)

2002 – தேவிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1943)

2005 – வீ கிம் வீ, சிங்கப்பூரின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1915)

2009 – கே. பாலாஜி, தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்

2011 – உசாமா பின் லாதின், அல் காயிதா அமைப்பைத் தோற்றுவித்த சவூதி அரேபியர் (பி. 1957)

இன்றைய தின சிறப்பு நாள்

ஆசிரியர் நாள் (ஈரான்)

Categories

Tech |