இன்றைய தின நிகழ்வுகள்
70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு எருசலேம் மீது முழுமையான தாக்குதலை ஆரம்பித்தார்.
1497 – அமெரிகோ வெஸ்புச்சி புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தார்..
1503 – கொலம்பசு கேமன் தீவுகளை அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார்.
1534 – இழ்சாக் கார்ட்டியே நியூபவுண்டுலாந்து தீவை அடைந்தார்.
1612 – ஷாஜகான் மும்தாஜ் மகாலைத் திருமணம் புரிந்தார்.
1655 – இங்கிலாந்து எசுப்பானியாவிடம் இருந்து ஜமேக்காவைக் கைப்பற்றியது.
1688 – அயூத்திய இராச்சியத்தின் மன்னர் நாராய் தனது மகள் சுதாவதியை தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்தார்.
1768 – மூன்றாம் ஜோர்ஜ் மன்னரைப் பெரிதும் விமர்சித்து எழுதிய ஜோன் வில்க்ஸ் என்பவர் சிறைப் பிடிக்கப்பட்டார். இதை அடுத்து லண்டனில் பெரும் கலவரம் மூண்டது.
1773 – வட அமெரிக்க தேயிலை வணிகத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு ஏகபோக உரிமை அளிக்கும் தேயிலை சட்டத்தை பெரிய பிரித்தானியாவின் நாடாளுமன்றம் அமுல்படுத்தியது.
1774 – பதினாறாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
1796 – உருசியப்ப் படைகள் தாகெஸ்தான் குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டன.
1796 – பிரான்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியில் ஆத்திரியப் படைகளுக்கெதிரான போரில் பெரும் வெற்றி பெற்றான். 2,000 ஆஸ்திரியர்கள் வரையில் கொல்லப்பட்டனர்.
1824 – லண்டன் தேசிய அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
1837 – நியூயார்க் நகர வங்கிகள் செயலிழந்தன, வேலைவாய்ப்பின்மை பெருமளவில் அதிகரித்தது.
1849 – நியூயார்க் நகரில் மன்ஹாட்டனில் ஆஸ்டோர் ஒப்பேரா மாளிகையில் இரு நடிகர்களுக்கிடையே ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இடம்பெற்ற கலவரத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 120 பேர் காயமடைந்தனர்.
1857 – சிப்பாய்க் கிளர்ச்சி: இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் என்ற இடத்தில் சிப்பாய்கள் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்கக் கூட்டுப் படைகளினால் ஜோர்ஜியாவில் கைது செய்யப்பட்டார்.
1871 – பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடையிலான போர் பிரான்சு சரணடைந்ததை அடுத்து முடிவுக்கு வந்தது.
1877 – உருமேனியா உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1908 – அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது.
1922 – கிங்மன் பாறையை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனி தவறுதலாக செருமானிய நகரான பிரைபர்கின் மீது குண்டுகளை வீசியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய நாடுகளுக்குள் செருமனி ஊடுருவியது.
1940 – நெவில் சேம்பர்லேன் பதவி துறந்ததை அடுத்து, வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஐசுலாந்தினுள் ஊடுருவியது.
1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனிய வான்படையின் தாக்குதலில் லண்டனில் மக்களவை சேதத்துக்குள்ளாகியது.
1946 – சவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
1946 – அமெரிக்கா முதல்தடவையாக வி-2 ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது.
1960 – அமெரிக்காவின் டிரைட்டன் புவியை கடலடியாக சுற்றி வந்த முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் என்ற சாதனையைப் பெற்றது.
1975 – சோனி நிறுவனம் பீட்டாமாக்சு என்ற காணொளி நாடாப் பதிப்பியை சப்பானில் வெளியிட்டது.
1979 – மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் சுயாட்சி பெற்றன.
1981 – பிரான்சுவா மித்தரான் பிரான்சின் முதலாவது சோசலிச அரசுத்தலைவராகத் தேர்த்நெடுக்கப்பட்டார்.
1993 – தாய்லாந்தில் விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் பெரும்பான்மையாக இளம் பெண்கள் அடங்கிய 188 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1994 – நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1996 – எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்ற கடும் புயலில் சிக்கி 8 மலையேறிகள் உயிரிழந்தனர்.
1997 – ஈரானில் ஆர்டேக்குல் அருகே நிகழ்ந்த 7.3 Mw அளவு நிலநடுக்கத்தில் 1,567 பேர் உயிரிழந்தனர், 2,300 பேர் காயமடைந்தனர்.
2005 – சியார்சியாவின் திபிலீசி நகரில் அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் வாக்கர் புஷ் மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மீது கைக்குண்டு ஒன்று வீசப்பட்டது. ஆனாலும் அது வெடிக்கவில்லை.
2013 – மேற்கு அரைக்கோளத்தின் முக உயர்ந்த கட்டடம் என்ற பெயரை 1 உலக வர்த்தக மையம் பெற்றது.
இன்றைய தின பிறப்புகள்
1788 – அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1827)
1838 – ஜான் வில்க்ஸ் பூத், அமெரிக்க நடிகர், ஆபிரகாம் லிங்கனைக் கொலை செய்தவர் (இ. 1865)
1855 – யுக்தேசுவர் கிரி, இந்திய குரு (இ. 1936)
1899 – பிரெட் அஸ்ரயர், அமெரிக்க நடிகை, பாடகர் (இ. 1987)
1900 – சிசிலியா பேய்னே கபோசுச்கின், ஆங்கிலேய-அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர் (இ. 1979)
1918 – டி. பி. தர், காசுமீர அரசியல்வாதி (இ. 1975)
1927 – நயந்தரா சாகல், இந்திய எழுத்தாளர்
1930 – ஜோர்ஜ் ஸ்மித், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
1932 – கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்துத் தமிழறிஞர், எழுத்தாளர், பேராசிரியர் (இ. 2011)
1940 – வேயின் டையர், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2015)
1946 – பிருட்டே கால்டிகாசு, செருமானிய ஆய்வாளர்
1949 – இராமசாமி பழனிச்சாமி, மலேசிய அரசியல்வாதி
1951 – நெல்லை சு. முத்து, தமிழக அறிவியலாளர்
1954 – ஏ. கே. லோகிததாஸ், மலையாளத் திரைப்பட இயக்குநர் (இ. 2009)
1963 – ஆ. ராசா தென்னிந்திய அரசியல்வாதி
1981 – நமிதா கபூர், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இன்றைய தின இறப்புகள்
1829 – தோமசு யங், ஆங்கிலேய மருத்துவர், மொழியியலாளர் (பி. 1773)
1849 – ஒக்குசாய், சப்பானிய ஓவியர் (பி. 1760)
1952 – முகம்மது மாக்கான் மாக்கார், இலங்கை அரசியல்வாதி, தொழிலதிபர் (பி. 1877)
2003 – கோபிகிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1945)
2018 – டேவிட் குடால், ஆத்திரேலிய தாவரவியலாளர் (பி. 1914)
2019 – தோப்பில் முகமது மீரான், தமிழக எழுத்தாளர் (பி. 1944)
இன்றைய தின சிறப்பு நாள்
விடுதலை நாள் (உருமேனியா, உதுமானியப் பேரரசிடம் இருந்து, 1877)
அன்னையர் நாள் (எல் சால்வடோர், குவாத்தமாலா, மெக்சிகோ )