நெட்டாண்டுகளில் 313 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 53 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
1520 – டென்மார்க் படைகள் சுவீடனை வெற்றிகரமாக முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1576 – எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்தின் மாநில ஆட்சியாளர்கள் எசுப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்தனர்.
1605 – இங்கிலாந்தில் வெடிமருந்து சதித்திட்டத்தின் தலைவர் இராபர்ட்டு கேட்சுபி கொல்லப்பட்டார்.
1620 – பிராகா நகரில் இடம்பெற்ற சமரில் கத்தோலிக்க திருச்சபையின் படைகள் வெற்றி பெற்றன.
1644 – சீனாவில் மிங் மன்னராட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சிங் ஆட்சி தொடங்கியது.
1811 – இலங்கையில் இயற்றப்பட்ட புதிய நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும்பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், யாழ்ப்பாணத்தில் கீழ் நீதிமன்றமும் அமைக்கப்பட்டன. குற்றவியல் வழக்குகளுக்கு சான்றாயர் விசாரணை முறையும் அமுலுக்கு வந்தது.[1]
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: பிரித்தானியாவின் டிரெண்ட் என்ற அஞ்சல் கப்பலை வழிமறித்த அமெரிக்காவின் ‘சான் யெசிண்டோ கப்பல் இரண்டு கூட்டமைப்பு தூதர்களைக் கைது செய்தது.
1889 – மொன்ட்டானா அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது.
1892 – கறுப்பின, மற்றும் வெள்ளையின அமெரிக்கத் தொழிற்சங்கங்கள் முதல் தடவையாக ஒன்றிணைந்து நியூ ஓர்லென்சு மாநிலத்தில் வெற்றிகரமான 4-நாள் வேலை நிறுத்தத்தை நடத்தினர்.
1895 – எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்லெம் ரோண்ட்கன் எக்சு-கதிர்களைக் கண்டுபிடித்தார்.
1901 – ஏதென்சு நகரில் கத்தோலிக்க நற்செய்திகளின் கிரேக்க மொழிபெயர்ப்பு சர்ச்சையை அடுத்து கலவரம் ஏற்பட்டதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.
1917 – உருசியாவில் இடம்பெற்ற அக்டோபர் புரட்சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோரை உள்ளடக்கிய மக்கள் பேரவை அமைக்கப்பட்டது.
1923 – மியூனிக் நகரில் இட்லர் தலைமையில் நாட்சிகள் செருமனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
1936 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: பிராங்கோயிசப் படைகள் மத்ரித் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வி கண்டது, ஆனாலும் 3-ஆண்டு மத்ரித் முற்றுகை ஆரம்பமானது.
1939 – மியூனிக் நகரில் இட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
1940 – கிரேக்க-இத்தாலியப் போர்: இத்தாலி கிரேக்கத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: அல்ஜியர்சில் பிரெஞ்சு எதிர்ப்புப் புரட்சி இடம்பெற்றது.
1950 – கொரியப் போர்: அமெரிக்க வான்படை வட கொரிய மிக்-15 விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியது.
1957 – அமெரிக்காவின் பான்-ஆம் விமானம் ஒன்று சான் பிரான்சிஸ்கோவுக்கும் ஒனலூலுவிற்கும் இடையில் 44 பேருடன் காணாமல் போனது. ஒரு கிழமையின் பின்னர் இதன் பாகங்களும் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
1957 – ஐக்கிய இராச்சியம் தனது முதலாவது ஐதரசன் குண்டை பசிபிக் பிராந்தியத்தில் கிரிபட்டி தீவுகளில் வெற்றிகரமாகச் சோதித்தது.
1965 – சாகோஸ் தீவுக்கூட்டம், அல்டாப்ரா, பார்க்கார், டெ ரோச்சசு ஆகிய தீவுகளை உள்ளடக்கிய பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.
1965 – பிரித்தானியாவில் மரணதண்டனை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
1977 – வெர்ஜினாவில் கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.
1987 – வடக்கு அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவ நினைவு நிகழ்வொன்றில் ஐரியக் குடியரசு இராணுவத்தினரின் குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – சதாம் உசேன் உடனடியாக ஆயுதக்களைவில் ஈடுபட வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை எச்சரிக்கை விடுத்தது.
2006 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலிய பாதுகாப்புப் படைகள் 19 பாலத்தீனர்களை அவர்களது வீடுகளில் வைத்து சுட்டுக் கொன்றனர்.[2]
2006 – வாகரை குண்டுத்தாக்குதல்: மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2006 – பாக்கித்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
2011 – 2005 யூ55 என்ற சிறுகோள் பூமியை 324,600 கிமீ தூரத்தில் அணுகியது.
2013 – சூறாவளி ஹையான், பிலிப்பீன்சில் விசயன் தீவுகள் பகுதியைத் தாக்கியதில், 6,340 பேர் உயிரிழந்தனர்.
2016 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 500, 1000 ரூபாய் நாணயத் தாள்களை செல்லுபடியற்றதாக அறிவித்தார்.
இன்றைய தின பிறப்புகள்
1680 – வீரமா முனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (இ. 1742)
1831 – லிட்டன் பிரபு, இந்தியாவின் 30வது பிரித்தானிய ஆளுநர் (இ. 1880)
1875 – சியூ சின், சீனப் புரட்சியாளர், பெண்ணிய எழுத்தாளர் (இ. 1907)
1893 – துவாரம் வேங்கடசுவாமி நாயுடு, ஆந்திர வயலின் இசைக் கலைஞர் (இ: 1964)
1902 – ஜி. ஜி. பொன்னம்பலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1977)
1903 – அல்பிரட் தம்பிஐயா, இலங்கைத் தொழிலதிபர், அரசியல்வாதி
1910 – நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை, தமிழக தவில் கலைஞர் (இ. 1964)
1912 – டி. எஸ். சந்தானம், தமிழகத் தொழிலதிபர் (இ. 2005)
1908 – ராஜா ராவ், இந்திய எழுத்தாளர் (இ. 2006)
1920 – சிதாராதேவி, இந்திய நடிகை, நடன இயக்குநர் (இ. 2014)
1923 – ஜாக் கில்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2005)
1926 – டார்லீன் சி. ஆப்மேன், அமெரிக்க அணுக்கரு வேதியியலாளர்
1927 – லால் கிருஷ்ண அத்வானி, இந்திய அரசியல்வாதி
1937 – ராண்டார் கை, இந்தியத் தமிழ் திரைப்பட, சட்ட எழுத்தாளர்
1943 – ரிச்சர்ட் பென்சன், அமெரிக்க நிழற்படக்காரர், அச்சுத் தொழிலாளி, கல்வியாளர், நூலாசிரியர் (இ. 2017)
1954 – கசுவோ இசுகுரோ, சப்பானிய-பிரித்தானிய புதின எழுத்தாளர்
1957 – சுரேஷ் பிரேமச்சந்திரன், இலங்கைத் தமிழ்ப் போராளி, அரசியல்வாதி
1966 – சீமான், தமிழக அரசியல்வாதி, திரைப்பட இயக்குனர், நடிகர்
1969 – உபேந்திரா லிமாயி, இந்தியத் திரைப்பட நடிகர்
1976 – பிறெட் லீ, ஆத்திரேலியத் துடுப்பாளர்
1981 – நியல் ஓ’பிறையன், அயர்லாந்து அணியின் குச்சுக் காப்பாளர்
1986 – ஏரன் சுவோற்சு, அமெரிக்க கணினியியலாளர் (இ. 2013)
இன்றைய தின இறப்புகள்
955 – இரண்டாம் அகாப்பெட்டஸ் (திருத்தந்தை)
1240 – இப்னு அரபி, அராபிய சூபி இறைஞானி, மெய்யியலாளர் (பி. 1165)
1605 – இராபர்ட்டு கேட்சுபி, ஆங்கிலேயக் குற்றவாளி, வெடிமருந்து சதித்திட்டத் தலைவர் (பி. 1573)
1674 – ஜான் மில்டன், ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (பி. 1608)
1958 – சி. கணேசையர், இலங்கைத் தமிழறிஞர் (பி. 1878)
1969 – வெசுட்டோ மெல்வின் சுலிப்பர், அமெரிக்க வானியலாளர் (பி. 1875)
1970 – நெப்போலியன் ஹில், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1883)
1987 – சக்தி கிருஷ்ணசாமி, தமிழக எழுத்தாளர், பாடலாசிரியர் திரைக்கதை ஆசிரியர் (பி. 1913)
2000 – சோ. சிவபாதசுந்தரம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர், ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1912)
2006 – கா. காளிமுத்து, தமிழக அரசியல்வாதி (பி. 1942)
2009 – வித்தாலி கீன்ஸ்புர்க், நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (பி. 1916)
2013 – சிட்டிபாபு, இந்திய நடிகர் (பி. 1964)
2014 – வி. சிவசாமி, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1933)
2014 – ஐ. எஸ். முருகேசன், தமிழக மோர்சிங் இசைக் கலைஞர் (பி. 1930)
2015 – மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த துறவி, அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1942)
இன்றைய தின சிறப்பு நாள்
பன்னாட்டுக் கதிரியல் நாள்