Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 26…!!

மே 26  கிரிகோரியன் ஆண்டின் 146 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 147 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 219 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

17 – செருசுக்கி, சாட்டி, மற்றும் எல்பா ஆற்றின் மேற்கே உள்ள செருமானியக் குடிகள் வாழும் பகுதிகளை வெற்றி கொண்ட உரோமைப் பேரரசின் தளபதி செருமானிக்கசு பெரும் வரவேற்புடன் ரோம் திரும்பினான்.

451 – ஆர்மீனியக் கிளர்ச்சியாளர்களுக்கும் சாசானியப் பேரரசுக்கும் இடையில் சமர் இடம்பெற்றது. சாசானிதுகள் ஆர்மீனியர்களைத் தோற்கடித்தனராயினும், அவர்களுக்கு கிறித்தவத்தைப் பின்பற்ற முழு உரிமையும் அளிக்கப்பட்டது.

946 – இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்மண்டு திருடன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார்.

961 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ தனது 6 வயது மகன் இரண்டாம் ஒட்டோவை தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்து, கிழக்கு பிராங்கிய இராச்சியத்தின் துணை ஆட்சியாளராக அறிவித்தார். இரண்டாம் ஒட்டோ ஆகனில் முடிசூடினான்.

1135 – அனைத்து எசுப்பானியாவின் பேரரசராக ஏழாம் அல்போன்சோ லியோன் பெருங்கோவிலில் முடிசூடினார்.

1293 – சப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 23,000 பேர் உயிரிழந்தனர்.[1]

1538 – பிரான்சின் சீர்திருத்தக் கிறித்தவ இயக்கத்தைச் சேர்ந்த ஜான் கால்வின் மற்றும் அவரது சீடர்கள் ஜெனீவா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் பிரான்சின் ஸ்திராஸ்பூர்க் நகரில் வாழ்ந்தார்.

1637 – ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட்டில் பீக்குவாட் என்ற அமெரிக்கப் பழங்குடிகளின் ஊர் ஒன்றை ஆங்கிலேயப் படையினர் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட பழங்குடியினரைக் கொன்றனர்.

1770 – உதுமானியப் பேரரசுக்கு எதிரான ஒர்லோவ் கிளர்ச்சி கிரேக்கர்களுக்குப் பெரும் தோல்வியில் முடிவடைந்தது.

1805 – நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் அரசனாக மிலான் பேராலயத்தில் முடிசூடினான்.

1822 – நோர்வேயில் குரூ தேவாலயத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 116 பேர் உயிரிழந்தனர்.

1830 – அமெரிக்கப் பழங்குடி மக்களை வெளியேற்ற அனுமதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் இதனை சட்டமாக்கினார்.

1864 – மொன்ட்டானா அமெரிக்கப் பிராந்தியமாக இணைந்தது.

1879 – ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க முடிவான கண்டமாக் உடன்பாட்டில் உருசியப் பேரரசும் ஐக்கிய இராச்சியமும் கையெழுத்திட்டன.

1896 – இரண்டாம் நிக்கலாசு உருசியாவின் கடைசிப் பேரரசனாக முடி சூடினார்.

1896 – டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீட்டின் முதல் பதிப்பு வெளியானது.

1912 – இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.[2]

1917 – அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் நிகழ்ந்த சூறாவளியின் தாக்கத்தினால் 101 பேர் உயிரிழந்து, 689 பேர் காயமடைந்தனர்.

1918 – ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: டைனமோ நடவடிக்கை: வடக்கு பிரான்சில், கூட்டு நாடுகளின் படையினர் பிரான்சின் டன்கிர்க் நகரில் இருந்து பெருந்தொகையானோரை வெளியேற்றினர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகளின் சரணடைதலுடன் கலே முற்றுகை முடிவுக்கு வந்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: கசாலா சண்டை இடம்பெற்றது.

1958 – இலங்கை இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.

1966 – பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1968 – ஐசுலாந்தில் சாலைப் போக்குவரத்து விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இடப் பக்க ஓட்டத்தில் இருந்து வலப் பக்கத்திற்கு மாறியது.[3]

1969 – அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது.

1970 – சோவியத் துப்போலெவ் டி.யு-144 மேக் 2 ஒலிவேகத்தைத் தாண்டிய முதலாவது போக்குவரத்து வானூர்தி என்ற பெயரைப் பெற்றது.

1971 – வங்காளதேச விடுதலைப் போர்: பாக்கித்தான் இராணுவத்தினர் வங்காளதேசம், சில்கெட் பகுதியில் 71 இந்துக்களைப் படுகொலை செய்தனர்.

1972 – அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன், சோவியத் தலைவர் லியோனிது பிரெசுநேவ் ஆகியோர் கண்டந்தாவு ஏவுகணைத் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

1983 – சப்பான், வடக்கு ஒன்சூவைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஆழிப்பேரலையை உண்டு பண்ணியதால் 104 பேர் உயிரிழந்தனர்.

1987 – யாழ்ப்பாணம் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படையினரின் ஒப்பரேசன் லிபரேசன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.

1991 – தாய்லாந்தில் லவுடா வானூர்தி நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த அனைத்து 223 பேரும் உயிரிழந்தனர்.[4]

1998 – திருடப்பட்ட தலைமுறைகள்: ஆத்திரேலியப் பழங்குடிகளை முறைகேடாக நடத்தியமைக்காக மன்னிப்புக் கேட்கும் நாள் முதல் தடவையாக தேசிய மன்னிப்புக் கேட்கும் நாள் என்ற பெயரில் ஆத்திரேலியாவில் நினைவுகூரப்பட்டது.

2002 – மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர்ப் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.

2006 – ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5,700 பேர் உயிரிழந்து, 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1844 – மகா வைத்தியநாதையர், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ. 1893)

1874 – புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா, கொலொம்பிய கத்தோலிக்க அருட்சகோதரி, புனிதர் (இ. 1949)

1907 – ஜான் வெயின், அமெரிக்க நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1979)

1928 – சுகுமார் அழீக்கோடு, மலையாள எழுத்தாளர், மெய்யியலாளர் (இ. 2012)

1937 – மனோரமா, தமிழகத் திரைப்பட, நாடக நடிகை, பாடகி (இ. 2015)

1944 – அந்தனி ஜீவா, இலங்கை மலையக எழுத்தாளர்

1945 – விலாஸ்ராவ் தேஷ்முக், மகாராட்டிராவின் 17வது முதலமைச்சர் (இ. 2012)

1949 – வார்டு கன்னிங்காம், விக்கியை வடிவமைத்த அமெரிக்கக் கணினியியலாளர்

1951 – சாலி றைட், அமெரிக்க இயற்பியலாளர், விண்வெளி வீராங்கனை (இ. 2012)

1979 – அமந்தா பாவுவேர், அமெரிக்க வானியலாளர்

இன்றைய தின இறப்புகள்

735 – பீட், ஆங்கிலேய வரலாற்றாளர், மதகுரு, இறையியலாளர் (பி. 672)

1703 – சாமுவேல் பெப்பீசு, ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1633)

1908 – மிர்சா குலாம் அகமது, இந்திய இசுலாமியத் தலைவர், அகமதியா இயக்கத்தை ஆரம்பித்தவர் (பி. 1835)

1934 – செண்பகராமன் பிள்ளை, தமிழக-இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1891)

1967 – மா. இராசமாணிக்கனார், தமிழகத் தமிழறிஞர், வரலாற்றாசிரியர் (பி. 1907)

1978 – ஜெகசிற்பியன், தமிழக எழுத்தாளர் (பி. 1925)

1979 – எஸ். எம். சுப்பையா நாயுடு, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1914)

1989 – கா. அப்பாத்துரை, தமிழகத் தமிழறிஞர், மொழியியலாளர் (பி. 1907)

1999 – நா. கோவிந்தசாமி, சிங்கப்பூர் கணினி அறிஞர், எழுத்தாளர்

2004 – நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக், உருசிய வானியலாளர் (பி. 1931)

2014 – ஜெயலட்சுமி, இந்திய கருநாடக இசைப் பாடகி, திரைப்படப் பின்னணிப் பாடகி (பி. 1932)

2020 – ஆறுமுகன் தொண்டமான், இலங்கை அரசியல்வாதி, (பி. 1964)

இன்றைய தின சிறப்பு நாள்

விடுதலை நாள் (சியார்சியா)

விடுதலை நாள் (கயானா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966)

அன்னையர் நாள் (போலந்து)

தேசிய மன்னிப்பு நாள் (ஆத்திரேலியா)

Categories

Tech |