இன்றைய தின நிகழ்வுகள்
1174 – 1173-74 கிளர்ச்சியின் முக்கிய கிளர்ச்சியாளர் இசுக்காட்லாந்தின் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் இரண்டாம் என்றியின் படையினரால் கைது செய்யப்பட்டார்.
1249 – இசுக்கொட்லாந்தின் மன்னராக மூன்றாம் அலெக்சாந்தர் முடிசூடினார்.
1643 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் என்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் வோலர் தலைமையிலான நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர்.
1830 – வங்காள மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இசுக்கொட்டிசு சர்ச் கல்லூரி கொல்கத்தாவில் அலெக்சாண்டர் டஃப், இராசாராம் மோகன் ராய் ஆகியோரால் நிறுவப்பட்டது.
1844 – இலங்கையில் காவற்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.[1]
1863 – நியூயார்க் நகரத்தில் அரசுக்கு எதிரான மூன்று நாள் கலவரங்கள் ஆரம்பமாயின. 120 பேர் கொல்லப்பட்டனர்.
1869 – இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.[1]
1878 – பெர்லின் உடன்பாட்டை அடுத்து ஐரோப்பிய நாடுகள் பால்கன் குடாவின் வரைபடத்தை மாற்றியமைத்தன. செர்பியா, மொண்டெனேகுரோ, உருமேனியா ஆகியன முழுமையாக உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலை அடைந்தன.
1919 – பிரித்தானியாவின் வான்கப்பல் ஆர்34 அத்திலாந்திக்குப் பெருங்கடல் மேலாக 182 மணிநேரம் பறந்து தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்தின் நோர்போக்கில் தரையிறங்கியது.
1923 – லாஸ் ஏஞ்சலீசில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் “ஹாலிவுட் குறியீடு” அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இது “ஹாலிவுட்லாந்து” என எழுதப்பட்டாலும் பின்னர் 1949 இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.
1930 – முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் உருகுவையில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.
1931 – காஷ்மீர், ஸ்ரீநகரில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1971 – மொரோக்கோவில் தோல்வியடைந்த இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட பத்து இராணுவத்தினர் தூக்கிலிடப்பட்டனர்.
1977 – சோமாலியா எத்தியோப்பியா மீது போரை ஆரம்பித்தது.
1977 – மின்சார இழப்பினால் நியூயார்க் நகரம் 25 மணி நேரம் இருளில் மூழ்கியதில் பல கொள்ளைச் சம்பவங்களும் பல்வேறு சமூக விரோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.
1989 – இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம், வெ. யோகேசுவரன் ஆகியோர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1997 – சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.
2001 – சீனாவின் பெய்ஜிங் நகரம் 2008க்கான ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தகுதி பெற்றது.
2005 – பாக்கித்தானில் கோட்கி என்ற இடத்தில் மூன்று தொடருந்துகள் மோதியதில் 150 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
2011 – மும்பை நகரில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 26 பேர் கொல்லப்பட்டு, 130 பேர் காயமடைந்தனர்.
2011 – தெற்கு சூடான் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.
2016 – ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கேமரன் தனது பதவியைத் துறந்தார். தெரசா மே புதிய பிரதமரானார்.
இன்றைய தின பிறப்புகள்
1590 – பத்தாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (இ. 1676)
1841 – ஓட்டோ வாக்னர், ஆத்திரிய கட்டிடக் கலைஞர் (இ. 1918)
1854 – அரிசுடார்க் பெலோபோல்சுகி, உருசிய வானியலாளர் (இ. 1934)
1922 – சுந்தர சண்முகனார், புதுவை தமிழறிஞர், கவிஞர், எழுத்தாளர் (இ. 1997)
1934 – வோலே சொயிங்கா, நோபல் பரிசு பெற்ற நைஜீரிய எழுத்தாளர்
1938 – தோமசு சவுந்தரநாயகம், முன்னாள் ரோமன் கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயர்
1942 – ஹாரிசன் போர்ட், அமெரிக்க நடிகர்
1944 – வ. ஐ. ச. ஜெயபாலன், இலங்கை எழுத்தாளர், கவிஞர், நடிகர்
1944 – ஏர்னோ ரூபிக், அங்கேரிய கட்டிடக் கலைஞர், ரூபிக் கனசதுரத்தைக் கண்டுபிடித்தவர்.
1951 – லெ. முருகபூபதி, இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் எழுத்தாளர்
1953 – வைரமுத்து, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர்.
1983 – லியு சியாங், சீன ஓட்டவீரர்
இன்றைய தின இறப்புகள்
939 – ஏழாம் லியோ (திருத்தந்தை)
1921 – காபிரியேல் லிப்மன், நோபல் பரிசு லக்சம்பர்க் இயற்பியலாளர் (பி. 1845)
1924 – ஆல்பிரடு மார்ஷல், பிரித்தானிய பொருளியலாளர் (பி. 1824)
1934 – மேரி எம்மா பிருடு, அமெரிக்க வானியலாளர் (பி. 1849)
1954 – பிரிடா காலோ, மெக்சிக்கோ ஓவியர் (பி. 1907)
1989 – அ. அமிர்தலிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் (பி. 1927)
1989 – வெ. யோகேசுவரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1927)
1993 – அ. கி. இராமானுசன், இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர் (பி. 1929)
2013 – ஒத்தோவியோ குவாத்ரோச்சி, இத்தாலியத் தொழிலதிபர் (பி. 1938)
2014 – நாடின் கார்டிமர், நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (பி. 1923)
2016 – எஸ். ராம்தாஸ், இலங்கை வானொலி, மேடை, திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்
2017 – வீர சந்தானம், தமிழக ஓவியர், தமிழ் உணர்வாளர், நடிகர்
2017 – லியூ சியாபோ, நோபல் பரிசு பெற்ற சீன மனித உரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1955)