Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 18…!!

ஆகத்து 18 கிரிகோரியன் ஆண்டின் 230 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 231 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 135 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

684 – மார்ச் ராகித் சமரில் உமையா கலீபகப் பிரிவினைவாதிகள் இப்னு அல்-சுபைர் ஆதரவாளர்களைத் தோற்கடித்து, உமையாதுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவைக் கைப்பற்றினர்.

1487 – காசுட்டீலிய, அராகன் படைகள் மாலகா நகரை முற்றிறுகையிட்டுக் கைப்பற்றின.

1572 – புரட்டத்தாந்து, கத்தோலிக்கத் திருச்சபைகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக நான்காம் என்றி மன்னருக்கும் மார்கரெட்டுக்கும் பாரிசில் திருமணம் நடைபெற்றது.

1587 – அமெரிக்காக்களில் முதலாவது ஆங்கிலேயக் குழந்தை பிறந்தது.

1590 – அமெரிக்காவின் ரோனோக் குடியேற்றத்தின் ஆளுநர் ஜோன் வைட் இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்த போது அக்குடியேற்றப் பகுதியில் மக்கள் எவரும் காணப்படவில்லை. பின்னர் அக்டோபர் 24 இல் இங்கிலாந்து திரும்பினார்.

1634 – பிரான்சின் லவ்டுன் நகரில் மாந்திரீகக் குற்றங்களுக்காக உரைன் கிராண்டியர் என்பவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.

1783 – பெரிய பிரித்தானியா எங்கும் பெரும் எரிவெள்ளி அவதானிக்கப்பட்டது.

1868 – இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது.[1]

1868 – பிரெஞ்சு வானியலாளர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஈலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார்.

1891 – மர்தினிக்கு தீவில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 700 பேர் உயிரிழந்தனர்.

1914 – உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு பேரரசர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரின் பெயரை பெத்ரோகிராது என மாற்றினார்.

1917 – கிரேக்கத்தில் தெசலோனிக்கி என்னும் நகரில் இடம்பெற்ற தீவிபத்தில் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 70,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1920 – பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது.

1928 – சென்னை மியூசிக் அகாதமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

1938 – அமெரிக்காவின் நியூயார்க்கையும் கனடாவின் ஒன்றாரியோவையும் இணைக்கும் சென் லாரன்சு ஆற்றின் மேலாக ஆயிரம் தீவுகள் பாலம் அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டினால் திறந்து வைக்கப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் சண்டையின் ஒரு பகுதியாக பெரும் வான் தாக்குதல்கள் இடம்பெற்றன.

1945 – சுகர்ணோ இந்தோனேசியாவின் முதலாவது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.

1950 – பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் யூலியன் லாகூட் வலதுசாரிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

1958 – விளாதிமிர் நபோக்கொவின் சர்ச்சைக்குரிய லொலிதா என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

1965 – வியட்நாம் போர்: அமெரிக்கக் கடற்படை வியட்கொங் படைகளின் தளம் ஒன்றை தாக்கி அழித்தது.

1971 – வியட்நாம் போர்: ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகியன தமது படைகளை வியட்நாமில் இருந்து திரும்ப அழைக்க முடிவு செய்தன.

1977 – ஸ்டீவ் பைக்கோ தென்னாப்பிரிக்கக் காவல்துறையினரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் கடுங்காயங்களால் இறந்ததை அடுத்து தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைகள் வெளிக்கொணரப்பட்டன.

1983 – அமெரிக்காவில் டெக்சஸ் கரையில் அலீசியா சூறாவளி தாக்கியதில், 21 பேர் உயிரிழந்தனர்.

2008 – பாக்கித்தானில் அரசுத்தலைவர் பெர்வேஸ் முஷாரஃப் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதை அடுத்து அவர் பதவியைத் துறந்தார்.

இன்றைய தின பிறப்புகள்

1700 – பாஜிராவ், மராட்டியப் பேரரசர் (இ. 1740)

1750 – அந்தோனியோ சாலியரி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1825)

1870 – இலாவர் கோர்னிலோவ், உருசிய இராணுவத் தளபதி, நாடுகாண் பயணி (இ. 1918)

1875 – பிரிதிவி வீர விக்ரம் ஷா, நேப்பாளப் பேரரசர் (இ. 1911)

1886 – ஆர். எஸ். சுபலட்சுமி, சமூக சீர்திருத்தவாதி (இ. 1969)

1900 – விஜயலட்சுமி பண்டிட், இந்திய அரசியல்வாதி (இ. 1990)

1904 – டி. எஸ். சௌந்தரம், இந்திய மருத்துவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1984)

1933 – ரோமன் போலான்ஸ்கி, பிரான்சிய-போலந்து இயக்குநர், நடிகர்

1934 – குல்சார், இந்திய இயக்குநர், கவிஞர்

1934 – தி. ந. இராமச்சந்திரன், தமிழகத் தமிழறிஞர் (இ. 2021)

1938 – பி. எம். எக்டே, இந்திய மருத்துவர், நூலாசிரியர்

1945 – எஸ். எல். வி. மூர்த்தி, ஒரு தமிழக எழுத்தாளர்

1954 – வி. கே. சசிகலா, தமிழக அரசியல்வாதி

1962 – பெலீப்பே கால்டெரோன், மெக்சிக்கோவின் 56வது அரசுத்தலைவர்

1967 – தலேர் மெகந்தி, இந்தியப் பாடகர், தயாரிப்பாளர்

1969 – எட்வர்டு நார்டன், அமெரிக்க நடிகர்

1975 – சிவனேசத்துரை சந்திரகாந்தன், இலங்கை, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர், அரசியல்வாதி

1987 – பாபி, வங்காளதேசத் திரைப்பட நடிகை

இன்றைய தின இறப்புகள்

440 – மூன்றாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை)

1227 – செங்கிஸ் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1162)

1850 – பல்சாக், பிரான்சிய எழுத்தாளர் (பி. 1799)

1945 – சுபாஷ் சந்திர போஸ், இந்திய அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1897)

1979 – வசந்தராவ் நாயக், இந்திய அரசியல்வாதி (பி. 1913)

1990 – பி. எப். ஸ்கின்னர், அமெரிக்க உளவியலாளர், மெய்யியலாளர் (பி. 1904)

1992 – கிறிஸ்டோபர் மக்கென்ட்லஸ், அமெரிக்க சாகசக்காரர் (பி. 1968)

2009 – கிம் டாய் ஜுங், தென் கொரியாவின் 15வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1925)

2011 – ஜான்சன், மலையாள இசையமைப்பாளர் (பி. 1953)

2012 – ரா. கி. ரங்கராஜன், இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1927)

2015 – சுவ்ரா முகர்ஜி, இந்திய எழுத்தாளர், ஓவியர் (பி. 1940)

2018 – கோபி அன்னான், ஐக்கிய நாடுகள் அவையின் 7-வது பொதுச் செயலர் (பி. 1938)

இன்றைய தின சிறப்பு நாள்

மர நாள் (பாக்கித்தான்)

Categories

Tech |