Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 19…!!

ஆகத்து 19 கிரிகோரியன் ஆண்டின் 231 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 232 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 134 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 295 – அன்பு, அழகு, கருவுறுதல் ஆகியவற்றுக்கான உரோமைக் கடவுள் வீனசுக்கு முதலாவது உரோமைக் கோவில் கட்டப்பட்டது.

14 – உரோமைப் பேரரசர் அகஸ்டசு 44 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார். அவரது வளர்ப்பு மகன் திபேரியசு பேரரசரானார்.

1153 – மூன்றாம் பால்ட்வின் எருசலேமின் ஆட்சியை அவரது தாயார் மெலிசென்டியிடம் இருந்து பெற்றார்.

1458 – இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1561 – 13 ஆண்டுகள் பிரான்சில் வசித்து வந்த ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி தனது 18-வது அகவையில் இசிக்கொட்லாந்து திரும்பினார்.

1612 – இங்கிலாந்தின் ‘சாம்லசுபரி’ என்ற இடத்தில் மூன்று பெண்கள் மந்திரவாதிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணக்குட்படுத்தப்பட்டனர். பிரித்தானிய வரலாற்றில் இது ஒரு பெரும் சூனியக்காரிகள் வேட்டை எனப் புகழ்பெற்றது.

1666 – இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: டெர்செல்லிங் என்ற இடச்சுத் தீவின் மீது ஆங்கிலேயக் கடற்படைத் தளபதி ராபர்ட் ஓல்ம்சு தாக்குதல் மேற்கொண்டு 150 வணிகக் கப்பல்களை அழித்தார்.

1745 – உதுமானிய-பாரசீகப் போர் (1743–46): நாதிர் ஷா தலைமையிலான பாரசீகப் படைகள் உதுமானியர்களை கார்சு என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடித்தனர்.

1759 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே கடற் போர் இடம்பெற்றது.

1772 – சுவீடனில் மூன்றாம் குஸ்தாவ் இராணுவப் புரட்சியை மேற்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றினார்.

1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: யோர்க்டவுன் முற்றுகையில் பிரித்தானியத் தளபதி காரன்வாலிஸ் சரணடைந்த 10 மாதங்களின் பின்னர், மிக முக்கியமான கடைசிச் சமர் புளூ லிக்சு என்ற இடத்தில் இடம்பெற்றது.

1839 – லூயி தாகர் கண்டுபிடித்த புகைப்பட செயல்முறையை “உலகத்துக்கு அன்பளிப்பாக வழங்குவதாக” பிரெஞ்சு அரசு அறிவித்தது.

1848 – கலிபோர்னியா தங்க வேட்டை: ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் தங்க வேட்டை பற்றிய செய்தியை நியூயார்க் எரால்டு பத்திரிகை வெளியிட்டது.

1854 – அமெரிக்க இராணுவத்தினர் லகோட்டா பழங்குடித் தலைவரைக் கொன்றதை அடுத்து லகோட்டா போராளிகள் அனைத்து 31 இராணுவத்தினரையும், ஒரு மொழிபெயர்ப்பாளரையும் கொன்றனர்.

1862 – அமெரிக்க இந்தியப் போர்கள்: மினசோட்டாவில் லகோட்டா பழங்குடிப் போராளிகள் நியூ ஊல்ம் குடியேற்றத்தைத் தாக்கி பல வெள்ளையர்களைக் கொன்றனர்.

1866 – இலங்கையில் முதல் தடவையாக தந்திச் செய்தி நியூயோர்க்கில் இருந்து காலி நகரை வந்தடைந்தது.[1]

1895 – கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.[2]

1919 – ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆப்கானித்தான் முழுமையான விடுதலை அடைந்தது.

1927 – உருசிய மரபுவழித் திருச்சபையின் தலைவர் செர்ச்சியசு சோவியத் ஒன்றியத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

1934 – செருமனியில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பியூரர் என்ற பெயருடன் இட்லரை அரசுத்தலைவராக 89.9% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: தியப் தாக்குதல்: கனடாவின் தலைமையில் நேச நாடுகளின் படையினர் பிரான்சின் தியப் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தித் தோல்வியடைந்தனர். பெரும்பாலான கனடியப் படைகள் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: பாரிசின் விடுவிப்பு: செருமனியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நட்பு நாடுகளின் உதவியுடன் பாரிசு தாக்குதலைத் தொடுத்தது.

1945 – ஆகத்துப் புரட்சி: ஹோ சி மின் தலைமையில் வியட் மின் படையினர் வியட்நாமின் அனோய் நகரைக் கைப்பற்றினர்.

1953 – பனிப்போர்: அஜாக்ஸ் நடவடிக்கை: ஈரானில் அமெரிக்காவின் உளவுத்துறையின் உதவியுடன் முகம்மது மொசாதெகின் அரசு கவிழ்க்கப்பட்டு, முகம்மத் ரிசா ஷா பஹ்லவி பதவியில் அமர்த்தப்பட்டார்.

1955 – ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே, பெரும் வெள்ளத்துடன் கூடிய சூறாவளி தாக்கியதில் 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1960 – பனிப்போர்: மாஸ்கோவில் கைப்பற்றப்பட்ட அமெரிக்க யூ-2 போர்விமானத்தின் விமானி பிரான்சிசு பவர்சு என்பவருக்கு சோவியத் ஒன்றியம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.

1960 – இசுப்புட்னிக் திட்டம்: சோவியத்தின் இசுப்புட்னிக் 5 விண்கலம் பெல்கா, ஸ்திரெல்கா என்ற இரு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் விண்ணுக்குக் கொண்டு சென்றது.

1964 – சின்கொம் 3 என்ற முதலாவது புவிநிலை தகவற் செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

1978 – ஈரானில் திரையரங்கு ஒன்று தீப்பிடித்ததில் 400 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தன்ர்.

1980 – சவூதி அரேபியா, ரியாத் நகரில் சவூதியா 163 என்ற விமானம் தரையில் மோதித் தீப்பிடித்ததில் 301 பேர் உயிரிழந்தனர்.

1981 – அமெரிக்கப் போர் விமானங்கள் சித்ரா வளைகுடாவில் இரண்டு லிபிய வான்படை விமானங்களைத் தாக்கி அழித்தனர்.

1987 – ஐக்கிய இராச்சியம், ஹங்கர்ஃபோர்ட் என்ற இடத்தில் மைக்கேல் ராயன் என்பவன் 16 பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.

1989 – பனிப்போர்: போலந்தின் பிரதமராக சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் டாடியூஸ் மசவியேக்கி அரசுத்தலைவர் யாருசெல்ஸ்கியினால் தெரிவுசெய்யப்பட்டார். 42 ஆண்டுகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் முதல் கம்யூனிஸ்ட் அல்லாத பிரதமர் இவரே ஆவார்.

1991 – ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் கிரிமியாவில் ஓய்வெடுக்கும் போது கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

1999 – பெல்கிறேட் நகரில், பல்லாயிரக்கணக்கான செர்பியர்கள் யுகோசுலாவிய அரசுத்தலைவர் சிலோபதான் மிலொசேவிச்சைப் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2002 – உருசிய மில் எம்.ஐ-26 உலங்குவானூர்தி மீது செச்சினியத் தீவிரவாதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 118 உருசியப் படையினர் கொல்லப்பட்டனர்.

2003 – இசுரேல், எருசலேம் நகரில் பேருந்து ஒன்றின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், பல சிறுவரக்ள் உட்பட 23 இசுரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

2003 – ஈராக்கின் ஐநா தூதரகம் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் உயர் அதிகாரி மற்றும் 21 பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.

2009 – ஈராக், பகுதாது நகரில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில், 101 பேர் கொல்லப்பட்டனர். 565 பேர் காயமடைந்தனர்.

2010 – ஈராக்கிய விடுதலை நடவடிக்கை முடிவுக்கு வந்தது. கடைசி அமெரிக்க தாக்குதல் படைகள் எல்லை தாண்டி குவைத் சென்றனர்.

2013 – இந்தியாவின் பீகார் மாநிலத்தில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்தன்ர்.

இன்றைய தின பிறப்புகள்

1646 – ஜான் பிளேம்சுடீடு, ஆங்கிலேய வானியலாளர் (இ. 1719)

1745 – யோகான் கோட்லீப் கான், சுவீடன் வேதியியலாளர் (இ. 1818)

1869 – ஐசாக் தம்பையா, இலங்கைத் தமிழ்க் கல்விமான், இறையியலாளர் (இ. 1941)

1871 – ஓர்வில் ரைட், எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர் (இ. 1948)

1878 – மானுவல் எல். குவிசோன், பிலிப்பீன்சின் 2வது அரசுத்தலைவர் (இ. 1944)

1887 – சத்தியமூர்த்தி, இந்திய அரசியல்வாதி (இ. 1943)

1891 – மில்டன் இலாசெல் குமாசன், அமெரிக்க வானியலாளர் (இ. 1972)

1895 – செ. சுந்தரலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1985)

1901 – லிம் லியான் கியோக், மலேசிய சமூக நீதி செயல்பாட்டாளர் (இ. 1985)

1906 – பைலோ பார்ன்சுவர்த், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1971)

1907 – சுவரண் சிங், இந்திய அரசியல்வாதி (இ. 1994)

1910 – அல்ஃபோன்சா, இந்தியாவின் முதலாவது கத்தோலிக்கப் பெண் புனிதர் (இ. 1946)

1918 – சங்கர் தயாள் சர்மா, இந்தியாவின் 9வது குடியரசுத் தலைவர் (இ. 1999)

1919 – மால்கம் போர்ப்ஸ், அமெரிக்கப் பதிப்பாளர், அரசியல்வாதி (இ. 1990)

1924 – வில்லார்டு பாயில், நோபல் பரிசு பெற்ற கனடிய இயற்பியலாளர் (இ. 2011)

1929 – ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியலாளர் (இ. 2008)

1931 – ஜி. கே. மூப்பனார் தமிழக அரசியல்வாதி (இ. 2001)

1937 – கா. கலியபெருமாள், மலேசிய எழுத்தாளர் (இ. 2011)

1946 – பில் கிளின்டன், அமெரிக்காவின் 42வது அரசுத்தலைவர்

1947 – ரத்னா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2022)

1950 – சுதா மூர்த்தி, இந்திய சமூக சேவையாளர், எழுத்தாளர்

1953 – ஆ. பு. வள்ளிநாயகம், வரலாற்று வரைவாளர், எழுத்தாளர் (இ. 2007)

1957 – இயன் கூல்ட், ஆங்கிலேயத் துடுப்பாளர்

1967 – சத்ய நாடெல்லா, இந்திய-அமெரிக்கத் தொழிலதிபர்

1977 – சுவலட்சுமி, வங்காளத் திரைப்பட நடிகை

இன்றைய தின இறப்புகள்

14 – அகஸ்ட்டஸ், உரோமைப் பேரரசர் (பி. கிமு 63)

1580 – ஆன்ட்ரே பல்லாடியோ, இத்தாலியக் கட்டிடக் கலைஞர் (பி. 1508)

1662 – பிலைசு பாஸ்கல், பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1623)

1822 – சான் பாப்திசுத்து யோசப் டெலாம்பர், பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1749)

1905 – வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, பிரான்சிய ஓவியர் (பி. 1825)

1927 – சுவாமி சாரதானந்தர், சுவாமி இராமகிருட்டிணரின் நேரடிச் சீடர் (பி. 1865)

1936 – பெடரிக்கோ கார்சியா லோர்க்கா, எசுப்பானியக் கவிஞர், இயக்குநர் (பி. 1898)

1962 – இலாய்சி பாஸ்கல், பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1623)

1968 – ஜார்ஜ் காமாவ், உக்ரைனிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1904)

1982 – வைணு பாப்பு, இந்திய வானியலாளர் (பி. 1927)

1994 – லைனசு பாலிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1901)

2008 – லெவி முவனவாசா, சாம்பியாவின் 3வது அரசுத்தலைவர் (பி. 1948)

2013 – பெரியார்தாசன், தமிழகப் பேச்சாளர், பேராசிரியர்

2014 – அடையார் கே. லட்சுமணன், பரதநாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர் (பி. 1933)

2014 – ஜேம்ஸ் ஃபோலி, அமெரிக்க புகைப்படக் கலைஞர் (பி. 1973)

2016 – தொனால்டு எண்டர்சன், அமெரிக்க மருத்துவர், நோய்ப்பரவல் இயல் வல்லுநர் (பி. 1928)

இன்றைய தின சிறப்பு நாள்

மீட்பரின் தோற்ற மாறுதல், (உருசிய மரபுவழித் திருச்சபை)

ஆகத்து புரட்சி நாள் (வியட்நாம்)

விடுதலை நாள் (ஆப்கானித்தான், பிரித்தானியாவிடம் இருந்து 1919)

உலகப் புகைப்பட நாள்

உலக மனிதநேய நாள்

Categories

Tech |