இன்றைய தின நிகழ்வுகள்
590 – முதலாம் கிரகோரி இரண்டாம் பெலாகியசுக்குப் பின்னர் திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
863 – அரபுகளுக்கு எதிரான லலக்காவோன் போரில் பைசாந்தியர்கள் முக்கிய வெற்றியைப் பெற்றனர்.
1189 – முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டரில் முடிசூடினார்.
1260 – பாலத்தீனத்தில் மங்கோலியர்களுடன் இடம்பெற்ற போரில் மாம்லுக்குகள் வெற்றி பெற்றனர். இதுவே மங்கோலியப் பேரரசு அடைந்த முதலாவது தோல்வியாகும்.
1650 – மூன்றாவது ஆங்கிலேய உள்நாட்டுப் போர்: டன்பார் சமரில், ஆங்கிலேய நாடாளுமன்றப் படைகள் ஆலிவர் கிராம்வெல் தலைமையில் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரின் படைகளைத் தோற்கடித்தனர்.
1651 – வூர்ஸ்டர் நகரில் இடம்பெற்ற மூன்றாவது ஆங்கிலேய உள்நாட்டுப் போரின் கடைசிச் சமரில் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு தோற்றார்.
1658 – ஆலிவர் கிராம்வெல் இறந்தார். ரிச்சார்டு கிராம்வெல் இங்கிலாந்தின் காப்பாளராக நியமிக்கப்பட்டார்.
1759 – இலங்கை இடச்சு அரசு புதிய ஏற்பாட்டைத் தமிழில் வெளியிட்டது.[1]
1783 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்காவுக்கும் பெரிய பிரித்தானியாவுக்கும் இடையில் 1783 பாரிசு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.
1798 – பெலீசின் கரையில் எசுப்பானியர்களுக்கும் பிரித்தானியருக்கும் இடையில் ஒருவாரப் போர் இடம்பெற்றது.
1801 – பிரித்தானிய இலங்கையில் நெல், மற்றும் தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.[2]
1812 – அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் 24 குடியேறிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1843 – ஏதென்சு நகரில் கிளர்ச்சி இடம்பெற்றதை அடுத்து கிரேக்க மன்னர் ஓட்டோ அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
1855 – நெப்ராஸ்காவில் அமெரிக்கப் படையினர் சியூ பழங்குடியினரைத் தாக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 100 பேரைக் கொன்றனர்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் நடுநிலை வகித்த கென்டக்கியைத் தாக்கின.
1875 – முதலாவது அதிகாரபூர்வமான போலோ விளையாட்டு அர்கெந்தீனாவில் விளையாடப்பட்டது.
1878 – தேம்சு நதியில் “பிரின்சஸ் அலீசு” பயணிகள் கப்பல் பைவெல் அரண்மனையுடன் மோதியதில் 640 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
1879 – காபூல் நகரில் பிரித்தானியத் தூதர் சர் லூயிசு கவக்னாரியும் அவரது 72 ஊழியர்களும் ஆப்கானித்தான் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1914 – அல்பேனிய இளவரசர் வில்லியம் அவரது ஆட்சியின் மீது ஏற்பட்ட பலத்த எதிர்ப்பை அடுத்து ஆறுமாத ஆட்சியின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.
1916 – முதலாம் உலகப் போர்: வடக்கு இலண்டனில் செருமானிய வான்கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது. பிரித்தானியாவில் வீழ்த்தப்பட்ட முதலாவது செருமனிய வான்கப்பல் இதுவாகும்.
1933 – சோவியத் ஒன்றியத்தின் அதி உயர் புள்ளியான பொதுவுடமை முனையை (7495 மீ உயர இசுமோயில் சொமோனி உச்சி, இன்றைய தஜிகிஸ்தான்) யெவ்கேனி அப்லாக்கொவ் எட்டினார்.
1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான செருமனியின் படையெடுப்பை அடுத்து பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன செருமனி மீது போர் தொடுத்தன. நேசப் படைகள் என்ற அமைப்பை அவர்கள் ஏற்படுத்தினர்.
1939 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் செருமனி மீது கடல்-வழித் தடையை ஏற்படுத்தின.
1941 – பெரும் இன அழிப்பு: அவுசுவிட்சு வதைமுகாமின் பாதுகாப்பு அதிகாரி கார்ல் பிரீட்சு சோவியத் போர்க்கைதிகள் மீது சைக்லோன் பி என்ற நச்சு வாயுவைப் பரிசோதித்தான்.
1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு ஆரம்பமானது. இதே நாளில் அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர், இத்தாலியத் தளபதி பீத்ரோ பாதொக்லியோ ஆகியோருக்கிடையில் இத்தாலி-நேசநாட்டுப் படைகள் இடையே போர் நிறுத்தம் மால்ட்டாவில் அரச கடற்படைப் போர்க்கப்பல் ஒன்றில் கையெழுத்திடப்பட்டது.
1944 – பெரும் இன அழிப்பு: நாட்குறிப்பாளர் ஆன் பிராங்க்கும் அவரது குடும்பமும் அவுஷ்விட்ஸ் வதை முகாமுக்கு புறப்பட்டனர். இவர்கள் மூன்று நாட்கள் கழித்து அங்கு வந்தடைந்தனர்.
1945 – சப்பான் மீதான சீனாவின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
1954 – மக்கள் விடுதலை இராணுவம் சீனக் குடியரசு-கட்டுப்பாட்டுப் பகுதியான கீமோய் தீவு மீது எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்தன. முதலாவது தைவான் நீரிணை நெருக்கடி ஆரம்பமானது.
1958 – தமிழ் மொழி சிறப்பு அமுலாக்க சட்டமூலம் இலங்கையின் மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[3]
1967 – சுவீடனில் இடது பக்க வாகன ஓட்டம் வலப்பக்கமாக ஒரே இரவில் மாற்றப்பட்டது.
1971 – கத்தார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1976 – அமெரிக்காவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்கி செவ்வாயின் மிகக் கிட்டவான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.
1981 – பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் அவையில் கொண்டு வரப்பட்டது.[4]
1987 – புருண்டி இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் சான்-பாப்டிஸ்ட் பகாசா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1997 – வியட்நாம் ஏர்லைன்சு விமானம் நோம் பென் விமான நிலையம் அருகே வீழ்ந்ததில் 64 பேர் உயிரிழந்தனர்.
2004 – பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்: உருசியாவின் வடக்கு ஒசேத்திய-அலனீயாவில் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வில் மொத்தம் 186 மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், தீவிரவாதிகள் உட்பட 385 பேர் கொல்லப்பட்டனர்.
2017 – வட கொரியா தனது ஆறாவதும், மிகவும் ஆற்றல் மிக்கதுமான அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.
இன்றைய தின பிறப்புகள்
1829 – அடோல்ஃப் ஃபிக், செருமானியக் கண்டுபிடிப்பாளர் (இ. 1901)
1856 – லூயிசு சலிவன், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (இ. 1924)
1891 – வி. ஏ. கந்தையா, இலங்கை அரசியல்வாதி (இ. 1963)
1940 – எதுவார்தோ காலியானோ, உருகுவே எழுத்தாளர் (இ. 2015)
1948 – லெவி முவனவாசா, சாம்பியாவின் 3வது அரசுத்தலைவர் (இ. 2008)
1948 – இலியூத்மிலா கராச்கினா, உக்ரைனிய வானியலாளர்
1951 – மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் 6வது அரசுத்தலைவர்
1957 – ஜக்கி வாசுதேவ், இந்திய ஞானி, யோகி
1963 – மால்கம் கிளாட்வெல், கனடிய ஊடகவியலாளர், திறனாய்வாளர்
1971 – கிரண் தேசாய், இந்திய-அமெரிக்க எழுத்தாளர்
1976 – விவேக் ஒபரோய், இந்தித் திரைப்பட நடிகர்
1984 – காரெட் ஹெட்லண்டின், அமெரிக்க நடிகர்
1988 – கனா மக்மால்பஃப், ஈரானிய இயக்குநர்
1992 – சாக்சி மாலிக், இந்திய மற்போர் வீராங்கனை
இன்றைய தின இறப்புகள்
1898 – முருகேச பண்டிதர், ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (பி. 1830)
1969 – ரிச்சர்ட் லயனல் ஸ்பிட்டெல், இலங்கை மருத்துவர், எழுத்தாளர் (பி. 1881)
1973 – சி. இலக்குவனார், தமிழகத் தமிழறிஞர் (பி. 1909)
1991 – பிராங்க் காப்ரா, இத்தாலிய-அமெரிக்க இயக்குநர் (பி. 1897)
1992 – ப. நீலகண்டன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர் (பி. 1916)
1994 – கே. எஸ். ராஜா, இலங்கை வானொலி அறிவிப்பாளர் (பி. 1942)
1999 – ஏ. சி. எஸ். ஹமீட், இலங்கை அரசியல்வாதி (பி. 1927)
1999 – இர. ந. வீரப்பன், மலேசிய எழுத்தாளர் (பி. 1930)
2010 – ராஜேஸ்வரி சாட்டர்ஜி, இந்திய அறிவியலாளர் (பி. 1922)
2014 – ஆ. ப. வெங்கடேசுவரன், இந்தியாவின் 14வது வெளியுறவுச் செயலர் (பி. 1930)
இன்றைய தின சிறப்பு நாள்
விடுதலை நாள் (கத்தார், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1971)