Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 4…!!

அக்டோபர் 4 கிரிகோரியன் ஆண்டின் 277 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 278 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 88 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

23 – சீனத் தலைநகர் சாங்கான் நகரை கிளர்ச்சிவாதிகள் கைப்பற்றி சூறையாடினர். இரண்டு நாட்களின் பின்னர் சீனப் பேரரசர் வாங் மாங் கொல்லப்பட்டார்.

1227 – மொரோக்கோ கலீபா அப்தல்லா அல்-அடில் படுகொலை செய்யப்பட்டார்.

1302 – பைசாந்திய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது.

1511 – பிரான்சுக்கு எதிராக அரகொன், திருத்தந்தை நாடுகள், வெனிசு ஆகியன இணைந்து புனித முன்னணியை உருவாக்கின.

1537 – மெத்தியூ விவிலியம் எனப்படும் முதலாவது முழுமையான ஆங்கில விவிலிய நூல் அச்சிடப்பட்டது.

1582 – கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக அக்டோபர் 15 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.

1636 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் இராணுவம் புனித உரோமைப் பேரரசு, சாக்சனி இராணுவத்தை விட்சுடொக் சமரில் தோற்கடித்தது.

1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிலடெல்பியாவின் ஜெர்மண்டவுன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஜார்ஜ் வாசிங்டனின் படைகளை வில்லியம் ரோவின் பிரித்தானியப் படைகள் தோற்கடித்தன.

1824 – மெக்சிகோ குடியரசு ஆகியது.

1830 – பெல்ஜியம் நெதர்லாந்து நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாகியது.

1853 – கிரிமியப் போர்: உதுமானியப் பேரரசு உருசியா மீது போர் தொடுத்தது.

1883 – ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் விரைவுத் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1918 – அமெரிக்காவில் நியூ செர்சியில் ஷெல் கம்பனியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா சொலமன் தீவுகளைக் கைப்பற்றியது.

1957 – பண்டா – செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக சிங்கள இனவாதிகள் கண்டிக்கு நடைப்பயணம் நடத்தினர்.

1957 – புவியைச் சுற்றி வந்த முதலாவது செயற்கைக்கோள் என்ற சாதனையை சோவியத் ஒன்றியத்தின் இசுப்புட்னிக் 1 ஏற்படுத்தியது.

1959 – லூனா 3 விண்ணுக்கு ஏவப்பட்டது. இது சந்திரனைச் சுற்றி வந்து அதன் தொலைவுப் படத்தை பூமிக்கு அனுப்பியது.

1960 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் விமானம் ஒன்று பறவையினால் தாக்கப்பட்டதை அடுத்து வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 72 பேரில் 62 பேர் உயிரிழந்தனர்.

1963 – கியூபா, எயிட்டி ஆகிய நாடுகளைத் சூறாவளி புளோரா தாக்கியதில் 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1966 – பசூட்டோலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று லெசோத்தோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1985 – கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை நிறுவப்பட்டது.

1992 – மொசாம்பிக்கின் 16 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1992 – ஆம்ஸ்டர்டாம் நகரில் குடியிருப்பு மனைகள் மீது விமானம் ஒன்று மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.

1993 – உருசியத் தலைவர் போரிசு யெல்ட்சினுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தாங்கிகள் நாடாளுமன்றத்தின் மீது குண்டுகளை வீசின.

1997 – ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரிய வங்கிக் கொள்ளை வட கரொலைனாவில் இடம்பெற்றது. 17.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இவற்றில் 95 விழுக்காடு பணம் திரும்பப் பெறப்பட்டது.

2001 – சைபீரியாவில் விமானம் ஒன்றை உக்ரைனின் ஏவுகணை தாக்கியதில் விமானம் கருங் கடலில் வீழ்ந்து 78 பேர் உயிரிழந்தனர்.

2003 – இசுரேலில் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – விக்கிலீக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய தின பிறப்புகள்

1542 – ராபர்ட் பெல்லார்மின், இத்தாலியப் புனிதர் (இ. 1621)

1840 – விக்தர் நோர், செருமானிய-உருசிய வானியலாளர் (இ. 1919)

1884 – சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், எழுத்தாளர் (இ. 1925)

1895 – பஸ்டர் கீடன், அமெரிக்கத் திரைப்பட நடிகர். இயக்குநர் (இ. 1966)

1904 – திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (இ. 1932)

1911 – ஏ. எம். ஏ. அசீஸ், இலங்கை கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1973)

1916 – வித்தாலி கீன்ஸ்புர்க், நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (இ. 2009)

1918 – கெனிச்சி புகுயி, நோபல் பரிசு பெற்ற சப்பானிய வேதியியலாளர் (இ. 1998)

1923 – சார்ள்டன் ஹெஸ்டன், அமெரிக்க நடிகர் (இ. 2008)

1926 – வி. மாணிக்கவாசகம், மலேசிய அரசியல்வாதி

1926 – அப்துல் சமது, தமிழக அரசியல்வாதி (இ. 1999)

1928 – ஆல்வின் டாப்லர், செருமானிய-அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2016)

1930 – அனிருத் லால் நகர், இந்தியப் பொருளியலாளர் (இ. 2014)

1931 – பேசில் ட’ஒலிவேரா, தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர், (இ. 2011)

1936 – கிறிஸ்தோபர் அலெக்சாண்டர், ஆத்திரியக் கட்டடக் கலைஞர்

1938 – குர்த் வியூத்ரிச், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து வேதியியலாளர்

1941 – மணிசங்கர் அய்யர், இந்திய அரசியல்வாதி

1942 – ரி. ராஜகோபால், இலங்கையின் மேடை, வானொலி நடிகர்

1975 – சங்கவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1989 – டகோட்டா ஜோன்சன், அமெரிக்க நடிகை

இன்றைய தின இறப்புகள்

1226 – அசிசியின் பிரான்சிசு (பி. 1182)

1582 – அவிலாவின் புனித தெரேசா, எசுப்பானியப் புனிதர் (பி. 1515)

1669 – ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (பி. 1606)

1904 – பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி, விடுதலைச் சிலையை வடிவமைத்த பிரான்சியச் சிற்பி (பி. 1834)

1904 – கார்ல் பேயர், ஆத்திரிய வேதியியலாளர் (பி. 1847)

1947 – மேக்ஸ் பிளாங்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1858)

1972 – சேனரத் பரணவிதான, இலங்கை தொல்லியலாளர், கல்வெட்டியலாளர் (பி. 1896)

1982 – கோபால் சுவரூப் பதக், இந்தியாவின் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் (பி. 1896)

1986 – சரளாதேவி, இந்திய சுதந்திர இயக்க செயற்பாட்டாளர், பெண்ணியவாதி, எழுத்தாளர் (பி. 1904)

1992 – எர்பர்ட் தம்பையா, இலங்கை நீதிபதி (பி. 1926)

1998 – சாலை இளந்திரையன், தமிழகத் தமிழறிஞர், திறனாய்வாளர், சொற்பொழிவாளர், அரசியற் செயற்பாட்டாளர், தமிழ்த் தேசியவாதி (பி. 1930)

2009 – பசவ பிரேமானந்த், கேரளப் பகுத்தறிவாளர் (பி. 1930)

2011 – ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்க கணினி அறிவியலாளர், உணரறிவியல் அறிஞர் (பி. 1927)

2013 – வோ இங்குயென் கியாப், வியட்நாமிய இராணுவத் தளபதி, அரசியல்வாதி (பி. 1911)

இன்றைய தின சிறப்பு நாள்

விடுதலை நாள் (லெசோத்தோ, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966)

உலக விலங்கு நாள்

உலக விண்வெளி வாரம் ஆரம்பம் (அக். 4 – 10)

Categories

Tech |