இன்றைய தின நிகழ்வுகள்
1675 – பிளைமவுத் குடியேற்ற ஆளுநர் யோசியா வின்சுலோ நரகான்செட் பழங்குடியினருக்கு எதிரான போரில் குடியேற்ற இராணுவத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார்.
1795 – ஐந்து நபர்களைக் கொண்ட புரட்சி அரசு பிரான்சில் நிறுவப்பட்டது.
1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரிசியசு சென்றனர்.
1868 – நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது.
1868 – இலங்கையில் சப்ரகமுவாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.[1]
1889 – வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா ஆகிய குடியேற்றங்கள் ஐக்கிய அமெரிக்காவின் 39வது, 40வது மாநிலங்களாக முறையே இணைந்தன.
1899 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவில் பூர்கள் பிரித்தானியர்கள் வசம் இருந்த லேடிசிமித் பகுதியை 118 நாட்கள் பிடித்து வைத்திருந்தனர்.
1912 – பல்கேரியா உதுமானியப் பேரரசை லூல் பர்காசு சமரில் தோற்கடித்தது.
1914 – முதலாம் உலகப் போர்: உருசியா உதுமானியப் பேரரசுடன் போரை ஆரம்பித்தது. இதனை அடுத்து தார்தனெல்சு நீரிணை மூடப்பட்டது.
1917 – உருசியப் புரட்சியை முன்னெடுக்க பெத்ரோகிராத் சோவியத்தின் இராணுவ புரட்சிச் செயற்குழு தனது முதலாவது கூட்டத்தைக் கூட்டியது.
1917 – பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் ஆர்தர் பால்போர் வெளியிட்ட பிரகடனத்தில் யூதர்களுக்கு பாலத்தீன நிலத்தில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது.
1920 – அமெரிக்காவில் பென்சில்வேனியா, பிட்சுபர்கில் முதலாவது வணிக-நோக்கு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.
1936 – பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது.
1936 – கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.
1949 – இடச்சு-இந்தோனேசிய வட்டமேசை மாநாடு முடிவடைந்தது. நெதர்லாந்து இடச்சு கிழக்கிந்தியாவின் உரிமையை இந்தோனேசியாவுக்குக் கொடுத்தது.
1951 – சுயஸ் கால்வாய் வலயத்தில் கிளர்ந்த நெருக்கடி நிலையை சமாளிக்க 6,000 பிரித்தானியப் படையினர் எகிப்துக்கு அனுப்பப்பட்டனர்.[2]
1953 – பாக்கித்தான், பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1956 – அங்கேரியப் புரட்சி: அங்கேரிய நிலைமை குறித்து ஆராய சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் ஏனைய கம்யூனிச நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தார். சோசப்பு பிரோசு டிட்டோவ்சின் ஆலோசனைக்கு அமைய யானொசு காதார் அங்கேரியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டார்.
1956 – சூயெசு நெருக்கடி: இசுரேல் காசாக்கரையை ஆக்கிரமித்தது.
1963 – தெற்கு வியட்நாம் அரசுத்தலைவர் நியோ டின் டியெம் இராணுவப் புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார்.
1964 – சவூதி அரேபியாவின் மன்னர் சவூத் குடும்பப் புரட்சி ஒன்றை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் பைசல் மன்னரானார்.
1965 – வியட்நாம் போரில் நேப்பாம் குண்டுகள் வீசப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நண்பர்களின் சமய சமூகத்தைச் சேர்ந்த நார்மன் மொரிசன் என்பவர் பென்டகன் முன்னே தீக்குளித்து மாண்டார்.
1966 – கியூபாவைச் சேர்ந்த 123,000 பேருக்கு ஐக்கிய அமெரிக்காவில் நிரந்தர வதிவுரிமை வழங்கும் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது.
1974 – தென் கொரியத் தலைநகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் உயிரிழந்தனர்.
1984 – அமெரிக்காவில் 1962 இற்குப் பின்னர் முதல் தடவையாகப் பெண் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1999 – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பத்திரிகையாளருமான அற்புதராஜா நடராஜா கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[3]
2000 – பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்.
2006 – ஈழப்போர்: கிளிநொச்சி வைத்தியசாலை சுற்றவுள்ள பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2007 – இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
2007 – மெக்சிகோவின் கிரிஜல்வா ஆறு பெருக்கெடுத்து 50 ஆண்டுகளில் காணாத அளவு பாரிய வெள்ளம் ஏற்பட்டதில் 800,000 பேர் வீடற்றவர்களாகினர்.
இன்றைய தின பிறப்புகள்
1795 – ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அரசுத்தலைவர் (இ. 1849)
1815 – ஜார்ஜ் பூல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1864)
1833 – மகேந்திரலால் சர்க்கார், இந்திய மருத்துவர் (இ. 1904)
1861 – ஜூல்ஸ் கூலட், பிரான்சிய பூச்சியியலாளர் (இ. 1933)
1885 – த. வே. இராதாகிருட்டிணன், தமிழகத் தமிழறிஞர்
1885 – ஆர்லோவ் சேப்ளே, அமெரிக்க வானியலாளர் (இ. 1972)
1906 – பெங்கித் எட்லேன், சுவீடிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1993)
1929 – அமர் கோ. போசு, அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 2013)
1933 – பெ. சு. மணி, தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 2021)
1941 – அருண் சோரி, இந்திய அரசியல்வாதி, பத்திரிகையாளர்
1948 – ஜோதிலட்சுமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2016)
1965 – சாருக்கான், இந்திய நடிகர், தயாரிப்பாளர்
1966 – டேவிட் சுவிம்மர், அமெரிக்க நடிகர்
1969 – மதுஸ்ரீ, இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
1981 – ஈஷா தியோல், இந்திய நடிகை
1981 – மிட்செல் ஜோன்சன், ஆத்திரேலியத் துடுப்பாளர்
1987 – பாலா சரவணன், தமிழ்த் திரைப்பட நடிகர்
1990 – கெண்டல் ஸ்மித், அமெரிக்கப் பாடகர், நடிகர்
இன்றைய தின இறப்புகள்
1917 – ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்து வரலாற்றாளர், கலைக்களஞ்சியத் தொகுப்பாளர், பதிப்பாளர் (பி. 1858).
1950 – ஜார்ஜ் பெர்னாட் ஷா, நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர் (பி. 1856)
1966 – பீட்டர் டெபாய், நோபல் பரிசு பெற்ற டச்சு-அமெரிக்க வேதியியலாளர் (பி. 1884)
1978 – ஏ. பெரியதம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1899)
1988 – பி. தாணுலிங்க நாடார், தமிழக அரசியல்வாதி (பி. 1915)
1999 – கு. ச. ஆனந்தன், தமிழக சட்ட அறிஞர், நூலாசிரியர், திருக்குறள் ஆய்வாளர் (பி. 1934)
2004 – தியோ வன் கோ, டச்சு நடிகர், இயக்குநர் (பி. 1957)
2004 – சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான், அபுதாபி அமீரகத்தின் ஆட்சியாளர், ஐக்கிய அரபு அமீரகத்தின் சனாதிபதி (பி. 1918)
2007 – சு. ப. தமிழ்ச்செல்வன், விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் (பி. 1967)
2011 – சி. தர்மகுலசிங்கம், ஈழத்து எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1947)
இன்றைய தின சிறப்பு நாள்
இறந்தோர் நாள், (மெக்சிக்கோ)
இந்தியர் வருகை நாள் (மொரிசியசு)