Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 7…!!

திசம்பர் 7  கிரிகோரியன் ஆண்டின் 341 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 342 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 24 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 43 – உரோமை அரசியல்வாதி மார்க்கசு டலியாசு சிசெரோ படுகொலை செய்யப்பட்டார்.574 – பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் யசுட்டிசு இளைப்பாறியதை அடுத்து நாட்டின் தளபதி இரண்டாம் திபேரியசு கான்சுடன்டைன் பேரரசராக முடிசூடினார்.

1703 – பிரித்தானியாவைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1724 – போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டத்தாந்து சமயத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.

1787 – டெலவெயர் அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட முதலாவது மாநிலமாக இணைந்தது.

1815 – நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்த பிரான்சியத் தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1917 – முதலாம் உலகப் போர்: ஆத்திரியா-அங்கேரி மீது ஐக்கிய அமெரிக்கா போரை அறிவித்தது.

1922 – வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்திருக்க அந்நாட்டு நாடாளுமன்றம் பெரும்பான்மையாக வாக்களித்தது.

1932 – செருமனியில் பிறந்த சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அமெரிக்காவுக்கு வருவதற்கு நுழைவாணை வழங்கப்பட்டது.

1936 – ஆத்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர் யாக் பிங்கிள்ட்டன் அடுத்தடுத்த நான்கு தேர்வுப் போட்டிகளில் சதம் எடுத்து சாதனை புரிந்தார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, அங்கேரி, போலந்து, ருமேனியா ஆகியவற்றின் மீது கனடா போரை அறிவித்தது.

1941 – பேர்ள் துறைமுகத் தாக்குதல்: சப்பானியர் அவாயின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினர்.

1946 – அமெரிக்காவின் அட்லான்டா நகர உணவுச்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 119 பேர் உயிரிழந்தனர்.

1949 – சீன உள்நாட்டுப் போர்: சீனக் குடியரசின் அரசு நாஞ்சிங்கில் இருந்து தாய்பெய்க்கு மாறியது.

1966 – துருக்கியில் இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர்.

1971 – பாக்கித்தானில் நூருல் அமீன் பிரதமராகவும் சுல்பிக்கார் அலி பூட்டோவை உதவிப் பிரதமராகவும் கொண்ட கூட்டணி அரசை அதிபர் யாகியா கான் அறிவித்தார்.

1972 – அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் “அப்பல்லோ 17” சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இக்கலத்தின் விண்வெளி வீரர்கள் பூமியை விட்டு வெளியேறும் போது தி புளூ மார்பிள் புகைப்படத்தை எடுத்தனர்.

1975 – கிழக்குத் தீமோரை இந்தோனீசியா முற்றுகையிட்டது.

1982 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் முதல் தடவையாக ஊசிமருந்து ஏற்றப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

1983 – எசுப்பானியாவில் மாட்ரிட் நகரில் இரண்டு விமானங்கள் மோதியதில் 93 பேர் உயிரிழந்தனர்.

1987 – கலிபோர்னியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் தனது முன்னாள் முதலாளியையும் விமான ஓட்டியையும் சுட்டுக் கொன்றபின் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான். இதனால் விமானம் தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 43 பேரும் உயிரிழந்தனர்.

1988 – ஆர்மீனியாவில் 6.8 அளவு நிலநடுக்கத்தில் ஏற்பட்டதில் 25,000 பேர் கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1988 – யாசர் அரபாத் இசுரேலைத் தனிநாடாக அங்கீகரித்தார்.

1995 – கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.

2015 – சப்பானின் விண்கலம் அக்காத்சுக்கி வெள்ளிக் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.

2016 – பாக்கித்தான் உள்ளூர் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 47 பேர் உயிரிழந்தனர்.

2017 – ஆத்திரேலியாவில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

இன்றைய தின பிறப்புகள்

903 – அல் சுஃபி, பாரசீக வானியலாளர் (இ. 986)1542 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (இ. 1587)

1849 – பொன்னம்பலம் குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், அரசியல்வாதி (இ. 1906)

1883 – செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி, சோவியத்-உருசிய வானியலாளர் (இ. 1953)

1905 – ஜெரார்டு குயூப்பர், இடச்சு-அமெரிக்க வானியலாளர் (இ. 1973)

1926 – கே. ஏ. மதியழகன், தமிழக அரசியல்வாதி (இ. 1983)

1928 – நோம் சோம்சுக்கி, அமெரிக்க மொழியியலாளர்

1929 – ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (இ. 2014)

1932 – ரோஸ்மேரி ரோஜர்ஸ், அமெரிக்க ஊடகவியலாளர்

1939 – எல். ஆர். ஈஸ்வரி, தமிழகத் திரைப்படப் பின்னணிப் பாடகி

1993 – சுரபி தென்னிந்திய திரைப்பட நடிகை

இன்றைய தின இறப்புகள்

கிமு 43 – சிசெரோ, உரோமை மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. கிமு 106)283 – யுட்டீக்கியன் (திருத்தந்தை)

1782 – ஐதர் அலி, மைசூர் மன்னர் (பி. 1720)

1912 – ஜார்ஜ் ஓவார்டு டார்வின், ஆங்கிலேய வழக்கறிஞர், வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1845)

1952 – பாரெசுட்டு இரே மவுள்டன், அமெரிக்க வானியலாளர் (பி. 1872)

1979 – சிசிலியா பேய்னே கபோசுச்கின், ஆங்கிலேய-அமெரிக்க வானியலாளர் (பி. 1900)

1984 – நிகோலாய் இமானுவேல், உருசிய வேதியியலாளர் (பி. 1915)

1985 – றொபேட் கிறேவ்ஸ், ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1895)

2006 – பத்மநாதன் இராமநாதன், இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், நீதிபதி (பி. 1932)

2009 – வை. அநவரத விநாயகமூர்த்தி, ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர் (பி. 1923)

2010 – பான் இயூ தெங், மலேசிய மனித உரிமை செயற்பாட்டாளர் (பி. 1942)

2011 – வி. பி. சிங்காரவேலு, தமிழக அரசியல்வாதி (பி. 1959)

2016 – சோ, தமிழக நடிகர், பத்திரிக்கையாளர் (பி. 1934)

இன்றைய தின சிறப்பு நாள்

தேசிய வீரர்கள் நாள் (கிழக்குத் திமோர்)கொடி நாள் (இந்தியா)

மரியாவின் அமல உற்பவம் விழா

பேர்ள் துறைமுக நினைவு நாள் (ஐக்கிய அமெரிக்கா)

Categories

Tech |